இந்த பெயரை நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க.! பட்ஜெட்ல பெஸ்ட் 5ஜி போனா மாறப்போகுது.!

|

Samsung Galaxy A14 5G விரைவில் இந்தியாவில் கிடைக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனம் தனது புதிய பட்ஜெட் 5G ஸ்மார்ட்போனை இந்தியாவிலும் பிற சந்தைகளிலும் இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ 14 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் முழு சிறப்பம்ச விபரங்கள் தற்போது விலையுடன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதைப் பற்றி முழுதாக பார்க்கலாம்.

Samsung Galaxy A14 5G ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் ரெடி!

Samsung Galaxy A14 5G ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் ரெடி!

சாம்சங் நிறுவனம் இன்னும் இந்த Samsung Galaxy A14 5G போனின் வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், இந்த புதிய பட்ஜெட் பிரைஸ் Samsung Galaxy A14 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் என்ன விலையில் எதிர்பார்க்கலாம். காத்திருந்து வாங்க இது நல்ல போன் தானா? இதில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் பேக் செய்யப்பட்டுள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி S22 போல பிரத்தியேக டிசைன்

சாம்சங் கேலக்ஸி S22 போல பிரத்தியேக டிசைன்

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் இந்தியாவில் நுழையத் தவறிய Samsung Galaxy A13 5G ஸ்மார்ட்போனின் வாரிசாக அறிமுகப்படுத்தப்படும். சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி வடிவமைப்பில் சாம்சங் சில சிறிய மாற்றங்களைச் செய்திருப்பது போல தெரிகிறது. சாம்சங் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போனைப் போலவே தட்டையான பேசல்லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த வீட்டிற்கு ஒட்டுமொத்த வீட்டிற்கு "1" Jio பிளான்.! 17 OTT பலன் இலவசம்.! 3TB டேட்டாவுடன் இன்னும் ஏராளம்.!

Samsung Galaxy A14 5G சிறப்பம்சம் மற்றும் விலை என்ன?

Samsung Galaxy A14 5G சிறப்பம்சம் மற்றும் விலை என்ன?

இந்த Samsung Galaxy A14 5G சாதனம் 6.5' இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் ஆக்டா-கோர் Mediatek MT6765 Helio P35 சிப்செட் போன்ற சில அற்புதமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இது 6GB RAM உடன் 64 GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது மல்டி டாஸ்கிங் மற்றும் அதிக பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 25,872 ஆக இருக்க வாய்ப்புள்ளது என்று சமீபத்திய லீக் தகவல் குறிப்பிடுகிறது. அடுத்த ஆண்டில் இந்த சாதனம் ஆன்லைன் வழியாக வாங்க கிடைக்கும்.

SBI வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்.! இதை செய்யாதீங்க.! மீறினால் சிக்கல் - வங்கி எச்சரிக்கை.!SBI வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்.! இதை செய்யாதீங்க.! மீறினால் சிக்கல் - வங்கி எச்சரிக்கை.!

Samsung Galaxy A14 5G இந்தியாவில் எப்போது அறிமுகம்?

Samsung Galaxy A14 5G இந்தியாவில் எப்போது அறிமுகம்?

Samsung Galaxy A14 5G ஜப்பானில் நவம்பர் 27 , 2022 அன்று ( அநேகமாக ) வெளியிடப்படும் என ஊகிக்கப்படுகிறது. இந்தியாவின் BIS தளத்திலும் இந்த ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளதால், இந்த ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 5000mah கொண்ட பாஸ்ட் சார்ஜிங் பேட்டரி உடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதார் தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! எல்லாரும் உடனே நோட் பண்ணுங்க.!ஆதார் தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! எல்லாரும் உடனே நோட் பண்ணுங்க.!

Samsung Galaxy A14 5G கேமரா அம்சம்

Samsung Galaxy A14 5G கேமரா அம்சம்

Samsung Galaxy A14 5G ஸ்மார்ட்போனில் பின்புறம் குவாட் கேமரா அமைப்பு இருப்பதாக கூறப்படுகிறது. யதார்த்தமான படங்களைக் கிளிக் செய்வதற்கு இது 48MP + 5MP + 2MP + 2MP கேமராக்களைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், Samsung Galaxy A14 5G சாதனம் ஆனது 8MP முன்பக்க செல்பி கேமராவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் 4 கேமராவுடன் 5ஜி ஒரு நல்ல விருப்பம் தான்.

இந்தியாவிடம் சேட்டையை காட்டிய மஸ்க்.! Twitter Blue இந்திய விலை என்ன தெரியுமா? செஞ்சுட்டார்.!இந்தியாவிடம் சேட்டையை காட்டிய மஸ்க்.! Twitter Blue இந்திய விலை என்ன தெரியுமா? செஞ்சுட்டார்.!

பட்ஜெட் விலையில் பெஸ்ட் 5ஜி போனாக மாறப்போகிறது.!

பட்ஜெட் விலையில் பெஸ்ட் 5ஜி போனாக மாறப்போகிறது.!

இந்த சாதனம் ஆண்ட்ராய்டு v1 இயங்குதளத்துடன் வரும் என்றும், அவுட் ஆப் தி பாக்சில் இது ஆண்ட்ராய்டு 13 ஐ ஆதரிக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய Samsung Galaxy A14 5G டிவைஸ் பிளாக், வைட், ப்ளூ, ரெட் ஆகிய வண்ணங்களில் வெளிவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் சிறப்பாகச் செயல்படும் ஸ்மார்ட்ஃபோனைத் தேடுகிறீர்கள் என்றால், சாம்சங் கேலக்ஸி A14 5G உங்களுக்கான சரியான டிவைஸ் ஆகும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A14 5G Budget Price Smartphone Launch Detail with Specifications and Features

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X