ரகம் ரகமா., ஒன்னு இல்ல மொத்தம் நான்கு- சாம்சங் கேலக்ஸி ஏ13, ஏ23 கேலக்ஸி எம்33, எம்23: விலை இதோ!
சாம்சங்கின் சமீபத்திய ஸ்மார்ட்போன் ஒரே மாதிரியான டிஸ்ப்ளே காட்சிகள் மற்றும் 50 மெகாபிக்சல் கேமராக்கள் உடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ13, கேலக்ஸி ஏ23, கேலக்ஸி எம்33 மற்றும் கேலக்ஸி எம்23 ஆகிய ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அனைத்து ஸ்மார்ட்போன்களும் 6.6 இன்ச் டிஎஃப்டி முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் பொருத்தப்பட்டுள்ளன. கேலக்ஸி எம்33, கேலக்ஸி ஏ23 மற்றும் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போன்கள் குவாட் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. கேலக்ஸி எம்23 மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 50 மெகாபிக்சல் முதன்மை கேமராக்களுடன் வருகின்றன. ஏ சீரிஸ் போன்கள் இரண்டும் வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகள் மிகவும் ஒத்ததாக இருக்கிறது. கேலக்ஸி எம்33 குவார்டெட்டின் அதிகபட்ச 6000 எம்ஏஎச் பேட்டரி திறனை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ13
சாம்சங் கேலக்ஸி ஏ13 டச்சு விற்பனையாளரின் தளத்தில் காணப்பட்டது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.15,800 ஆக இருக்கிறது. அதேபோல் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.17,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் விற்பனை குறித்து எந்த தகவலும் நிறுவனம் தெரிவிக்கவில்லை.

சாம்சங் கேலக்ஸி ஏ13 விவரக்குறிப்புகள்
சாம்சங் கேலக்ஸி ஏ13 ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஒன்யுஐ 4.1ஐ இயக்குகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் டிஎஃப்டி இன்பினிட்டி வி முழு எச்டி ப்ளஸ் 1,080x2,408 பிக்சல்கள் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்போடு வருகிறது. சாம்சங் எஸ்ஓசி-ன் சரியான மாதிரி வெளியிடப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா 5 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் இரட்டை 2 எம்பி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஏ13 ஆனது 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. சாம்சங் க்னாக்ஸ் பாதுகாப்பு மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது பிளாக், ப்ளூ, பீச் மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ23 சிறப்பம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி ஏ13 போன்றே சாம்சங் கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போனும் அதே டிஸ்ப்ளே, கேமரா, பேட்டரி மற்றும் வண்ண விருப்பங்களை கொண்டிருக்கிறது. சாம்சங் ஏ23 ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு 128 ஜிபி உள்சேமிப்பு என இரண்டு சேமிப்பக விருப்பங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்33 சிறப்பம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி எம்33 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஒன்யுஐ 4.1 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் டிஎஃப்டி வி முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. சாம்சங் ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே இதன் எஸ்ஓசி விவரங்களும் வெளியிடப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போனும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமரா அமைப்போடு 6000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு வருகிறது. சாம்சங் கேலக்ஸி எம்23 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகளை சாம்சங் கேலக்ஸி எம்23 கொண்டிருக்கிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. மூன்று பின்புற கேமரா அமைப்போடு இது வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது.


Click it and Unblock the Notifications