நன்றிப்பா ஆண்டவா.! பட்ஜெட் Samsung போனிற்கு வந்த Android 14 அப்டேட்.. எந்த போன்? எந்த மாடல்?
சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் (Smartphone) சாதனங்களில் சில குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டும் ஆண்ட்ராய்டு 14 அப்டேட்டை (Android 14 Update) வழங்கி வருகிறது. அந்த வரிசையில், இப்போது பட்ஜெட் விலை சாம்சங் போனிற்கும் இந்த அப்டேட் வெளியாகியுள்ளது.
சாம்சங் ஸ்மார்ட்போன் வரிசையில் பட்ஜெட் பிரெண்ட்லி சாதனமாக பார்க்கப்பட்ட மாடல் தான் சாம்சங் கேலக்ஸி A13 4ஜி (Samsung Galaxy A13 4G) மாடல். இந்த ஸ்மார்ட்போன் சாதனம் பட்ஜெட் செக்மென்ட் பிரிவில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை மட்டுமின்றி உலக சந்தையிலும் அதிக வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 3 வாரங்களுக்கு முன்பு, சாம்சங் நிறுவனம் இதன் 5ஜி வேரியண்ட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 14 அப்டேட்டை வெளியிட்டது என்பது கவனிக்கத்தக்கது. இப்போது, ஒருவழியாக அப்டேட் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகத்தில் இருந்த சாம்சங் கேலக்ஸி A13 4ஜி (Samsung Galaxy A13 4G) பயனர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி A13 4ஜி (Samsung Galaxy A13 4G):
இரண்டு திட்டங்களுக்கு முன்பு, சாம்சங் நிறுவனம் அதன் சூப்பர் கில்லர் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சாதன வரிசையுடன் சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் (Samsung Galaxy S24 Series) மாடல்களை அறிமுகம் செய்தது. இதன் கீழ் நிறுவனம், சாம்சங் கேலக்ஸி S24, சாம்சங் கேலக்ஸி S24 பிளஸ் (Samsung Galaxy S24 Plus), சாம்சங் கேலக்ஸி S24 அல்ட்ரா என 3 மாடல்களை அறிமுகம் செய்தது.
இந்த ஸ்மார்ட்போன் சாதனங்கள் 7 வருட சாப்ட்வேர் அப்டேட் ஆதரவுடன் வருகிறது என்று நிறுவனம் அறிவித்தது. 7 வருட சாப்ட்வேர் உத்தரவாதம் என்பது இன்றய காலகட்டத்தில் பெரிய விஷயம் தான். ஆனால், சாம்சங் கேலக்ஸி A13 4ஜி சாதனத்திற்கு இத்தனை ஆண்டுகள் அப்டேட் கிடைக்காது. இதன் இறுதி அப்டேட் தான் தற்போது ஆண்ட்ராய்டு 14 உடன் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A13 4ஜி போனிற்கு ஆண்ட்ராய்டு 14 அப்டேட் (Samsung Galaxy A13 4G Phone Gets Android 14 Update):
இந்த ஆண்டில் சாம்சங் கேலக்ஸி A13 4ஜி ஸ்மார்ட்போன் சாதனத்திற்கு மொத்தம் 2 அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஆண்ட்ராய்டு 14 அப்டேட்டாகும். மற்றொன்று சாம்சங் வழங்கும் புதிய ஒன் UI 6.0 (One UI 6.0) அப்டேட் என்று நிறுவனம் உத்தரவாதம் வழங்கியுள்ளது. இந்த இரண்டு அப்டேட் உடன் ஆண்ட்ராய்டு 14 குடும்பத்துடன் சேரும் பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடலாக சாம்சங் கேலக்ஸி A13 4ஜி மாறியுள்ளது.
தற்போது முதற்கட்டமாக இந்த ஆண்ட்ராய்டு 14 அப்டேட் கொரியன் பயனர்களுக்கு கிடைத்துள்ளது. இது ஃபிரேம்வேர் வெர்ஷன் A135NKSU5DWL5 மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டை பெற சாம்சங் கேலக்ஸி A13 4ஜி (Samsung Galaxy A13 4G) பயனர்கள், அவர்களுடைய மொபைல் செட்டிங்ஸ் சென்று, Settings > Software update என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது உங்களுக்கு புதிய அப்டேட் பற்றிய தகவல்கள் காண்பிக்கப்படும். அப்டேட் கிளிக் செய்தால், உங்கள் போன் அப்டேட் செய்யப்படும். இந்த புதிய அப்டேட் மூலம் சாம்சங் கேலக்ஸி A13 4ஜி ஸ்மார்ட்போனின் திறன் மேம்படும் மற்றும் ஸ்மார்ட்போன் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இது விரைவில் இந்தியாவிலும் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








