Home
News

சாம்சங் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு நற்செய்தி.! என்ன தெரியுமா?

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த One UI 3.1 அப்டேட்-ஐ வழங்கியுள்ளது. இந்த அப்டேட் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

சாம்சங் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு நற்செய்தி.!

தற்போது பனாமாவில் உள்ள சாம்சங் கேலக்ஸி ஏ11 பயனர்களுக்கு மட்டுமே இந்த அப்டேட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் மற்ற நாடுகளில் இருக்கும் பயனர்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

இந்த கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனில் 6.4-இன்ச் இன்பினிட்டி-ஒ-டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 720 x 1560 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு நற்செய்தி.!

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது.

கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி அல்ட்ராவைடு சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பலவேறு வசதிகளைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் வசதி மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு நற்செய்தி.!

சாம்சங் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்கது.மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வசதி உள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ்,4ஜி வோல்ட்இ, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் சிவப்பு போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A11 Received Android 11 update: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X