Home
News

அதிருது மார்க்கெட்.. ரூ.14,999 விலை.. 1TB மெமரி, 12GB ரேம், 25W சூப்பர் பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

வெறும் ரூ.14,999 விலை புள்ளியில், 12GB ரேம், 1TB மெமரி, HD+ டிஸ்பிளே, 50MP ட்ரிபிள் கேமரா, 5000 mAh பேட்டரி, 25W சூப்பர்-ஃபாஸ்ட் சார்ஜிங் என்ற பல மிரட்டலான அம்சங்களுடன் Samsung Galaxy A05s போன் அறிமுகமாகியுள்ளது.

சாம்சங் நிறுவனம் அதன் பிரபலமான சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் (Samsung Galaxy A) வரிசையில் மேலும் புதிதாக ஒரு ஸ்மார்ட்போன் சாதனத்தைச் சேர்த்துள்ளது. இது சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் (Samsung Galaxy A05s) என்ற பெயருடன் அறிமுகமாகியுள்ளது. சாம்சங்கின் கேலக்ஸி இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் செக்மென்ட் பிரிவில் மிகவும் பவர்புல் சாதனமாக வெளிவந்துள்ளது.

அதிருது மார்க்கெட்.. ரூ.14,999 விலை.. 1TB மெமரி, 12GB ரேம், எந்த மாடல்

சரி, இந்த புதிய சாம்சங் கேலக்ஸி A தொடர் சாதனத்தில் என்னென்ன அம்சங்களை நிறுவனம் வழங்கியுள்ளது என்று பார்க்கலாம் வாங்க. பட்ஜெட் செக்மென்ட்டில் பெஸ்டான ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்ற என்னை இருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த இது சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் சாதனத்தை மிஸ் செய்யவே கூடாது. இதன் சிறப்பே, இந்த விலையில் இதில் 6.7 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.

50MP பிரைமரி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 689 சிப்செட் (Qualcomm Snapdragon 680) போன்ற அம்சங்களுடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஆனது 6nm செயல்முறை தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்னாப்டிராகன் (Snapdragon) சிப்செட் மேம்பட்ட சக்தி மற்றும் வேகத்தை வழங்குகிறது. தடையற்ற மல்டிடாஸ்கிங் மற்றும் ஸ்மூத் அனுபவத்தை லேக் ஃப்ரீ பயனர் அனுபவத்துடன் வழங்குகிறது.

இதில் உள்ள பெரிய பிளஸ் பாயிண்ட்டே, இந்த ஸ்மார்ட்போன் ரேம் பிளஸ் அம்சத்துடன் உடன் வருகிறது. இதன் மூலம் உங்களுக்கு 12 ஜிபி ரேம் வரை கிடைக்கிறது. இந்த Samsung Galaxy A05s மொபைல் சாம்சங்கின் சிக்னேச்சர் கேலக்ஸி வடிவமைப்பை முன்னெடுத்துச் செல்கிறது. இது லைட் க்ரீன் (Light Green), லைட் வயலட் (Light Violet) மற்றும் பிளாக் (Black) ஆகிய மூன்று வண்ணங்களில் வருகிறது.

அதிருது மார்க்கெட்.. ரூ.14,999 விலை.. 1TB மெமரி, 12GB ரேம், எந்த மாடல்

சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் சிறப்பம்சம் (Samsung Galaxy A05s specifications):
சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஆனது 6.71' இன்ச் முழு HD+ 90Hz டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 90Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது. இந்த சாதனத்தின் கேமராவைப் பொறுத்தவரை, 50MP மெயின் ஷூட்டருடன் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த போனின் கேமரா குறைந்த வெளிச்சத்தில் கூட துல்லியமான புகைப்படங்களை எடுக்க அனுமதிக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் இன் 50MP கேமரா உடன் 2MP டெப்த் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் கேமராக்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா லைவ் ஃபோகஸ் போட்டோகிராபியை ஆதரிக்கின்றன. சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் போனின் முன்பக்கத்தில், 13MP கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

இது இரண்டு நாட்கள் வரை நீடிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. மேலும், இந்த சாதனம் 25W வரை சூப்பர்-ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் (Samsung Galaxy A05s) ஸ்மார்ட்போன் சாதனம் 4 வருட செக்யூரிட்டி அப்டேட் மற்றும் இரண்டு வருட OS அப்டேட் மற்றும் மேம்படுத்தல்களுடன் வரும். சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் போனின் விலை பற்றி பார்க்கையில், இது ரூ.14,999 புள்ளியில் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் சாதனம் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ.14,999 ஆகும். சிறப்புச் சலுகையாக, சாம்சங் ஃபைனான்ஸ் + இயங்குதளத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் நோ-காஸ்ட் EMI உடன் வாங்கலாம். இது மாதத்திற்கு ரூ.1,275 முதல் EMI விருப்பங்களுடன் கிடைக்கும். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ.1,000 மதிப்புள்ள குறிப்பிட்ட கால அளவு கேஷ்பேக்கைப் பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A05s With 12GB RAM, 1TB Memory, 50MP Primary Camera Launched In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X