விலை, அம்சம் இதுதான்: விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ்!
சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் ஐரோப்பிய சந்தையில் கசிந்துள்ளது. இது கருப்பு, ப்ளூ மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

கேலக்ஜி ஏ03எஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி
குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் சாம்சங் நிறுவனம் விரைவில் இந்த போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஜி ஏ03எஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் எனவும் 2.30 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

விரைவில் இந்தியாவில் அறிமுகம்
சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போனானது சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ-தொடர் ஸ்மார்ட்போனாகும். இந்தியாவில் இந்த சாதனத்தை அறிமுகம் செய்ய நிறுவனம் தயாராகி வருகிறது. வெளியீட்டுக்கு முன்பாக, இந்த ஸ்மார்ட்போன் குறித்த சில தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாதனத்தின் விலை மற்றும் ஐரோப்பிய மார்க்கெட்டின் வண்ண விருப்ப மாறுபடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் விலை
டிப்ஸ்டர் சுதன்ஷூ 91 மொபைல்ஸ் உடன் இணைந்து ஐரோப்பாவில் வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் விலை 150 யூரோ அதாவது இந்திய மதிப்புப்படி ரூ.13,100 ஆக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒற்றை 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்புடன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற வேரியண்ட் விருப்பங்கள்
ஸ்மார்ட்போன் தொடங்கப்பட்டவுடன் இதன் மற்ற வேரியண்ட் விருப்பங்கள் தெரியவரும். கூடுதலாக டிப்ஸடரில் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் வெளிப்படுத்தியுள்ளது. வெளியான தகவலின்படி ஸ்மார்ட்போன் ப்ளூ, பிளாக் மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ03 எஸ் ஆதரவு
சாம்சங் கேலக்ஸி ஏ03 எஸ் ஆதரவு பக்கம் சாம்சங் இந்தியா இணையதளத்தில் நேரடியாக காணப்படுகிறது. வரவிருக்கும் சாம்சங் ஸ்மார்ட்போனுக்கான எந்த விவரங்களையும் இந்த ஆதரவு பக்கம் வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ03 எஸ் விவரக்குறிப்புகள்
இருப்பினும் சாம்சங் கேலக்ஸி ஏ03 எஸ் விவரக்குறிப்புகள் முன்னதாக வெளியான தகவல்கள் தெரிவிக்கிறது. ரெண்டர்களில் வெளியான தகவலின்படி இந்த ஸ்மார்ட்போனில் முன்புறத்தில் வாட்டர் டிராப் நாட்ச் வசதியோடு ஒற்றை செல்பி கேமரா இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் எல்இடி ஃபிளாஷ் உடன் மூன்று கேமரா இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாதுகாப்பு அம்சத்துக்கு பவர் பட்டனுடன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இருக்கிறது.

13 மெகாபிக்சல் முதன்மை கேமரா
கேலக்ஸி ஏ03 எஸ் ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் தீர்மானம் குறித்த தகவல் இல்லை. அதேபோல் கேமராவை பொறுத்தவரை இதில் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி, 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்த சாதனத்தில் 2.30GHz ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் உடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது. இணைப்பு ஆதரவுகளாக யூஎஸ்பி டைப்-சி போர்ட் இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications