உழைப்பாளர் தின ஸ்பெஷல்- சாம்சங் "ஃபேப் க்ராப் ஃபெஸ்ட்" இதோ: 60% வரை அட்டகாச தள்ளுபடி மற்றும் இலவசங்கள்!
Samsung 'Fab Grab Fest' விற்பனை மே 1 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த விற்பனையில் சாம்சங்.காம் மற்றும் சாம்சங் பிரத்யேக ஸ்டோர்களில் நீங்கள் திட்டமிட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள், டேப்கள், லேப்டாப்கள், டிவிகள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை மெகா சலுகைகள் மற்றும் கேஷ்பேக்குகள் உடன் வாங்கலாம். அதேபோல் சாம்சங் டிவிகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களுக்கு 60% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட பாகங்களுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சாம்சங் பிரத்யேக தள்ளுபடி சலுகை
சாம்சங் பிரத்யேகமாக இந்த தள்ளுபடி சலுகையை அறிவித்திருக்கிறது. சாம்சங் ஷாப் செயலி மூலமாக முதன்முறையா இந்த சாதனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக சாம்சங் டிவி மற்றும் டிஜிட்டல் சாதனங்களுக்கு ரூ.4500 வரை தள்ளுபடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஃபேப் கிராப் ஃபெஸ்ட் விற்பனை மே1 முதல் மே8 வரை
இந்தியாவின் மிகவும் நம்பகமான நுகர்வோர் மின்னணு மற்றும் ஸ்மார்ட்போன்கள் பிராண்டாக சாம்சங் திகழ்கிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஃபேப் கிராப் ஃபெஸ்ட் விற்பனையை நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த விற்பனையானது மே 1 முதல் மே 8 வரை நடைபெறுகிறது. இந்த விற்பனை தினங்களில் சாம்சங் டிஜிட்டல் சாதனங்கள், கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள், துணைக் கருவிகள் மற்றும் அக்சஸரிஸ் போன்ற சாதனங்களுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் மெகா சலுகைகள் மற்றும் சிறந்த கேஷ்பேக்களுடன் வாங்கலாம். இந்த அற்புதமான சலுகைகள் ஆனது சாம்சங்.காம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சாம்சங் பிரத்யேக கடைகளில் கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஃபிளாக்ஷிப் நியோ க்யூஎல்இடி டிவிகளுக்கு தள்ளுபடி
இந்த ஃபேப் கிராப் பெஸ்ட் விற்பனையில், வாடிக்கையாளர்கள் ஃபிளாக்ஷிப் நியோ க்யூஎல்இடி டிவிகள் மற்றும் கிரிஸ்டல் 4கே அல்ட்ரா எச்டி டிவிகள் போன்ற சாம்சங் டிவிகளை 60% வரை தள்ளுபடியுடனும், சாம்சங் டிஜிட்டல் சாதனங்களை 57% வரை தள்ளுபடியுடனும் பெறலாம். அதோடு சாம்சங் ஷாப் பயன்பாட்டில் சாதனங்கள் வாங்கும் முதல் வாடிக்கையாளர்களாக நீங்கள் இருந்தால் உங்களுக்கு ரூ.4500 வரை தள்ளுபடி கிடைக்கிறது.

ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் உள்ளிட்ட சாதனங்களுக்கு சலுகை
சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் உள்ளிட்ட சாதனங்கள் உட்பட பலவற்றுக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. அதேபோல் முதன்மை சாதனங்களாக கேலக்ஸி எஸ்22, கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி, கேலக்ஸி எம்32, கேலக்ஸி எஃப்22 உட்பட சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எம்53 5ஜி மற்றும் கேலக்ஸி எம்33 5ஜி உள்ளிட்ட சாதனங்களுக்கு 50%-க்கும் அதிகமான தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி புக்2 லேப்டாப் ஆனது 16% வரை தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

சாம்சங்.காம் மற்றும் சாம்சங் பிரத்யேக ஸ்டோர்களில் மட்டுமே
சாம்சங்.காம் மற்றும் சாம்சங் பிரத்யேக ஸ்டோர்களில் இருந்து சாதனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ போன்ற முன்னணி வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 20% வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. Fab Grab Fest-ல் சாம்சங் எக்ஸ்பீரின்ஸ் ஸ்டோர்கள் மற்றும் சாம்சங் ஷாப் ஆப்ஸ் முழுவதும் பல்வேறு சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எம்53, கேலக்ஸி எம்33 மற்றும் எஃப்23 சாதனங்கள் வங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டிராவல் அடாப்டர்கள் வழங்கப்படுகிறது. இதேபோல் பல்வேறு சாதனங்களுக்கும் இலவசங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

60% வரை தள்ளுபடி
சாம்சங் கேலக்ஸி எஸ்22, கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி, கேலக்ஸி எம்52 5ஜி, கேலக்ஸி எம்32, கேலக்ஸி எஃப் 22 உள்ளிட்ட மொபைல்களுக்கு 50% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கேலக்ஸி புக்2 லேப்டாப்களுக்கு 16% தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் டேப்லெட், அக்சஸரிஸ் உள்ளிட்டவைகளுக்கு 50% தள்ளுபடியும், சாம்சங் டிவிகளுக்கு 60% வரை தள்ளுபடியும் கூடுதலாக வங்கி சலுகைகளும் வாங்கப்படுகிறது. சாம்சங் சாதனங்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications