Home
News

வாட்ஸ்அப் செயலி மூலம் சேவை வழங்கும் சாம்சங்.!

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய அப்டேட்கள் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் சாம்சங் நிறுவனம் தனது வாடிக்கையாளர் சேவை மையத்தை வாட்ஸ்அப் செயலியில் வழங்க துவங்கி உள்ளது.

வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்

இந்த சேவை மூலம் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு சாம்சங் சாதனங்கள் பற்றிய சந்தேகங்களுக்கு வீட்டில்இருந்தபடியே விளக்கம் பெறமுடியும் என்று கூறப்படுகிறது.

செயலி மூலம் தொடர்பு

இந்த வாட்ஸ்அப் செயலி மூலம் தொடர்பு கொள்வோருக்கு ரிமோட் சப்போர்ட், லைவ் சாட், சாம்சங் வலைதளம் அல்லது யூடியூபில் இருக்கும் விளக்க வீடியோக்கள் கொண்டு விளக்கம் மற்றும் சேவை மைய உதவி வழங்கப்படும் என அந்நிறுவனம்சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

றும் புதிய சாதனங்களுக்கான டெமோ மற்றும் இன்ஸ்டாலேஷன் போன்ற சேவைகளை

சாம்சங் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள வாடிக்கையாளர்கள் சாம்சங் சப்போர்ட் நம்பர் 1800-5-7267864 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு எந்த சாம்சங் சாதனம் பற்றிகேள்விகள், சர்வீஸ் சென்டர் முகவரி, சரி செய்ய கொடுத்த சாதனத்தின் நிலை, புதிய சலுகைகள் மற்றும் புதிய சாதனங்களுக்கானடெமோ மற்றும் இன்ஸ்டாலேஷன் போன்ற சேவைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது சாம்சங்

அன்மையில் சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பை அறிவித்தது, அதைப் பற்றிய விரிவான தகவல்களைப் பார்ப்போம். சாம்சங்க கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போனானது பல்வேறு வகை சிறப்பம்சங்களோடு ரூ.1,08,999 விற்பனை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாம்சங் இசட் பிளிப் ஸ்மார்ட்போன்
முன்னதாக ரூ.1,15,999 என்ற விலையில் முன்னதாக விற்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.7000 விலைக்குறைக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனானது நுகர்வோருக்கு 18 மாதங்கள் வரை விலை இல்லாத இஎம்ஐ விருப்பங்களை வழங்குகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு மட்டும் இந்த சலுகை கிடைக்கிறது.

கேலக்ஸி இசட் பிளிப் சாதனத்தில்

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனத்தில் இரண்டு டிஸ்பிளே உள்ளது, அதன்படி இந்த சாதனத்தின் வெளிப்புறம் 1.06-இன்ச் AMOLED டிஸ்பிளே (300x116பிக்சல்) மற்றும் கொரில்லா கிளாஸ் 6 ஆதரவு இடம்பெற்றுள்ளது. பின்பு முழுமையாக 6.7-இன்ச் டைனமிக் AMOLED டிஸ்பிளே (2636x1080பிக்சல்) இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் 21:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில்FHD + ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 இசட் பிளிப் ஸ்மார்ட்போனில்

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போனில் 10எம்பி (f/2.4) செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா பற்றி பேசுகையில், 12எம்பி பிரைமரி லென்ஸ்+12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் வசதி கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது, மேலும் இதில் எச்டிஆர்10பிளஸ் ஆதரவு, 4கே யுஎச்டி ஆதரவு, ஏஐ தொழில்நுட்பம், எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு
வசதிகள் இவற்றுள் அடக்கம்.

3300எம்ஏஎச் இரட்

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனத்தில் 3300எம்ஏஎச் இரட்டை பேட்டரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 18வாட் சார்ஜிங் ஆதரவு
கொண்டு வெளிவருவதால் கண்டிப்பாக பயன்படுத்துவதற்கும் அருமையாக இருக்கும், சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

பிளாக், மிரர் பர்பில் மற்றும் மிர

நிறங்கள் மிரர் பிளாக், மிரர் பர்பில் மற்றும் மிரர் கோல்ட் போன்ற நிறங்களில் சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனம் விற்பனைக்கு வருகிறது. மேலும் மற்ற சாதனங்களை விட இந்த சாதனம் புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் சாதனம் ஸ்னாப்டிராகன் 855பிளஸ் 7என்எம் பிராசஸர், குவால்காம் ஆதரவைக் கொண்டுள்ளது,மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்கப்படுகிறது. இந்த சாதனத்தில் உங்களுக்கு கூடுதல்
சேமிப்பிடம் தேவைப்பட்டால், நீங்கள் சாம்சங் கிளவுட், ஒன்ட்ரைவ் அல்லது கூகிள் டிரைவ் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த போன் 183 கிராம் எடை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Samsung Extends WhatsApp Customers Support in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X