Home
News

கேலக்ஸி ஏ சீரிஸ் இருக்கா.. இனிமே ஒரே கிளிக் போதும்.. AI அசிஸ்டன்ட்.. எஸ் சீரிஸ்-க்கு அடுத்து ஏ சீரிஸ்!

சாம்சங் கேலக்ஸி எஸ்24, சாம்சங் கேலக்ஸி எஸ்25 போன்ற பிரீமியம் எஸ் சீரிஸ் மாடல்களில் மட்டுமே கிடைத்துவந்த சைடு பட்டன்/ஏஐ அசிஸ்டன்ட் அக்சஸ் இனிமேல் சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் (Samsung Galaxy A Series) மாடல்களிலும் கிடைக்க இருக்கிறது. இந்த அக்சஸ் எந்தெந்த மாடல்களில் கிடைக்க இருக்கிறது? எப்போது பயன்படுத்த கிடைக்க இருக்கிறது? விவரங்கள் இதோ.

சாம்சங் நிறுவனத்தின் எஸ் சீரிஸ் மாடல்களில் இருக்கும் சைடு பட்டன் மூலம் ஜெமினி ஏஐ அசிஸ்டன்ட்டை நேரடியாக அக்சஸ் செய்ய முடியும். இதன் மூலம் ஏஐ அசிஸ்டன்ட்டை நொடியில் அனுகவும், பயன்படுத்தவும் முடிந்தது. ஆனால், பிரீமியம் மாடல்களில் மட்டுமே கிடைப்பதால், மிட்-ரேஞ்ச் மாடல்களை வைத்திருக்கும் கஸ்டமர்கள் அதை எதிர்பார்த்து கொண்டிருந்திருந்தனர்.

கேலக்ஸி ஏ சீரிஸ் இருக்கா.. இனிமே ஒரே கிளிக் போதும்.. AI அசிஸ்டன்ட்!

அவர்களுக்கான அப்டேட் வந்துவிட்டது. கேலக்ஸி எஸ் சீரிஸ்களுக்கு (Galaxy S Series) அடுத்து கேலக்ஸி ஏ சீரிஸ்களுக்கும் சைடு பட்டன் மூலம் ஏஐ அசிஸ்டன்ட்டை அனுகும்படி அப்டேட் கொடுக்கப்பட இருக்கிறது என்று சாம்சங் எலக்ட்ரானிக்ஸ (Samsung Electronics) நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகவே, லேட்டஸ்ட் மாடல்கள் முதல் 2 வருடங்கள் பழைய மாடல்கள் வரையில் கிடைக்க இருக்கிறது.

எந்தெந்த மாடல்கள்? அவ்சம் இன்டலிஜென்ட்ஸ் (Awesome Intelligence) பீச்சர்களுடன் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி (Samsung Galaxy A56 5G), சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி (Samsung Galaxy A36 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ26 5ஜி (Samsung Galaxy A26 5G) மாடல்களில் முதலில் கிடைக்க இருக்கிறது. இதற்கு அடுத்து சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி, சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி மாடல்களில் கிடைக்க இருக்கிறது.

மேலும், சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி, சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி, சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி, சாம்சங் கேலக்ஸி ஏ25இ 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ24 ஆகிய மாடல்களிலும் இந்த பீச்சர்கள் கிடைக்க இருக்கிறது. அப்டேட்கள் மூலம் கொடுக்கப்பட இருப்பதால், அடுத்து வரும் அட்டேட்டுக்கு பிறகு இந்த பீச்சரை சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் பிரியர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.

கேலக்ஸி ஏ சீரிஸ் இருக்கா.. இனிமே ஒரே கிளிக் போதும்.. AI அசிஸ்டன்ட்!

இந்த ஏஐ அசிஸ்டன்ட் மூலம் வாய்ஸ் கமெண்ட் சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல கூகுளின் நோட்ஸ், மேப்ஸ், மெசேஜ் போன்ற ஆப்களையும் பயன்படுத்தவும் அதன் மூலம் டேட்டாக்களை அனுகவும் முடியும். இப்படி பல்வேறு ஏஐ பீச்சர்களை இனிமேல் சைடு பட்டன் மூலம் அக்சஸ் செய்து கொள்ள முடியும். சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி, கேலக்ஸி ஏ36 5ஜி, கேலக்ஸி ஏ26 5ஜி மாடல்கள் இதில் கொஞ்சம் ஸ்பெஷலாகும்.

ஏனென்றால், இந்த மாடல்களில் அவ்சம் இன்டலிஜென்ட்ஸ் பீச்சர்கள் கிடைக்கின்றன. சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search), ஏஐ செலெக்ட் (AI Select) போன்ற வழக்கமான பீச்சர்கள் மட்டுமல்லாமல், லேட்டஸ்ட் ஏஐ பீச்சர்களும் அதில் கிடைக்கின்றன. ஆகவே, டெக்ஸ்ட் டூ ஆடியோ சப்போர்ட் கொடுக்கும்படி ரீட் அலவுட் (Read Aloud) பீச்சர் கிடைக்கிறது.

கேமராவில் அப்ஜெக்ட் எரைசர் (Object Eraser), எடிட் சஜ்ஜெஸ்சன் (Edit Suggestion) பீச்சர்கள் கிடைக்கின்றன. அதேபோல பெஸ்ட் பேஸ் (Best Face) பீச்சர், வீடியோக்களை எடிட் செய்ய ஆட்டோ டிரிம் (Auto Trim) பீச்சர் கிடைக்கிறது. இதுபோக ஏஐ ஃபில்டர்கள் (AI Filters) கிடைக்கின்றன. இப்படி ஏகப்பட்ட பீச்சர்களை அவ்சம் இன்டலிஜென்ட்ஸ் கொடுக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Expands To AI Assistant With Side Button on Galaxy A Series After The Galaxy S Series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X