பேஸ்புக்குடன் மல்லுக்கட்டும் சாம்சங்!!!

Posted By: Karthikeyan
பேஸ்புக்குடன் மல்லுக்கட்டும் சாம்சங்!!!

வதந்தி இல்லாத வாழ்க்கையா? இப்போது கணினி உலகில் புதியதொரு வதந்தி வந்திருக்கிறது. அவ்வதந்தி பலரையும் இப்போது பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறது. அதாவது பேஸ்புக்குக்குப் போட்டியாக சாம்சங்கும் ஒரு புதிய சமூக வளைதளத்தை தொடங்க இருப்பதாக யாரோ வதந்தியயைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள்

இப்போது எங்கு பார்த்தாலும் இந்த வதந்தி பரவிக் கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த வதந்தி உண்மையல்ல மற்றும் ஆதாரமற்றது என்று சாம்சங் மறுப்பு தெரிவித்திருக்கிறது.

ஆனால் உண்மை என்னவென்றால் கடந்த பிப்ரவரியில் பேமிலி ஸ்டோரி என்ற அப்ளிகேசனை அறிமுகம் செய்து வைத்தது. இந்த அப்ளிகேசனில் பொதுமக்கள் தங்கள் குடும்பங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் குடும்ப போட்டோக்களை பதிவு செய்து கொள்ளாலும். மேலும் இவற்றை சாம்சங் சாதனங்கள் மூலமே செய்ய முடியும். மேலும் இது பேஸ்புக்கிற்கு முற்றிலும் வேறுபட்டது.

மேலும் இந்த அப்ளிகேசனை பலரும் பயன்படுத்தும் வகையில் அதை விரிவுபடுத்தும் எண்ணத்தில் இருக்கிறது. மேலும் இந்த அப்ளிகேசன் பேஸ்புக்கிற்கு எந்த விதத்திலும் போட்டியாக இருக்காது என்று சாம்சங் கூறுகிறது.

ஆனால் கொரியன் டைம்ஸ் என்ற பத்திரிக்கை, பேஸ்புக்கிற்கு போட்டியாகத்தான் சாம்சங் பேமிலி அப்ளிகேசனை விரிவுபடுத்துகிறது என்று கூறுகிறது. உண்மை என்னவென்று போகபோகத்தான் தெரியும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot