போடு.. புது Samsung டிவிகள் மீது ரூ.40,000 வரை தள்ளுபடி.. அறிமுக சலுகையே இப்படியா?
ஸ்மார்ட் டிவி (Smart TV) என்றாலே அது சாம்சங் (சாம்சங்) டிவி தான் என்று கூறும் அளவிற்கு, சாம்சங் ஸ்மார்ட் டிவிகள் மிகவும் பிரபலமாகவுள்ளது. இதற்கு அதன் கிரிஸ்டல் கிளியர் துல்லியமான ஆடியோ மற்றும் வீடியோ அம்சங்கள் தான் முக்கிய காரணமாகிறது.
சாம்சங் (Samsung) நிறுவனம் இப்போது அதன் ஸ்மார்ட் டிவி வரிசையில் புதிதாக 3 மாடல்களை சாம்சங் கிரிஸ்டல் விஷன் 4K ஸ்மார்ட் LED டிவி (Samsung Crystal Vision 4K Smart TV) வரிசையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி மாடலின் பெயர் குறிப்பிடுவது போல, இவை கிரிஸ்டல் கிளியர் வீடியோ (video) மற்றும் ஆடியோ (audio) அனுபவத்தை அதன் பயனர்களுக்கு வழங்குகிறது.

சாம்சங் கிரிஸ்டல் விஷன் 4K ஸ்மார்ட் LED டிவிகளின் (Samsung Crystal Vision 4K Smart TV):
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவி (Samsung Smart TVs) மாடல்கள் இப்போது அமேசான் (Amazon) வழியாக இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இது நிறுவனத்தின் முதல் விற்பனை என்பதனால், சில அறிமுக சலுகைகளும் வழங்கப்பட்டு மிட்ரேஞ் விலை (Midrange price smart tv) பிரிவில் சிறந்த ஸ்மார்ட் டிவிகளை (best smart tv) வாங்க சாம்சங் நிறுவனம் வாய்பளித்துள்ளது.
சாம்சங் கிரிஸ்டல் விஷன் 4K ஸ்மார்ட் LED டிவிகளின் சிறப்பம்சம் (Samsung Crystal Vision 4K Smart TV Specifications)
சரி, இந்த சாம்சங் கிரிஸ்டல் விஷன் 4K ஸ்மார்ட் LED டிவிகளின் (Samsung Crystal Vision 4K Smart TV) விலை என்ன இதன் சிறப்பம்சம் என்ன என்பதை இப்போது பார்க்கலாம். இதுவொரு பேசல்லெஸ் டிசைன் (bezel-less design) கொண்ட 4K அல்ட்ரா எச்டி டிஸ்பிளேவை (4K Ultra HD display) கொண்டுள்ளது. இது 3840 x 2160 பிக்சல் உடன் 50Hz ரெஃப்ரஷ் ரேட்டை ஆதரிக்கிறது.
இந்த டிஸ்பிளே பியூர் கலர் (Pure Color), 1 பில்லியன் கலர் (One Billion Color), HLG எனப்படும் ஹைபிரிட் லாக் காமா (Hybrid Log Gamma) அம்சத்தை ஆதரிக்கிறது. இது கான்ட்ராஸ்ட் என்ஹென்சர் (Contrast Enhancer), பிக்ச்சர் கிளாரிட்டி (Picture Clarity), ஃபிலிம் மோட் (Film Mode), மற்றும் ஃபிலிம் மேக்கர் மோட் (Filmmaker Mode) போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவி கியூ சிம்பொனி ஆதரவுடன் 20W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. இது ப்ளூடூத் டூயல் ஆடியோ, பட்ஸ் ஆட்டோ ஸ்விட்ச் போன்ற பலதரப்பட்ட ஆடியோ அம்சங்களையும் கொண்டுள்ளது. இது பிக்ஸ்பி மற்றும் அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவையும் கொண்டுள்ளது. ஸ்மார்ட் ஹப் (Smart Hub), மேட்டர் ஹப் (Matter Hub), IoT சென்சார் போன்ற ஸ்மார்ட் அம்சங்களை கொண்டுள்ளது.
இதில் வயர்லெஸ் டேக்ஸ் (Wireless Dex), மொபைல் கேமரா சப்போர்ட் (mobile camera support), மீடியா ஹோம் டேப் வியூ (Media HomeTap View) போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இது 3 HDMI போர்ட் உடன், 1 USB போர்ட், வைஃபை (Wi-Fi) ஆதரவு, மற்றும் ப்ளூடூத் (Bluetooth) இணைப்புடன் வருகிறது.
சாம்சங் கிரிஸ்டல் விஷன் 4K ஸ்மார்ட் LED டிவி விலை (Samsung Crystal Vision 4K Tv Price):
சாம்சங் கிரிஸ்டல் விஷன் 4K ஸ்மார்ட் LED டிவி (Samsung Crystal Vision 4K Smart TV) 43" இன்ச், 55" இன்ச் மற்றும் 65" இன்ச் அளவில் வருகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், Samsung Crystal Vision 4K Smart LED TV UA43CUE70AKLXL (43″ இன்ச்) மாடல் ரூ.31,490 சலுகை விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.54,900 ஆகும்.
அடுத்தபடியாக, இதன் 55" இன்ச் மாடல் Samsung Crystal Vision 4K Smart TV UA55CUE70AKLXL (55″ இன்ச்) மாடல் ரூ.46,990 சலுகை விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.72,900 ஆகும். இறுதியாக, இதன் UA65CUE70AKLXL (65″ இன்ச்) மாடல் ரூ.67,990 விலையில் அமேசான் வழியாக வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.1,09,900 ஆகும். இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








