கோவிட்-19க்கு எதிராக இந்தியா போராட ரூ. 37 கோடி வழங்கிய சாம்சங் நிறுவனம்.. எதற்காக இந்த தொகை தெரியுமா?

|

கோவிட் தொற்றுநோயின் பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், கோவிட்-19க்கு எதிராகப் போராடும் முயற்சியில் இந்தியாவுக்கு உதவும் வகையில் சாம்சங் நிறுவனம் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்திய மதிப்பின்படி 5 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது ரூ. 37 கோடி ஆகும். வைரஸின் இரண்டாவது அலை காரணமாக முழு தேசமும் கடினமான நேரத்தில் நகர்ந்து சென்று கொண்டிருக்கும் நேரத்திற்கு மத்தியில் சாம்சங் பிராண்டின் இந்த பங்களிப்பு தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது.

முதல் ரூ. 22 கோடி இதற்காக தான்

முதல் ரூ. 22 கோடி இதற்காக தான்

சாம்சங் நிறுவனம் வழங்கியுள்ள 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை, அதாவது ரூ. 22 கோடி பங்களிப்பை இந்தியாவின் மையத்திற்கும், உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழக மாநிலங்களுக்கும் நன்கொடையாக வழங்கப்படுவதாக சாம்சங் தெரிவித்துள்ளது. கூடுதலாக, கடந்த சில வாரங்களாக நீட்டிக்கப்பட்டுள்ள சுகாதார அமைப்புக்கு உதவ, சாம்சங் 100 மில்லியன் ஆக்ஸிஜன் கான்செண்ட்ரேட்டர்ஸ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்.. 1 மில்லியன் எல்.டி.எஸ் சிரிஞ்ச்கள்

3,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்.. 1 மில்லியன் எல்.டி.எஸ் சிரிஞ்ச்கள்

இத்துடன் 3,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் ஒரு மில்லியன் எல்.டி.எஸ் சிரிஞ்ச்கள் உட்பட 2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மருத்துவ பொருட்களை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு பங்குதாரர்களுடன் சரியான ஆலோசனைகள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்களின் உடனடி தேவைகளை மதிப்பிட்ட பிறகே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்று சாம்சங் தெரிவித்துள்ளது.

மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!

50,000க்கும் மேற்பட்ட தனது ஊழியர்களுக்கு தடுப்பூசி

50,000க்கும் மேற்பட்ட தனது ஊழியர்களுக்கு தடுப்பூசி

குறைந்த டெட் ஸ்பேஸ் சிரிஞ்ச்கள் உட்செலுத்தப்பட்ட பிறகு சாதனத்தில் எஞ்சியிருக்கும் மருந்துகளின் அளவைக் குறைக்கின்றன, தடுப்பூசி பயன்பாட்டை மேம்படுத்துகின்றன. இந்த சிரிஞ்ச்களின் உற்பத்தியாளருக்கு உற்பத்தித் திறனை அதிகரிக்க சாம்சங் உதவியுள்ளது. "கூடுதலாக, சாம்சங் தனது மக்களுக்கு உதவும் ஒரு முயற்சியாக, இந்தியாவில் உள்ள 50,000க்கும் மேற்பட்ட தனது நிறுவனத்தின் தகுதி வாய்ந்த ஊழியர்கள் மற்றும் பயனாளிகளுக்குத் தடுப்பூசி செலவுகளை ஈடுசெய்யும் என்று சாம்சங் கூறியுள்ளது.

இவர்களுக்கும் இது பொருந்தும்

இவர்களுக்கும் இது பொருந்தும்

தடுப்பூசி கிடைக்கும்போது அவர்களின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் அவர்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள சாம்சங் மின்னணு சில்லறைக் கடைகளில் வேலை செய்யும் சாம்சங் அனுபவ ஆலோசகர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று சாம்சங் அறிவித்துள்ளது.

சாம்சங் மிட் செக்மென்ட் 5 ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது

சாம்சங் மிட் செக்மென்ட் 5 ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது

சாம்சங் தனது முதல் மிட் செக்மென்ட் 5 ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் நிறுவனம் ஏப்ரல் 28 ஆம் தேதி (இன்று) இந்தியாவில் தனது சாம்சங் கேலக்ஸி எம் 42 5ஜி (Samsung Galaxy M42 5G) என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சாம்சங் நிறுவனத்திடம் இருந்து வெளியான சாம்சங் கேலக்ஸி எம் 12, சாம்சங் கேலக்ஸி எம் 02 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 02 எஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு பிறகு, இந்த 2021 ஆம் ஆண்டில் வெளியாகும் அடுத்த சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனாகும்.

Best Mobiles in India

English summary
Samsung contributes Rs 37 crores to India in an effort to fight against the COVID outbreak : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X