வான்டடாக வந்து சேர்ந்த ரூ.2500 சலுகை.. நேரம் குறைவாகவே இருக்கிறது.. உடனே 'இதை' செய்யுங்கள்..

|

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் நம்பகமான நுகர்வோர் மின்னணு பிராண்டான Samsung நிறுவனம், Amazon மற்றும் Flipkart உடன் இணைந்து அதன் தனித்துவமான நுகர்வோர் விசுவாசத் திட்டமான 'Samsung Home' திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் சாம்சங் ரசிகர்களுக்குச் சிறப்பான மலிவு சலுகைகளை வழங்குவதன் மூலமும் சாம்சங் தயாரிப்புகளுக்கான அவர்களின் விருப்பத்தை ஒப்புக்கொள்வதன் மூலமும் வெகுமதி அளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது.

ரூ. 2,500 மதிப்பிலான சலுகை

ரூ. 2,500 மதிப்பிலான சலுகை

'Samsung Home' திட்டத்தின் கீழ், Samsung Galaxy அல்லது நுகர்வோர் நீடித்த தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் 2022 செப்டம்பர் 30 வரை இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த Samsung தயாரிப்புகளை வாங்கும் போது அதன் மேல் 5% தள்ளுபடியைப் பெறுகிறார்கள். இதன் மதிப்பு ரூ. 2,500 வரை செல்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்தச் சலுகை இரண்டாவது மற்றும் அதைத் தொடர்ந்து வாங்கும் போது ரசிகர்கள் தாராளமாக பெறலாம். சாம்சங் டிவிகள், பிரிட்ஜ்கள், ஏசி, வாஷிங் மெஷின் இயந்திரம் மற்றும் டிஷ் வாஷர் மீது இந்த சலுகை கிடைக்கிறது.

யாருக்கெல்லாம் இந்த சலுகை கிடைக்கும்?

யாருக்கெல்லாம் இந்த சலுகை கிடைக்கும்?

'சாம்சங் ஹோம்' திட்டம் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரண்டு முக்கிய இந்தியத் தளங்கள் வழியாகக் கிடைக்கிறது. ஏப்ரல் 21, 2022 அன்று அல்லது அதற்குப் பிறகு Flipkart இல் Samsung தயாரிப்பை வாங்கிய நுகர்வோர் இந்தச் சலுகைக்குத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். மே 18, 2022 அன்று அல்லது அதற்குப் பிறகு Amazon இல் Samsung தயாரிப்புகளை வாங்கிய நுகர்வோரும் இந்தச் சலுகையைப் பெறலாம். சாம்சங் ஹோம் திட்டம் நாடு முழுவதும் உள்ள சாம்சங் பிராண்ட் ரசிகர்களை அங்கீகரிக்கிறது மற்றும் பிராண்டை நம்புவதற்கும் சாம்சங் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் அவர்களை ஊக்குவிக்கிறது.

காற்றிலிருந்து 13 லிட்டர் தண்ணீர் எடுக்கும் அதிசய முறை.. வறண்ட மக்களின் தாகம் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பு..காற்றிலிருந்து 13 லிட்டர் தண்ணீர் எடுக்கும் அதிசய முறை.. வறண்ட மக்களின் தாகம் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பு..

விருப்பத்திற்கேற்ப பிரீமியம் தரத்துடன் புதுப்பிக்க வாய்ப்பு

விருப்பத்திற்கேற்ப பிரீமியம் தரத்துடன் புதுப்பிக்க வாய்ப்பு

இத்திட்டம் நுகர்வோர் தங்களுடைய வசிப்பிடத்தை அவர்களின் விருப்பத்திற்கேற்ப புதுப்பித்து, பிரீமியம் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்துவதற்கான வாய்ப்பை அளிக்கிறது. இந்தத் திட்டம் பரந்த அளவிலான சாம்சங் தயாரிப்புகளுக்குப் பொருந்தும் என்பது கவனிக்கத்தக்கது. இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று சாம்சங் இந்தியாவின் நுகர்வோர் மின்னணு வணிகத்தின் மூத்த துணைத் தலைவர் மோகன்தீப் சிங் கூறியுள்ளார்.

'சாம்சங் ஹோம்' லாயல்டி திட்டத்தை எவ்வாறு பெறுவது?

'சாம்சங் ஹோம்' லாயல்டி திட்டத்தை எவ்வாறு பெறுவது?

 • முதல் சாம்சங் தயாரிப்பு வாங்குதல் ஆகஸ்ட் 15, 2022 ஆம் தேதிக்கு முன் Flipkart மற்றும் Amazon இல் செய்யப்பட வேண்டும்.
 • முதல் வாங்குதலுக்குப் பிறகு, சாம்சங் ஹோம் திட்டம் தானாகவே வாடிக்கையாளர்களுக்குச் செயல்படுத்தப்படும்.
 • செப்டம்பர் 30, 2022 வரை பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் சாம்சங்கின் சமீபத்திய டிவிகள், பிரிட்ஜ்கள், ஏசி, வாஷிங் மெஷின் அல்லது டிஷ் வாஷர் போன்ற சாதனங்களை வாங்குபவர்கள் இரண்டாவது மற்றும் அடுத்தடுத்து வாங்குவதற்கு சலுகை கிடைக்கும்.
 • நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..

  Flipkart மற்றும் Amazon இல் எத்தனை நாட்கள் இடைவெளி கட்டாயம்?

  Flipkart மற்றும் Amazon இல் எத்தனை நாட்கள் இடைவெளி கட்டாயம்?

  • இந்த நன்மையைப் பெற, முதல் மற்றும் இரண்டாவது வாங்குதலுக்கு இடையே 14 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.
  • மேலும் பிளிப்கார்ட்டில் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாங்குதலுக்கு இடையே இடைவெளி தேவையில்லை என்பது கவனிக்கத்தக்கது.
  • பிளிப்கார்ட்டில் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாங்கும் போது நுகர்வோர் இந்தச் சலுகையைப் பெறலாம்.
  • Amazon பொறுத்தவரை, ஒவ்வொரு வாங்குதலுக்கும் இடையே குறைந்தபட்சம் 10 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.
  • நேரம் குறைவாகவே இருக்கிறது உடனே முந்துங்கள்

   நேரம் குறைவாகவே இருக்கிறது உடனே முந்துங்கள்

   • மேலும் ஆஃபர் காலத்துக்குள் Amazon இல் தகுதியான Samsung தயாரிப்புகளை வாங்கும்போது வாடிக்கையாளர்கள் இந்தச் சலுகையைப் பெறலாம்.
   • இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த வாங்குதலில், இந்த சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் ஒரு வகைக்கு அதிகபட்சம் இரண்டு யூனிட்களை வாங்கலாம்.
   • இந்த சலுகையை சாம்சங் பயனர்கள் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள இது ஒரு சிறப்பான வாய்ப்பு என்பதை மறக்காதீர்கள். இந்த சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே என்பதனால் உடனே முந்துங்கள்.
   • நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..

Best Mobiles in India

English summary
Samsung Consumer Loyalty Program Samsung Home is Back on Amazon and Flipkart : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X