எல்ஜி மீது சாம்சங் பரபரப்பு புகார்!

Posted By: Karthikeyan
எல்ஜி மீது சாம்சங் பரபரப்பு புகார்!

ஸ்மார்ட்போன், டேப்லெட் உள்ளிட்ட சாதனங்களுக்கான திரைகளை தயாரிப்பதில் சாம்சங் மற்றும் எல்ஜி ஆகிய கொரிய நிறுவனங்கள் முன்னனியில் இருக்கின்றன. மேலும் இந்த இரு நிறுவனங்களிடையே பலத்த போட்டியும் நிலவுகின்றன.

தற்போது ஒஎல்இடி தொழில் நுட்பத்துடன் கூடிய டிஸ்ப்ளேகளைத் தயாரிப்பதில் இரண்டு நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் தமது ஒஎல்இடி தொழில் நுட்பத்தை எல்ஜி திருடி விட்டதாக சாம்சங் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது.

அதற்கு எல்ஜி நிறுவனம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. மேலும் 11 பேர் தமது ஒஎல்இடி டிவி டிஸ்ப்ளே தொழில் நுட்பத்தை திருடி இருப்பதாக சாம்சங் குற்றம் சாட்டியிருக்கிறது. அந்த 11 பேரில் 6 பேர் தமது நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். அந்த 6 பேருக்கும் இந்த திருட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எல்ஜி டிஸ்ப்ளே கோ கூறியிருக்கிறது.

மேலும் தனது தொழில் நுட்பத்தையும் அதோடு தனது நிறுவனத்தில் வேலை செய்பவர்களையும் திருடி விட்டதாக சாம்சங் எல்ஜி மீது குற்றம் சுமத்தி இருக்கிறது. இதில் எது உண்மை என்று தெரியவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்