Home
News

சாம்சங், ஃபேஸ்புக் திடீர் மோதல்.!?

By Meganathan

உலகின் பிரபல மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் தனது புதிய திட்டத்தின் மூலம் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் நேரடி போட்டியில் இறங்கியுள்ளது. சாம்சங் நிறுவனம் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்துடன் ஏற்பட்ட போட்டியில் பல்வேறு வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே.

தொழில்நுட்ப சந்தையில் உலகம் வியக்கும் இரு பெரு நிறுவனங்களின் இம்மோதல் போக்கு அனைவருக்கும் பழகிவிட்ட ஒன்று தான் என்றாலும் தற்போது இந்நிறுவனங்களின் திடீர் மோதல் ஏன், என்றும் இது குறித்த விரிவான தகவல்களையும் தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

புதிய திட்டம்

புதிய திட்டம்

சிறிய ரக செயற்கைக்கோள்களின் (மைக்ரோ சாட்டிலைட்) உதவியோடு உலகம் முழுக்க இண்டர்நெட் வசதியை வழங்க முடியும் என்கின்றது தென் கொரிய மொபைல் போன் நிறுவனமான சாம்சங்.

செயற்கைக்கோள்

செயற்கைக்கோள்

அதன்படி அந்நிறுவனம் சுமார் 4600 செயற்கைக்கோள்களை (சாட்டிலைட்) கொண்டு உலகம் முழுவதிற்கும் இண்டர்நடெ் வசதியை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலம்

எதிர்காலம்

எதிர்காலத்தில் இண்டர்நெட் தேவை அதிகரிக்கும் என்பதோடு தற்போதிருக்கும் இண்டர்நெட் சேவை நிறுவனங்களால் இந்த தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக இருக்கும்.

தேவை

தேவை

2028 ஆம் ஆண்டு உலகளவில் இண்டர்நெட் தேவை சுமார் 1 பில்லியன் டெராபைட்களாக இருக்கும்.

இண்டர்நெட்

இண்டர்நெட்

இன்றைய தேதியில் பயன்பாட்டில் இருக்கும் செயற்கைக்கோள்களால் இந்தளவு இண்டர்நெட்டினை வழங்க முடியாது.

திட்டம்

திட்டம்

சாம்சங் நிறுவனம் 'மொபைல் இண்டர்நெட் ஃப்ரம் தி ஹெவன்ஸ் ' (mobile internet from the heavens) எனும் அறிக்கையில் இந்த திட்டத்திற்கு இத்தனை செயற்கைக்கோள்கள் தேவைப்படும் என் தெரிவித்துள்ளது.

நிலை நிறுத்தல்

நிலை நிறுத்தல்

வான்வெளியில் அனைத்து செயற்கைக்கோள்களும் உலகிற்கு அருகாமையில் நிலை நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

தூரம்

தூரம்

வான்வெளியில் தற்போதிருக்கும் பெரும்பாலான தொலைதொடர்பு செயற்கைக்கோள்கள் உலகில் இருந்து சுமார் 35,000 கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

வேகம்

வேகம்

தற்போது இருக்கும் தூரமானது இண்டர்நெட் வேகத்தை வெகுவாக குறைக்கும் என்பதால் புதிய செயற்கைக்கோள்கள் சற்று அருகாமையில் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்கின்றது சாம்சங்.

நகரும் செயற்கைக்கோள்

நகரும் செயற்கைக்கோள்

புதிய செயற்கைக்கோள்கள் ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கும்.

சீரான வேகம்

சீரான வேகம்

இதனால் சிறந்த இணைப்பு மற்றும் சீரான வேகத்தில் இண்டர்நெட் சேவையை உலகம் முழுவதிற்கும் வழங்க முடியும்.

அனுமதி

அனுமதி

உலகம் முழுவதிலும் இண்டர்நெட் வழங்கும் இத்திட்டத்தினை எலான் மஸ்க் தலைமையில் ஸ்பேஸ் எக்ஸ் எனும் நிறுவனம் கையில் எடுத்ததோடு இதற்கான அனுமதியை எஃப்சிசியிடம் கோரி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

இதோடு ஃபேஸ்புக் நிறுவனமும் இண்டர்நெட்.ஓஆர்ஜி எனும் பெயரில் உலகம் முழுக்க இண்டர்நெட் வழங்கும் திட்டத்திற்கு அனுமதி கோரி இருக்கின்றது.

ஸ்பேஸ் எக்ஸ்

ஸ்பேஸ் எக்ஸ்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் துவங்கிய இத்திட்டத்தினை இன்று பல்வேறு நிறுவனங்களும் கையில் எடுத்திருக்கும் நிலையில் இந்த போரில் வெல்ல போவது யார் என்பது கேள்வி குறியாகவே இருக்கின்றது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung Claims It Can Provide Global Internet Coverage . Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X