சாம்சங் நிறுவனத்தின் தலைவருக்கு 18மாதம் சிறை: காரணம் என்ன தெரியுமா?
சாம்சங் நிறுவனத்தின் அனைத்து பொருட்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் சிறந்த தரம் கொண்ட சாதனங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வகம் காட்டுகிறது. இந்தியாவிலும் ஸ்மார்ட்போன்,
டிவி உட்பட பல்வேறு சாம்சங் பொருட்களுக்கு அதிக வரவேற்ப்பு உள்ளது.

லீ சாங் ஹோன்
குறிப்பாக தென்கொரியாவை சேர்ந்த இந்த சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன், டிவி, உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களைஅதிகளவில் தயார் செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக லீ சாங் ஹோன் இருந்து
வருகிறார், துணை தலைவராக காங் குயாங் ஹூன் இருக்கிறார்.

சங்க நடவடிக்கைகளை நசுக்குவதாக புகார்
இந்நிலையில் சாம்சங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவரும் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் தொழிற் சங்க நடவடிக்கைகளை நசுக்குவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. எனினும் இந்த வழக்களில் அவர்கள் உடனடியாக முன்ஜாமீன் பெற்றனர்.

சியோல்
அதன்பின்பு இந்த வழக்கின் இறுதி விசாரணை சியோல் மத்திய மாவட்ட கோர்ட்டில் நேற்று நடந்தது. அப்போது லீ சாங்ஹோன் மற்றும் காங் குயாங் ஹூன் மீதான சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டன.

முன்ஜாமீன் ரத்து
பின்னர் இந்த வழக்கில் அவர்கள் இருவருக்கும் தலா 18மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார். மேலும் இதனை தொடர்ந்து உடனடியாக அவர்களது முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குறிப்பாக தொழிலாளர் சங்கங்களை மூடுவதற்காகவும், சங்க உறுப்பினர்களின் ஊதியத்தை குறைக்கவும், அவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கவும் சாம்சங் தலைவர்கள் உத்தரவிட்டதாகவும், தொழிற் சங்க நடவடிக்கைகளை நசுக்குவதாகவும் புகார் எழுந்ததை தொடர்ந்து இருவருக்கு தண்டனை கிடைத்தது.


Click it and Unblock the Notifications