சாம்சங் கார்னிவல் ஃப்ளிப்கார்ட்: ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் மாடலுக்கும் தற்சமயம் ரூ.12000-வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே இந்த ஸ்மார்ட்போன் மாடலை ரூ.37,990-க்கு வாங்க முடியும்.
ஃப்ளிப்கார்ட் வலைதளத்தில் தற்சமயம் சாம்சங் கார்னிவல் மூலம் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு எக்சேஞ்ஜ் ஆஃபர் மற்றும் இஎம்ஐ வசதி போன்ற பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது சாம்சங் நிறுவனம்.

இந்த அட்டகாசமான விலைகுறைப்பு சலுகை ஜூன் 12-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை இருக்கும் என பிளிப்கார்ட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகை பல்வேறு மக்கள் பயன்படுத்தவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி எஸ்8:
சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் மாடலுக்கும் தற்சமயம் ரூ.12000-வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே இந்த
ஸ்மார்ட்போன் மாடலை ரூ.37,990-க்கு வாங்க முடியும். அதேபோல் கேலக்ஸி எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.43,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதிரடி விலைகுறைப்பு:
மேலும் சாம்சங் கார்னிவல் மூலம் விலைகுறைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
கேலக்ஸி ஜே3 ப்ரோ- ரூ.6,690/-
கேலக்ஸி ஆன் மேக்ஸ்- ரூ.13,900/-
கேலக்ஸி ஆன்5- ரூ 5,999/-
கேலக்ஸி எஸ்7 எட்ஜ்-ரூ.32,900/-

சாம்சங் டிவி:
சாம்சங் HD Ready LED TV மாடலுக்கு தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.16, 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் ஹெட்ஃபோன்கள், மானிட்டர்கள்,பவர் பேங் , சவுண்ட்பார், microwave போன்ற பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்டிஎப்சி:
எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டுகளை கொண்டு சாம்சங் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் சாம்சங் ஸ்பீக்கர் மாடல்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு Smart Convertible 5-in-1 Refrigerators மாடலை ரூ.16,040 விலையில் வாங்க முடியும்.

கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் :
சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.17,900-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.10,900-க்கு
விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications