Free மொபைலுடன் தொடங்கிய Samsung ஆபர்; ஆகஸ்ட் 21 வரை நிதானமாக நடக்கும்!
நீங்களொரு சாம்சங் பிராண்ட் (Samsung Brand) பிரியர் என்றாலும் சரி அல்லது "வீட்டு உபயோக பொருள் ஏதாச்சும் வாங்கி போடணும்" என்கிற எண்ணத்தில் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருப்பவராக இருந்தாலும் சரி... ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை உங்கள் காட்டில் மழை தான்!

ஏனென்றால்.. Samsung Blue Fest 2.0 'ஆல்ரெடி' ஆரம்பமாகி விட்டது!
சாம்சங் நிறுவனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட் டிவிகள், ஃபிரிட்ஜூகள், டிஷ்வாஷர்கள், மைக்ரோவேவ் ஓவன்கள் மற்றும் சவுண்ட்பார்களின் மீது 'ப்ளூ ஃபெஸ்ட் 2.0' சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சுவாரசியமான விடயம் என்னவென்றால், இந்த ஆபர் சேல் ஆனது 2 நாட்கள், 3 நாட்கள் அல்ல, கிட்டதட்ட ஒரு மாத காலம் நடக்கவுள்ளது.

ஆகஸ்ட் 21 வரை எங்கெல்லாம் இந்த ஆபர்கள் அணுக கிடைக்கும்?
கடந்த ஜூலை 15 ஆம் தேதி தொடங்கிய சாம்சங்கின் இந்த ஆபர் விற்பனையானது - முன்னரே குறிப்பிட்டபடி - ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடக்கும்.
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர், சாம்சங் ஷாப் மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்னணி நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் ரீடெயில் ஸ்டோர்களின் வழியாகவும் சாம்சங் நிறுவனத்தின் இந்த ப்ளூ ஃபெஸ்ட் 2.0' சலுகைகள் அணுக கிடைக்கும்.

ஸீரோ டவுன் பேமண்ட் முதல் இலவச மொபைல் வரை!
இந்த சலுகை காலத்தில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த சாம்சங் தயாரிப்புகளின் மீது 'எக்ஸ்க்ளூஸிவ் டீல்ஸ்' மற்றும் 'லிமிடெட் பீரியட் ஆபர்களை' பெறலாம்.
உடன் இலவச சாம்சங் கேலக்ஸி எஸ்22, 30% வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட், 20% வரை கூடுதல் கேஷ்பேக் மற்றும் ஸீரோ டவுன்பேமண்ட் வழியிலான ஈஸி இஎம்ஐ விருப்பங்கள் மற்றும் சில அட்டகாசமான 'பண்டில் டீல்'களையும் பெறலாம்.
என்னென்ன பொருட்கள் மீது என்னென்ன ஆபர்கள் என்கிற விவரங்கள் இதோ:

ஸ்மார்ட் டிவி:
சாம்சங்கின் இந்த ப்ளூ ஃபெஸ்ட் 2.0 ஆபர் விற்பனையின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரீமியம் டிவி மாடல்களின் மீது 25% வரை உடனடி தள்ளுபடி மற்றும் 20% வரை கேஷ்பேக் அணுக கிடைக்கும்.
இந்த ப்ளூ ஃபெஸ்ட் 2.0 விற்பனையின் கீழ் நீங்கள் வாங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட Neo QLED மற்றும் QLED TV மாடல்களின் மீது 3 வருட வாரண்டி மற்றும் 10 வருட நோ ஸ்கிரீன் பர்ன்-இன் உத்திரவாதமும் கிடைக்கும்.

டிஷ்வாஷர்:
குக்கர் மற்றும் கடாய் போன்ற சமையல் பாத்திரங்களை திறம்பட சுத்தம் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட சாம்சங் டிஷ்வாஷர்களின் 'இன்டென்சிவ்வாஷ்' ரேஞ்ச் மாடல்கள் ரூ.36,990 என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கும்.
கூடுதலாக, 20% வரை கேஷ்பேக், ஸீரோ டவுன்பேமண்ட் உடனான ஈஸி இஎம்ஐ விருப்பங்களும் அணுக கிடைக்கும்.

மைக்ரோவேவ்:
இந்த சாம்சங் ப்ளூ ஃபெஸ்ட் 2.0 ஆபர் சேல் ஆனது பெரும்பாலும் சமையல் பிரியர்களையே குறிவைப்பது போல் தெரிகிறது. ஏனெனில் இந்த சலுகை காலத்தில் மைக்ரோவேவ்கள் கவர்ச்சிகரமான சலுகைகளை பெற்றுள்ளது. குறிப்பாக Masala & Sun-Dry ரேன்ஜ் மைக்ரோவேவ் மாடல்கள்!
இதுதவிர 10 வருட செராமிக் கேவிட்டி (Ceramic cavity) உத்திரவாததுடன் வரும் மைக்ரோவேவ்கள் ரூ.18,900 முதல் வாங்க கிடைக்கின்றன.

சவுண்ட்பார்ஸ்:
சாம்சங் சவுண்ட்பார்களை வாங்கும் நுகர்வோர்களுக்கு 30% வரை உடனடி தள்ளுபடி அணுக கிடைக்கும்.
மேலும் இந்த விற்பனையின் கீழ் சமீபத்தில் அறிமுகமான சாம்சங்கின் 2022 சவுண்ட்பார் சீரீஸ், பிளாக்ஷிப் Q சீரீஸ் மற்றும் லைஃப்ஸ்டைல் S சீரீஸ் மீதும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங் மெஷின்:
இந்த ப்ளூ ஃபெஸ்ட் 2.0 விற்பனையின் போது, சாம்சங் நிறுவனத்தின் வாஷிங் மெஷின்கள் மீது 25% வரையிலான உடனடி தள்ளுபடி, 20% வரை கேஷ்பேக் மற்றும் ஸீரோ டவுன்பேமண்ட் உடனான ஈஸி இஎம்ஐ விருப்பங்கள் (ரூ.990 முதல்) போன்ற சலுகைகள் அணுக கிடைக்கும்.

ஃபிரிட்ஜ்:
சாம்சங் ப்ளூ ஃபெஸ்ட் 2.0-இன் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபிரிட்ஜ் மாடல்களின் மீது 20 சதவீதம் வரை கேஷ்பேக் அணுக கிடைக்கும். மேலும் பட்டியலிடப்பட்டுள்ள சில ஃபிரிட்ஜுகளின் மீது 'பண்டில் டீல்', ஸீரோ டவுன்பேமண்ட் உடனான ஈஸி EMI விருப்பங்களையும் நீங்கள் பெறலாம்.
நீங்கள் பேஸ்போக் ஃபேமிலி ஹப் ஃபிரிட்ஜுகளில் (BESPOKE Family Hub refrigerators) ஒன்றை வாங்கினால், சாம்சங் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான கேலக்ஸி எஸ்22 (8GB + 128GB) இலவசமாக கிடைக்கும்.
அறியாதோர்களுக்கு சாம்சங்கின் BESPOKE ஆனது உங்களின் தனிப்பட்ட ரசனைக்கு ஏற்ற நவீன சமையலறைக்கான கஸ்டமைஸ்டு ஃபிரிட்ஜ் மாடல்கள் ஆகும்.
934L கெப்பாசிட்டி கொண்ட இந்த French Door ஃபிரிட்ஜ் ஆனது 21.5-இன்ச் ஃபேமிலிஹப் டிஸ்பிளே மற்றும் 25W ஸ்பீக்கர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

தயிர் தயாரிக்கக்கூடிய உலகின் முதல் ஃபிரிட்ஜ் மீதும் ஆபர்!
கடைசியாக சாம்சங்கின் Curd Maestro (கர்ட் மேஸ்ட்ரோ) - தயிரை தயாரிக்கக்கூடிய உலகின் முதல் ஃபிரிட்ஜ் ஆனது 192L முதல் 692L கேப்பாசிட்டி உடன் ரூ.20,990 முதல் வாங்க கிடைக்கிறது.
Photo Courtesy: Samsung


Click it and Unblock the Notifications