ஓவர் டேக் செய்வது ரொம்ப ஈஸி..!

Posted By:

சாலையில் மெதுவாக ஊர்ந்து கொண்டு செல்லும் வாகனத்தின் பின்னேயே சென்றால், நாம் போய் சேர வேண்டிய இடத்தை அடைய இன்னும் சில மணி நேரங்கள் எடுத்துக் கொள்ள நேரிடும். ஹை வே சாலைகளில் ஆமை பயணம் செல்வதும் சரியல்ல, இடது புறமாக ஏறி ஓவர் டேக் செய்வதும் எளிதல்ல..!

ஓவர் டேக் செய்வது ரொம்ப ஈஸி..!

அப்படியான தருணங்களில் ஓவர் டேக்கின் போது விபத்து நேரிடாமல் இருக்க சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள தொழில்நுட்பம் தான் இந்த - ஷோயிங் ஆஃப்..!

இனி கைரேகை தான் உங்கள் வீட்டு சாவி..!

சாம்சங் நிறுவனத்தின் 'சேஃப்டி ட்ரக்'கின் முன்புறம் பொருத்தப்பட்டுள்ள வயர்லெஸ் கேமிராவானது தனக்கு முன்னால் இருக்கும் சாலையை படம் பிடித்து அப்பிடியே 'லைவ்'வாக சேஃப்டி ட்ரக்கின் பின்புறம் பொருத்தப்பட்டு உள்ள பெரிய ஸ்க்ரீனில் காட்சிப்படுத்தும்.

ஓவர் டேக் செய்வது ரொம்ப ஈஸி..!

அதன் உதவியை கொண்டு எப்போது எதிரில் எந்த வாகனமும் வரவில்லை, இடது பக்கம் ஏறி ஓவர் டேக் செய்ய சரியான தருணம் எது என்று பார்த்து பின் நிதானமாக முந்தி செல்ல முடியும்.

இது பெரியது, இதுதான் பெரியது..!

இந்த தொழில்நுட்ப முயற்சியானது மேலும் விரிவடைந்து அதிகப் படியான சாலை விபத்துக்களை தவிர்க்க உதவும் என்று நம்ப படுகிறது. மனித வாழ்க்கையை மேம்படுத்தவும் மேலும் மேலும் முன்னேற்றவும்தான் தொழில் நுட்பம் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்..!

Read more about:
English summary
Safety Truck, a semi truck with a wireless camera mounted on the front, displaying the road ahead on a screen tacked on to the back of the truck.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot