சாம்சங் அறிவித்த உலகின் முதல் 'வளைவான' OLED டிவி !!

Posted By: Staff
சாம்சங் அறிவித்த உலகின் முதல் 'வளைவான' OLED டிவி !!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றுவரும் உலகின் மாபெரும் 'எலெக்ட்ரானிக்ஸ்' பொருட்காட்சியில் நேற்றைய அறிவிப்பைத்தொடர்ந்து இன்றும் ஒரு புதிய சாதனம் பற்றி அறிவித்துள்ளது சாம்சங்!

கொரியாவைச்சேர்ந்த உலகின் முன்னணி நிறுவனமான சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ்-ஆனது உலகின் முதல் 'வளைவான' OLED டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

சாம்சங்கின் இந்த வளைவான OLED டிவியானது "பனோரமா" என்ற தொழில்நுட்பத்தை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பமானது சாதாரண திரையில் அமைப்பதே மிகவும் கடினமானது.

ஜனவரி 2013-ன் சிறந்த சாதனங்கள்

இந்த டிவியில் காட்சிகள் மிக அழகாகவும் தரம் மிக அதிகமாகவும் இருக்கும். உலகிலேயே முதல் வளைவான டிவி இதுதானாம். சாதாரண படங்களைக்கூட அழகாகக்காட்டும் வல்லமைகொண்டது.

 

நோக்கியா லுமியா 920,820 இந்தியா வருகிறது

சாம்சங்கின் அறிவிப்பின்படி இந்த டிவியில் வரும் காட்சிகளை ஒரு அறையின் எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் தெளிவாகத்தெரியுமாம். அதாவது LCD திரைகளில் தெரிவதைப்போன்ற கருமை இதில் தெரியவே தெரியாது. சாதாரண தட்டை வடிவிலான தொலைக்காட்சிப்பெட்டிகளில் இது சாத்தியமே இல்லை என்கிறார்கள் வல்லுனர்கள்.

 

[gallery link="file"]

சிஇஎஸ் 2013-ன் முதல்நாள்: சிறந்த 10 சாதனங்கள்

சிஇஎஸ் 2013ல் வெளியான சில வித்யாசமான சாதனங்கள்!

[மின்சாரம் சேமிக்க] பசுமைப்புரட்சியை ஆதரிக்கும் மொபைல் போன்கள்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot