சாம்சங் கேலக்ஸி எஸ் 21 பிளஸ் மீது ரூ .10,000 தள்ளுபடி.. இன்னும் பல நம்ப முடியாத சலுகைகள்..
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அதன் சாம்சங் கேலக்ஸி எஸ் 21 பிளஸ் ஸ்மார்ட்போன் மீது மிகப் பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் 21 பிளஸ் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இப்போது ரூ .10,000 உடனடி கேஷ்பேக் நன்மை கிடைக்கிறது. இத்துடன் இன்னும் சில அற்புதமான தள்ளுபடியையும் நிறுவனம் தற்பொழுது அறிவித்துள்ளது. புதிய தள்ளுபடி மற்றும் சலுகை பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விலை
இது பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விலையை எதிர்பார்த்திடாத அளவிற்கு மலிவாக்கியுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் 21 பிளஸ் ஸ்மார்ட்போனின் 128 ஜிபி வேரியண்டிற்கு ரூ .71,999 ஆகவும், அதன் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ .75,999 ஆகவும் விலை தற்பொழுது குறைக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் 21 சீரிஸை வாங்குவதில் சாம்சங் அற்புதமான பல சலுகைகளையும் வெளியிட்டுள்ளது.

ரூ .10,000 மதிப்புள்ள தள்ளுபடி
வாடிக்கையாளர்கள் இப்போது ரூ .15,990 மதிப்புள்ள கேலக்ஸி பட்ஸ் புரோவை வெறும் ரூ .990 விலைக்கு வாங்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா, கேலக்ஸி எஸ் 21 + அல்லது கேலக்ஸி எஸ் 21 வாங்கும்போது ரூ .10,000 மதிப்புள்ள சாம்சங் ஷாப் வவுச்சரைப் நீங்கள் பெறலாம். மூன்று கேலக்ஸி எஸ் 21 சாதனங்களும் இந்தியாவில் ஹைப்பர் ஃபாஸ்ட் 5 ஜி ஆதரவுடன் தயாராக உள்ளன.

ரூ .10,000 மற்றும் ரூ .5,000 வரை போனஸ்
இதற்கிடையில், கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா அல்லது கேலக்ஸி எஸ் 21 வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் முறையே ரூ .10,000 மற்றும் ரூ .5,000 வரை மேம்படுத்தல் போனஸைப் பெறலாம். அதேபோல், இந்த சாதனங்கள் முறையே ரூ .10,000 மற்றும் ரூ .5,000 வங்கி கேஷ்பேக் சலுகையுடன் எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் எளிதான ஈ.எம்.ஐ விருப்பங்களுடன் வருகின்றது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா
சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி எஸ் 21 விலை முறையே ரூ .104,999 மற்றும் ரூ .69,999 என்று விற்பனைக்குக் கிடைக்கிறது. சாம்சங் அறிவித்துள்ள இந்த அனைத்து சலுகைகளும் உடனடி நடைமுறைக்குப் பொருந்தும், மேலும் அவை ஜூன் 30, 2021 வரை சாம்சங் ஆன்லைன் கடை, Samsung.com/in, சாம்சங் பிரத்தியேக கடைகள், முன்னணி சில்லறை கடைகள் மற்றும் ஈ-காமர்ஸ் போர்ட்டல்கள் வழியாகவும் இந்த தள்ளுபடி செல்லுபடியாகும்.


Click it and Unblock the Notifications