One UI 8 அப்பேட்.. இந்த Galaxy மாடல்களுக்கு சங்கடம்.. 1 மாசம் வெயிட்.. எந்த மாடல்களுக்கு எப்போது கிடைக்கும்?
இந்தியாவில் இருக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஒன் யுஐ 8 (One UI 8) ஸ்டேபிள் அப்டேட் அட்டவணையை அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இதில் பிரீமியம் சாம்சங் யூசர்களாக இருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் (Samsung Galaxy S24 Series) ஓனர்களுக்கு கொஞ்சம் கடுப்பாகத்தான் இருக்கும். ஏனென்றால், எஸ்25 சீரிஸ்களுடன் அவர்களுக்கு அப்டேட் கிடைக்காது. பட்ஜெட் மாடல்களுடன் சேர்த்தே கிடைக்க இருக்கிறது.
சாம்சங் பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ஒன் யுஐ 8 அப்டேட்டில் ஸ்பில்ட் ஸ்கிரீன் (Split Screen), புது சாம்சங் டெக்ஸ் (New Samsung DeX), அப்கிரேட் செய்யப்பட்ட குயிக் ஷேர் (Quick Share) போன்ற பீச்சர்கள் இடம்பெற்றுள்ளன. இதுபோக ஜெனரேட்டிவ் போர்டார்ய்டு ஸ்டூடியோ (Portrait Studio), எரைஸ் ஆடியோ (Erase Audio) போன்ற பீச்சர்கள் கிடைத்தன.

இதனால் எப்போது ஒன் யுஐ 8 அப்டேட் கிடைக்கும் என்று இந்தியாவில் இருக்கும் சாம்சங் பிரியர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த சூட்டிலேயே சாம்சங் நிறுவனம், இந்தியாவில் ஒன் யுஐ 8 ஸ்டேபிள் அப்டேட்டின் அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸ் (Samsung Galaxy S25 Series) மாடல்களுக்கு தொடங்கப்பட்டுவிட்டது.
இந்த செப்டம்பரிலேயே சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Samsung Galaxy S25), கேலக்ஸி எஸ்25+ (Galaxy S25+), கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Galaxy S25 Edge) மற்றும் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Galaxy S25 Ultra) ஆகிய மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் பேஸ்டு ஒன் யுஐ 8 கிடைத்துவிட்டது. இதனால், இதே மாதத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் மாடல்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர்களுக்கு அடுத்த மாதத்தில் இருந்து கிடைக்க இருக்கிறது. இந்த மாடல்களுக்கும் வழக்கம்போல கேலக்ஸி எஸ்23 சீரிஸ், கேலக்ஸி ஏ சீரிஸ், கேலக்ஸி டேப் எஸ்10 சீரிஸ் ஆகிய மாடல்களுடன் அப்டேட் கிடைக்க இருக்கிறது. இதனால், பிரீமியம் மாடல்களை வாங்கியும் பட்ஜெட் மாடல்களுடன் அப்டேட் கிடைக்கிறது என்ற எக்ஸ்24 பிரியர்கள் நினைக்கின்றனர்.
அக்டோபர் மாதத்தில் அப்டேட் பெறும் டிவைஸ்கள்:
கேலக்ஸி எஸ்24, கேலக்ஸி எஸ்24+, கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்24 எப்இ, கேலக்ஸி இசட் போல்டு6 மற்றும் கேலக்ஸி இசட் பிளிப்6 மாடல்களுக்கு கிடைக்க இருக்கிறது. அதேபோல கேலக்ஸி ஏ36 5ஜி மற்றும் கேலக்ஸி எஸ்23, கேலக்ஸி எஸ்23+, கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்23 எப்இ ஆகிய மாடல்களுக்கு கிடைக்க இருக்கிறது.
அதேபோல கேலக்ஸி ஏ15 5ஜி, கேலக்ஸி ஏ26 5ஜி, கேலக்ஸி ஏ34 5ஜி, கேலக்ஸி ஏ35 5ஜி, கேலக்ஸி ஏ54 5ஜி, கேலக்ஸி ஏ55 5ஜி, கேலக்ஸி எஃப்15 5ஜி, கேலக்ஸி எம்15 5ஜி கேலக்ஸி எம்35 5ஜி மாடல்களுக்கும், கேலக்ஸி எம்36 5ஜி, கேலக்ஸி ஏ16 5ஜி, கேலக்ஸி எஃப்16 5ஜி, கேலக்ஸி எம்16 5ஜி மாடல்களுக்கும் கிடைக்க இருக்கிறது.
கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ , கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ 5ஜி, கேலக்ஸி டேப் எஸ்10 எப்இபிளஸ், கேலக்ஸி டேப் எஸ்10 லைட் 5ஜி, கேலக்ஸி டேப் எஸ் அல்ட்ரா 5ஜி, கேலக்ஸி டேப் எக்ஸ்10+ 5ஜி , கேலக்ஸி டேப் எஸ்9, கேலக்ஸி டேப் எஸ்9 எப்இ, ற்றும் கேலக்ஸி டேப் எஸ்9 எப்இபிளஸ் ஆகிய டேப்லெட் மாடல்களுக்கு கிடைக்க இருக்கிறது.
நவம்பர் மாதத்தில் அப்டேட் பெறும் டிவைஸ்கள்:
கேலக்ஸி ஏ25 5ஜி, கேலக்ஸி எஃப்05, கேலக்ஸி எம்05, கேலக்ஸி டேப் எஸ்10+, கேலக்ஸி ஏ53 5ஜி, கேலக்ஸி எம்53 5ஜி, கேலக்ஸி டேப் ஏ9, கேலக்ஸி டேப் ஏ9, கேலக்ஸி டேப் ஏ9+, கேலக்ஸி டேப் ஏ9+ 5ஜி மற்றும் கேலக்ஸி டேப் ஏ11 ஆகிய மாடல்களுக்கு கிடைக்க இருக்கிறது. இதேபோல பெரும்பாலான சாம்சங் மாடல்களுக்கு ஒன் யுஐ 8 கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications