செல்பீ எடுக்க சாதகமாக இருக்கும் சாம்சங் கருவிகள் அறிமுகம்
சாம்சங் ப்ரியர்களுக்கு நற்செய்தி! செல்பீ எடுக்க ஏதுவாக புதிய கருவிகளை அறிவித்தது சாம்சங். அந்நிறுவனத்தின் புதிய கருவிகளில் செல்பீ எடுக்க வசதியாக வைடு ஆங்கிள் லென்ஸ், ப்ளாஷ் போன்ற அம்சங்கள் இந்த கருவியில் வழங்கப்பட்டிருக்கின்றது.

சாம்சங் கேலக்ஸி ஜெ5 மற்றும் ஜெ7
சிறப்பான செல்பீக்களை எடுக்க சாம்சங் நிறுவனம் இந்த இரு மாடல்களிலும் எல்ஈடி ப்ளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங்
சாம்சங் கேல்க்ஸி ஜெ5 மற்றும் ஜெ7 இரண்டும் பட்ஜெட் விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா
ஜெ5 மற்றும் ஜெ7 இரண்டும் 5 எம்பி முன்பக்க கேமராவும் எல்ஈடி ப்ளாஷ் வழங்கப்பட்டுள்ளதால் குறைந்த வெளிச்சத்திலும் சிறந்த புகைப்படங்களை எடுக்க முடியும்.

டிஸ்ப்ளே
இரண்டு மாடல்களிலும் 720பி டிஎப்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கின்றது. ஜெ5 ஸ்மார்ட்போனில் 5 இன்ச் ஸ்கிரீனும் ஜெ7 மாடலில் 5.5 இன்ச் ஸ்கிரீனும் வழங்கப்பட்டுள்ளது. ஜெ5 ஸ்னாப்டிராகன் மற்றும் குவாட்கோர் சிபியு கொண்டிருக்கின்றது. ஜெ7 ARMADA மொபைல் PXA1936 சிப்செட், ஸ்னாப்டிராகன் 615 மற்றும் 1.5 ஜிபி ரேமும் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 வழங்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு
இரு ஸ்மார்ட்போன்களும் தற்சமயம் வரை சீன சந்தையில் மட்டும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications