ஃபோல்டபில் போன் வாங்க ஆசையா? அப்போ உங்கள் கைல ரூ. 3,042 இருந்தா போதும்! Samsung-ன் புது ஆஃபர்!

|

உங்களுடைய பழைய ஸ்மார்ட்போன் டிவைஸை புது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் டிவைஸாக மாற்ற விருப்பம் இருக்கிறதா? அப்போ, இந்த சலுகையை நீங்க கட்டாயம் மிஸ் பண்ணிடவே கூடாது. 'பிளாக்ஷிப் (Flagship)' என்ற வார்த்தையை படித்தவுடன், இந்த பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் எல்லாம் விலை அதிகமாச்சே, இதை எப்படி நாம் வாங்க முடியும், வேலைக்கே ஆகாது என்று உடனே ஒரு முடிவிற்கு வந்துவிடாதீர்கள். இந்த பதிவில் உள்ள படி செய்தால், வெறும் ரூ. 3,042 என்ற மாதாந்திர கட்டணத்துடன் புது Samsung பிரீமியம் ஸ்மார்ட்போன் வாங்கலாம்.

புது பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வாங்க வாய்ப்பு

புது பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வாங்க வாய்ப்பு

ஆம், நீங்கள் படித்தது சரி தான். உங்கள் கையில் மாதம் குறைந்தது 3,042 ரூபாய் இருந்தால் போதும், சாம்சங் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கக்கூடிய பிரீமியம் மற்றும் போல்டபில் ஸ்மார்ட்போன் டிவைஸ்களை நீங்கள் உடனே வாங்கி பயன்பெறலாம். சாம்சங் நிறுவனம் சமீபத்தில் சில நம்ப முடியாத சலுகைகளை அறிமுகம் செய்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வரிசையில், சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சலுகை தான், உங்களுடைய பழைய போனை புது பிரீமியம் ஸ்மார்ட்போனாக மாற்ற போகிறது.

இந்த சலுகையில் கீழ் எந்த மாடல்களை எல்லாம் நாம் வாங்க முடியும்?

இந்த சலுகையில் கீழ் எந்த மாடல்களை எல்லாம் நாம் வாங்க முடியும்?

சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Samsung Galaxy S22 சீரிஸ் போன்கள், Samsung Galaxy Z Fold 3 5G மற்றும் Samsung Galaxy Z Flip 3 5G போன்ற பிளாக்ஷிப் சாம்சங் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்பும் இந்திய பயனர்களுக்கு இந்த சலுகை மிகவும் பயனுள்ளதாக அமையும். சாம்சங் அறிவித்த சலுகையின் படி, பிளாக்ஷிப் போன்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் 24 மாத விலை இல்லாத EMI திட்டத்தின் மூலம், மாத தவணை மட்டும் செலுத்தி புதிய போன்களை எடுத்துச் செல்லலாம் என்று அறிவித்துள்ளது.

TV, AC-ஐ ரிமோட்டில் மட்டும் OFF செய்கிறீர்களா? அப்போ கரண்ட் பில் எகிறும் - வாம்பைர் பவர் லாஸ் சிக்கல்!TV, AC-ஐ ரிமோட்டில் மட்டும் OFF செய்கிறீர்களா? அப்போ கரண்ட் பில் எகிறும் - வாம்பைர் பவர் லாஸ் சிக்கல்!

சாம்சங் அறிவித்த புதிய நோ-காஸ்ட் EMI சலுகை

சாம்சங் அறிவித்த புதிய நோ-காஸ்ட் EMI சலுகை

இந்த புதிய நோ-காஸ்ட் இஎம்ஐ (No-Cost EMI) சலுகையானது, சாம்சங் கேலக்ஸி எஸ்22 மாடலை நீங்கள் தேர்வு செய்யும் போது, ரூ.3,042 என்ற தொடக்க இஎம்ஐ விருப்பத்துடன் இந்த சாதனத்தை நீங்கள் வாங்கி பயன்பெற முடியும். அதே சமயம் இந்த ஸ்மார்ட்போன் வேரியண்ட்டின் உயர்நிலை மாடலான சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா போன்ற போன்களை நீங்கள் வாங்க விரும்பினால் உங்களுடைய மாதாந்திர No-Cost EMI கட்டணம் ரூ.4,584 விலையை நெருங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

Samsung Galaxy S22 Ultra மாடலை கூட குறைந்த மாதாந்திர கட்டணத்துடன் வாங்கலாம்

Samsung Galaxy S22 Ultra மாடலை கூட குறைந்த மாதாந்திர கட்டணத்துடன் வாங்கலாம்

இந்த No-Cost EMI சலுகையை சாம்சங் நிறுவனம் HDFC வங்கியுடன் இணைந்து கிடைக்கச் செய்துள்ளது. இந்த சலுகை இப்போது ஆன்லைன் மற்றும் இந்தியாவில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் என்று சாம்சங் கூறியுள்ளது. தெரியாதவர்களுக்கு Samsung Galaxy S22 இன் அசல் விலை ரூ. 72,999 முதல் தொடங்குகிறது. அதே நேரத்தில் Samsung Galaxy S22 + மடலின் விலை இந்தியாவில் ரூ. 84,999 முதல் தொடங்குகிறது. அதேபோல், Samsung Galaxy S22 Ultra மாடலின் விலை ரூ. 1,34,999 முதல் தொடங்குகிறது.

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! இராணுவத்தின் புதிய கேட்ஜெட்.. சுவருக்கு பின்னால் நடப்பதை அப்படியே காட்டுமா?ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! இராணுவத்தின் புதிய கேட்ஜெட்.. சுவருக்கு பின்னால் நடப்பதை அப்படியே காட்டுமா?

போல்டபில் ஸ்மார்ட்போன்கள் மீதும் இந்த சலுகை கிடைக்கிறதா?

போல்டபில் ஸ்மார்ட்போன்கள் மீதும் இந்த சலுகை கிடைக்கிறதா?

நாங்கள் முன்பே சொன்னது போல, இந்த EMI சலுகை இப்போது உங்களுக்கு போல்டபில் ஸ்மார்ட்போன்கள் மீதும் கிடைக்கிறது. சாதராண ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி போர் அடித்து போனவர்களுக்கு இந்த போல்டபில் சாதனங்களை ட்ரை செய்து பார்க்க இது ஒரு அருமையான வாய்ப்பு என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சாம்சங்கின் போல்டபில் ஸ்மார்ட்போன்களான Samsung Galaxy Z Fold 3 மற்றும் Samsung Galaxy Z Flip 3 ஆகிய ஸ்மார்ட்போன் இப்போது முறையே ரூ.1,49,999 மற்றும் ரூ.84,999 என்ற விலை முதல் வாங்குவதற்கு கிடைக்கிறது.

ரூ. 3,541 மட்டும் உங்கள் கையில் இருந்தால் Samsung Galaxy Z Flip 3 வாங்கலாம்

ரூ. 3,541 மட்டும் உங்கள் கையில் இருந்தால் Samsung Galaxy Z Flip 3 வாங்கலாம்

Samsung Galaxy Z Flip 3 ஸ்மார்ட்போன் மாடலை நீங்கள் வாங்க விரும்பினால், மாதம் தோறும் நீங்கள் வெறும் ரூ. 3,541 மட்டும் செலுத்தினால் போதும் என்று நிறுவனத்தின் விதிமுறைகள் குறிப்பிடுகிறது. ஆம், Samsung Galaxy Z Flip 3 சாதனத்தின் அசல் விலை ரூ.84,999 என்பதனால், அடுத்த 24 மாதங்களுக்கு நீங்கள் No-Cost EMI விருப்பத்தை தேர்வு செய்யும் போது, உங்களுடைய மாதாந்திர EMI கட்டணம் ரூ. 3,541 என்ற விலை புள்ளியை நெருங்குகிறது. No-Cost EMI விருப்பத்தில் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை வாங்குவது சிறந்த ஒப்பந்தமாகும்.

லேப்டாபை கூட சார்ஜ் செய்யும் 50,000mAh பவர் பேங்க் டிவைஸா? இது என்ன விலை தெரியுமா?லேப்டாபை கூட சார்ஜ் செய்யும் 50,000mAh பவர் பேங்க் டிவைஸா? இது என்ன விலை தெரியுமா?

கூடுதலாக இந்த கேட்ஜெட்ஸை கூட கம்மி விலையில் வாங்கலாமா?

கூடுதலாக இந்த கேட்ஜெட்ஸை கூட கம்மி விலையில் வாங்கலாமா?

இதேபோல், மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மாடல்கள் மீதும் இந்த சலுகை இப்போது கிடைக்கிறது. இத்துடன், Samsung Galaxy S22 Ultra மாடலை தேர்வும் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, கூடுதலாக, 24 மாத கட்டணமில்லா EMI சலுகையை வாங்கும் போது. Samsung Galaxy Watch 4 டிவைஸை அதன் முழு விலைக்கு பதிலாக வெறும் ரூ.2,999 விலை கொடுத்து நீங்கள் வாங்க முடியும். மேலும், Samsung Galaxy S22+ அல்லது Samsung Galaxy S22 மாடலை வாங்குபம் போது Samsung Galaxy Buds 2 சாதனத்தை வெறும் ரூ.2,999 செலவில் வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Samsung Announces 24 Month Of No Cost EMI Plans For Premium Flagship And Foldable Smartphones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X