போதும் போதும்னு சொல்ல வைக்கும் சாம்சங்: ஆஃபர்கள் அள்ளி குவிக்கும் Samsung S20

|

சாம்சங் நிறுவனம் அன்மையில் தனது கேலக்ஸி எஸ்20, கேலக்ஸி எஸ்20பிளஸ், கேலக்ஸி எ20 அல்ட்ரா சாதனங்களை அமெரிக்காவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கேலக்ஸி எ20 மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டள்ளது.

 கேலக்ஸி எஸ்20, கேலக்ஸி எஸ்20பிளஸ், கேலக்ஸி எ20 அல்ட்ரா

கேலக்ஸி எஸ்20, கேலக்ஸி எஸ்20பிளஸ், கேலக்ஸி எ20 அல்ட்ரா

சாம்சங் இணையதளத்தில் அதன்படி கேலக்ஸி எஸ்20, கேலக்ஸி எஸ்20பிளஸ், கேலக்ஸி எ20 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களின் முன்பதி இன்று மதியம் 12மணி அளவில் தொடங்கியது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் வரும் மார்ச் 6-ம் தேதி முதல் இந்தியாவில் அனைத்து இடங்களிலும் விற்பனைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே வசதி

டிஸ்பிளே வசதி

சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே வசதியுடன் 563ppi பிக்சல் density ஆதரவைக் கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்20பிளஸ் ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே வசதியுடன் 525ppi பிக்சல் density ஆதரவைக் கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.9-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே வசதியுடன் 511ppi பிக்சல் density ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த மூன்று ஸ்மாரட்போன்களும் எச்டிஆர் 10 + சான்றிதழுடன் 120 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன் புதுப்பிப்பு வீதத்துடன் வருகின்றன.

இனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை?இனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை?

சாம்சங் கேலக்ஸி எஸ்20 கேமரா வசதி

சாம்சங் கேலக்ஸி எஸ்20 கேமரா வசதி

சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ் + 12எம்பி வைட் ஆங்கிள் கேமரா + 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 10எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்20பிளஸ் கேமரா வசதி

சாம்சங் கேலக்ஸி எஸ்20பிளஸ் கேமரா வசதி

சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ் + 12எம்பி வைட் ஆங்கிள் கேமரா+ 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + டெப்த் விஷன் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 10எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா கேமரா வசதி

கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா கேமரா வசதி

கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா கேமரா ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 108எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் 10 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + டெப்த் விஷன் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 40எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

அருமையான சிப்செட் வசதி

அருமையான சிப்செட் வசதி

கேலக்ஸி எஸ்20 சீரிஸ் சாதனங்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865சிப்செட் வசிதயுடன் 12GB of LPDDR5 ஆரவையும் கொண்டுள்ளது, மேலும் கேலக்ஸி எஸ்20 5ஜி சாதனம் ஆனது 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. இதுதவிர கேலக்ஸி எஸ்20பிளஸ் 5ஜி மற்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 5ஜி சாதனங்கள் 128ஜிபி/512 உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி அமைப்பு

பேட்டரி அமைப்பு

கேலக்ஸி எஸ்20 5ஜி ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 25வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. கேலக்ஸி எஸ்20பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 25வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 45வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10

ஆண்ட்ராய்டு 10

இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது, மேலும் ஜி.பி.எஸ்., கலிலியோ, க்ளோனாஸ், பீடோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த மூன்று கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்கள்.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 விலை

சாம்சங் கேலக்ஸி எஸ்20 விலை

சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போனின் விலை ரூ.66, 999-ஆக உள்ளது, அதேபோல் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.73,999-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை ரூ.92,999-ஆக உள்ளது.

கேலக்ஸி எஸ் 20+ மற்றும் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா

கேலக்ஸி எஸ் 20+ மற்றும் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா

கேலக்ஸி எஸ் 20+ மற்றும் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா ஆகியவற்றை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் கேலக்ஸி பட்ஸ்+ ஆனது வெறும் ரூ.1,999-க்கு கிடைக்கிறது. அதேபோல் கேலக்ஸி எஸ்20 மாடலை வாங்குபவர்களுக்கு கேலக்ஸி பட்ஸ் வெறும் ரூ.2,999-க்கு வாங்க கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

போன்களுடன் பிற நிறுவனங்கள் கூட்டு சேர்ப்பு

போன்களுடன் பிற நிறுவனங்கள் கூட்டு சேர்ப்பு

அதேபோல் சாம்சங் கேர் ப்ளஸ்-ன் அசல் விலையானது ரூ,3.999-க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அது வெறும் ரூ.1,999-க்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த போன்களுடன் பிற நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து உள்ளனர்.

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 சீரிஸ் போன்களுடன் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்கள் கூட்டு சேர்ந்துள்ளது. ஜியோவின் ஆண்டு திட்டமான ரூ. 4,999 மீது டபுள் டேட்டா சலுகை மற்றும் கூடுதல் ஓராண்டு வரம்பற்ற சேவை கிடைக்கிறது.

ஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை! குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி!ஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை! குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி!

டபுள் டேட்டா நன்மைகள்

டபுள் டேட்டா நன்மைகள்

அதேபோல் ஏர்டெல் ரூ.298 அல்லது ரூ.398 பிளான் முதல் 10 முறை தொடர்ச்சியாக ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு டபுள் டேட்டா நன்மைகள் கிடைக்கிறது. வோடபோன் மற்றும் ஐடியா பொருத்தவரை ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் ஆறுமுறை டபுள் டேட்டா பலன்கள் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung announced more bonus on galaxy S20 series

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X