சாம்சங் அட்டகாச அறிவிப்பு: மாதம் ரூ.3,042 போதும்- கேலக்ஸி எஸ் 22, எஸ்22+, ஃபோல்ட் சாதனங்களை சொந்தமாக்கலாம்!

|

வாடிக்கையாளர்கள் சாம்சங்கின் ப்ரீமியம் சாதனங்களை சொந்தமாக்க சரியான நேரமாகும். சந்தையில் கிடைக்கும் ப்ரீமியம் சாதனங்களை பட்டியலிட்டால் அதில் பிரதானமாக இருப்பது ஐபோன் மற்றும் சாம்சங் போன்கள் தான். வாடிக்கையாளர்கள் எளிதான முறையில் ப்ரீமியம் சாதனங்களை வாங்கும் வகையில் சாம்சங், 24 மாதம் No Cost இஎம்ஐ சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையை பெறுவதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

24 மாத No Cost இஎம்ஐ சலுகை

24 மாத No Cost இஎம்ஐ சலுகை

சாம்சங் நிறுவனம் தனது ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி எஸ்22, கேலக்ஸி எஸ்22+, கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா, கேலக்ஸி இசட் ஃபோல்ட்3 5ஜி மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 5ஜி ஆகிய சாதனம் வாங்குபவர்களுக்கு 24 மாத No Cost இஎம்ஐ சலுகையை அறிவித்துள்ளது. இதற்காக நிறுவனம் HDFC வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த இஎம்ஐ சலுகையுடன் சாதனங்களை எங்கு வாங்கலாம்.

HDFC வங்கி மூலம் பரிவர்த்தனை செய்யலாம்

HDFC வங்கி மூலம் பரிவர்த்தனை செய்யலாம்

நிறுவனத்தின் தகவல்படி, மேலே குறிப்பிட்டுள்ள ப்ரீமியம் சாதனங்களை HDFC வங்கி கார்ட் மூலமாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். நாடு முழுவதும் உள்ள அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் பெறலாம். எந்தெந்த சாதனங்களுக்கு மாதம் எவ்வளவு இஎம்ஐ கட்ட வேண்டும் என்ற விவரங்களை பார்க்கலாம்.

கேலக்ஸி எஸ்22 தொடருக்கான இஎம்ஐ விருப்பம்

கேலக்ஸி எஸ்22 தொடருக்கான இஎம்ஐ விருப்பம்

No Cost இஎம்ஐ விருப்பத்தின் மூலமாக சாம்சங் கேலக்ஸி எஸ்22 மற்றும் கேலக்ஸி எஸ்22+ சாதனத்தை மாதம் ரூ.3042 என்ற வீதத்தில் வாங்கலாம். அதேபோல் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா சாதனத்தை மாதம் ரூ.4584 என்ற மாதாந்திர இஎம்ஐ விருப்பத்தில் வாங்கலாம். அதோடு கேலக்ஸி இசட் ஃபோல்ட்3 5ஜி மற்றும் கேலக்ஸி ஃப்ளிப்3 5ஜி சாதனத்தையும் 24 மாத No Cost இஎம்ஐ விருப்பத்தில் வாங்கலாம்.

கேலக்ஸி வாட்ச் மற்றும் கேலக்ஸி பட்ஸ்-க்கு கூடுதல் சலுகை

கேலக்ஸி வாட்ச் மற்றும் கேலக்ஸி பட்ஸ்-க்கு கூடுதல் சலுகை

24 மாத No Cost இஎம்ஐ விருப்பத்தின் மூலம் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா சாதனம் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் கேலக்ஸி வாட்ச் 4ஐ ரூ.2,999 என சலுகை விலையில் வாங்கலாம். அதேபோல் கேலக்ஸி எஸ்22+ அல்லது கேலக்ஸி எஸ்22 சாதனம் வாங்கும் போது கேலக்ஸி இயர்பட்ஸை ரூ.2999 என சலுகையில் விலையில் வாங்கலாம்.

அனைவருக்கும் ப்ரீமியம் சாதனங்கள்

அனைவருக்கும் ப்ரீமியம் சாதனங்கள்

சாம்சங்கின் சமீபத்திய தொழில்நுட்பத்தை அதிக வாடிக்கையாளர்கள் அனுபவிக்க இந்த சலுகை உதவும் என சாம்சங் இந்தியாவின் மூத்த இயக்குனரும் தயாரிப்பு சந்தைப்படுத்தல் தலைவருமான ஆதித்யா பப்பர் கூறினார்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 விலை விவரங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 விலை விவரங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 விலை ஆனது ரூ.72,999 என தொடங்குகிறது. அதேபோல் கேலக்ஸி எஸ்22+ ஆனது ரூ.84,999 என தொடங்குகிறது. கேலக்ஸி எஸ்22 தொடரின் உயர்நிலை மாடலான கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ரூ.1,34,999 முதல் கிடைக்கிறது. கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 ஸ்மார்ட்போனானது ரூ.1,49,999 எனவும் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3 ஆனது ரூ.84,999 முதல் தொடங்குகின்றன.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி

சாம்சங் கேலக்ஸி எஸ்22 தொடரின் உயர்நிலை மாடலாக சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, 3080 x 1440பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.80' இன்ச் அளவு கொண்ட உயர் திறன் டைனமிக் அமோலெட் 2எக்ஸ் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்டஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கிறது. இந்த டிஸ்பிளே எச்டிஆர் 10 மற்றும் எச்டிஆர்+ ஆதரவுடன் பன்ச் ஹோல் கட்-அவுட் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா கேமரா விவரங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா கேமரா விவரங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் கேமராக்களைப் பொறுத்த வரையில், இது எஃப்/1.8 துளையுடன் கூடிய 108 மெகாபிக்சல் (வைட்) முதன்மைக் கேமராவைக் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பைப் பேக் செய்கிறது. இத்துடன் எஃப்/2.2 துளை கொண்ட 12 மெகாபிக்சல் (அல்ட்ரா) கேமரா, எஃப்/4.9 துளை கொண்ட 10 மெகாபிக்சல் (பெரிஸ்கோப் டெலிபோட்டோ) கேமரா மற்றும் எஃப்/2.4 துளை கொண்ட 10 மெகாபிக்சல் (டெலிபோட்டோ) கேமராவுடன் கிடைக்கிறது. முன்பக்கத்தில் எஃப்/2.2 துளை கொண்ட 40 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் மற்றும் ஃப்ளிப் சாதனங்கள்

சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் மற்றும் ஃப்ளிப் சாதனங்கள்

அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் மற்றும் ஃப்ளிப் சாதனங்களின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.2 இன்ச் AMOLED பேனலைக் கொண்ட கவர் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸின் பாதுகாப்பு மற்றும் 25: 9 என்ற விகித விகிதத்துடன் வருகிறது. மறுபுறம், Z Flip 3 சாதனம் 6.7' இன்ச் முதன்மை டிஸ்பிளே மற்றும் 1.9 இன்ச் கவர் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸால் பாதுகாக்கப்படுகிறது.

சாம்சங் இசட் ஃபோல்ட் 3 கேமரா அம்சங்கள்

சாம்சங் இசட் ஃபோல்ட் 3 கேமரா அம்சங்கள்

சாம்சங் இசட் ஃபோல்ட் 3 சாதனம் உள்ளே 4 எம்பி டிஸ்ப்ளே கேமரா மற்றும் கவர் திரையில் 10 எம்பி செல்ஃபி கேமராவை வைத்துள்ளது. இந்த சாதனம் 12 எம்பி முக்கிய சென்சார், 12 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 12 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பு கொண்டுள்ளது. சாம்சங் Z Flip 3 ஆனது 12MP + 12MP இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் 10Mp செல்பி ஸ்னாப்பரை கொண்டுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி

ஹூட்டின் கீழ், இரண்டு போன்களும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. சாம்சங் Z ஃபோல்ட் 3 இல் 12GB ரேம் மற்றும் சாம்சங் Z Flip 3 இல் 8GB உடன் இணைக்கப்பட்டுள்ளது. சாம்சங் Z ஃபோல்ட் 3 25W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 4,400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. ஃப்ளிப் 3 15W சார்ஜிங் வேகத்துடன் 3,300mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung announced 24 Month No Cost EMI offers for Premium smartphones: Right time to buy

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X