இந்த 'மேட்டர்' தெரிஞ்சா 108MP, 200MP கேமரா போனை வாங்கவே மாட்டீங்க!

|

விஞ்ஞானியும் புகைப்படக் கலைஞருமான டாக்டர் ரோஜர் கிளார்க் கருத்துப்படி, மனித கண்ணின் ரெசல்யூஷன் 576 மெகாபிக்சல்கள் ஆகும்.

அதாவது உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் 64MP கேமரா இருந்தாலும் சரி அல்லது அது ஒரு 108MP கேமராவாக இருந்தாலும் சரி, உங்கள் கண்ணின் மெகாபிக்சல் நிச்சயம் அதை விட அதிகம்; பெரியது!

அடுத்தது என்ன? 200MP தானே? என்று கேட்டால் - அதுதான் இல்லை!

அடுத்தது என்ன? 200MP தானே? என்று கேட்டால் - அதுதான் இல்லை!

நம் கண்ணின் மெகாபிக்சல் 576 என்கிற தகவலை இங்கே குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது என்ன காரணம் என்று போகப்போக உங்களுக்கே புரியும்!

பெரிதாக என்ன இருக்க போகிறது? அடுத்தது என்ன 200MP கேமராவை பேக் செய்யும் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அது தானே? என்று கேட்டால்.. அதுதான் இல்லை - அதுக்கும் மேல!

Google Maps-ல் அசத்தல் அம்சம்; இனி Google Maps-ல் அசத்தல் அம்சம்; இனி "Reached Safely" மெசேஜ் அனுப்ப வேண்டிய அவசியமே இல்ல!

ஏற்கனவே 200MP-க்கு அடிதடி நடந்து கொண்டிருக்கிறது!

ஏற்கனவே 200MP-க்கு அடிதடி நடந்து கொண்டிருக்கிறது!

உலகின் முதல் 200MP கேமராவை அறிமுகம் செய்யப்போவது யார்? என்கிற போட்டியில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமியும், அமெரிக்க நிறுவனமான மோட்டோரோலாவும் தீயாக வேலை செய்து கொண்டிருக்கின்றன.

இந்த போட்டியில் ரெட்மி கே50 எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனை விட மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ஒருபடி முன்னே நிற்கிறது என்றே கூறலாம்.

இந்நிலைப்பாட்டில் 200MP கேமராவை

இந்நிலைப்பாட்டில் 200MP கேமராவை "கலாய்க்கும் படி" வெளியான ஒரு தகவல்!

மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா ஆனது வருகிற ஆகஸ்ட் மாதமே அறிமுகம் செய்யப்படலாம் என்பது போல் தெரிகிறது. மறுகையில் உள்ள ரெட்மி நிறுவனமானது இப்போது தான் 200MP கேமரா போனில் வேலை செய்வது போல் தெரிகிறது; அது அறிமுகமாக இன்னும் கொஞ்சம் காலம் ஆகலாம்.

இந்நிலைப்பாட்டில், "தம்பிகளா கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க!" என்று கலாய்க்கும் வண்ணம் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?

அதென்ன தகவல்?

அதென்ன தகவல்?

அது "சாம்சங் ஏற்கனவே 400 - 450MP ஸ்மார்ட்போன் கேமராவை உருவாக்கி வருகிறது" என்கிற தகவலே ஆகும். இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாங்கள் ஏன் மனிதக் கண்ணின் மெகாபிக்சல் அளவை குறிப்பிட்டோம் என்று இப்போது உங்களுக்கு புரியும் என்று நம்புகிறோம்.

மற்ற நிறுவனங்கள் 200MP கேமரா ஸ்மார்ட்போனிற்காக "அடித்துக்கொள்ளும்" வேளையில் சாம்சங் சைலன்ட் ஆக 450எம்பி கேமராவில் வேலை செய்து வந்துள்ளது.

இனிமேல் Megapixel இல்லை.. Hexa²pixel என்று கூறுங்கள்!

இனிமேல் Megapixel இல்லை.. Hexa²pixel என்று கூறுங்கள்!

நாம் மேலே பார்த்த ரெட்மி மற்றும் மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு கூட, 200MP சென்சாரை (ISOCELL HP1) தருவது "நம்ம" சாம்சங் நிறுவனம் தான் என்பதால், 400எம்பி - 450எம்பி கேமரா சென்சாரை சாம்சங் உருவாக்குவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

சாம்சங் நிறுவனத்தின் 450MP கேமரா சென்சார் ஆனது தற்போது வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன் கேமரா சென்சாரின் ரெசல்யூஷனை "இரட்டிப்பாக்கும்" என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இன்னும் சுவாரசியமாக, சாம்சங் நிறுவனம் இந்த சென்சாரை "Hexa²pixel" என்று கூறுகிறது. இதை "Image sensors for photographic devices" (புகைப்பட சாதனங்களுக்கான இமேஜ் சென்சார்கள்) என்றும் குறிப்பிடுகிறது.

இந்த லிஸ்டில் உள்ள Xiaomi, Redmi, Poco போன் உங்ககிட்ட இருக்கா? ரொம்ப பாவம் நீங்க!இந்த லிஸ்டில் உள்ள Xiaomi, Redmi, Poco போன் உங்ககிட்ட இருக்கா? ரொம்ப பாவம் நீங்க!

டெக்னீக்கல் ஆக சொல்ல வேண்டும் என்றால்..?

டெக்னீக்கல் ஆக சொல்ல வேண்டும் என்றால்..?

புகழ்பெற்ற டிப்ஸ்டர்களில் ஒருவரான IceUniverse வழியாகவே சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய சென்சார் பற்றிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

சுமார் 400 - 450MP ரெசல்யூஷனை கொண்டிருக்கும் என்று கூறப்படும் இந்த கேமரா சென்சார் ஆனது புதிய ஹெக்ஸா²பிக்சல் 36-இன்-1 பிக்சல் பின்னிங் சிஸ்டம்-ஐ பயன்படுத்துகிறது.

இதன் அடிப்படையில் 6x6 பிக்சல்கள் கொண்ட ஒரு கிரிட்-இல் 36 பிக்சல்கள் கொண்ட க்ரூப், ஒரு பெரிய பிக்சலாக ஒன்றிணைக்கப்படுகிறது, இது டெட்ராசெல் (2x2) மற்றும் நானோபிக்சல் (3X3) ஆகியவற்றின் தற்போதைய 'அரேன்ஞ்மென்ட்'களை விட அதிகமாகும்.

12MP தான் அவுட்புட் என்றால்... மொத்தம் 432MP ஆச்சு!

12MP தான் அவுட்புட் என்றால்... மொத்தம் 432MP ஆச்சு!

டெட்ராசெல் மற்றும் நானோபிக்சல் பின்னிங் சிஸ்டம்களை போன்று இதன் டார்கெட் அவுட்புட் 12எம்பி எனில், கணக்கிடக்கூடிய ஒட்டுமொத்த ரெசல்யூஷன் 432எம்பி ஆக இருக்கும்.

இந்த எல்லா சாத்தியக்கூறுகளையும் வைத்து பார்க்கும் போது, சாம்சங் நிறுவனம் ஒரு 450எம்பி கேமராவில் பணியாற்றுவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆக எப்படி பார்த்தாலும், இது Samsung தற்போது வழங்கும் 200MP சென்சார்களின் ரெசல்யூஷனை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

நினைவூட்டும் வண்ணம், ISOCELL HP1 ஆனது 1/1.22-இன்ச் சென்சார் ஆகும்; இதன் பிக்சல் அளவு 0.64µm ஆகும். ISOCELL HP3 என்பது 1 /1.4-இன்ச் சென்சார் ஆகும்; இதன் ஒவ்வொரு பிக்சலும் 0.56µm அளவில் இருக்கும்.

சைலன்ட் ஆக Google பார்த்த வேலை; இந்தியாவிற்கு வந்தது Street View; யூஸ் செய்வது எப்படி?சைலன்ட் ஆக Google பார்த்த வேலை; இந்தியாவிற்கு வந்தது Street View; யூஸ் செய்வது எப்படி?

இதென்ன பிரமாதம்? 600MP கேமராவிலும் வேலை நடக்கிறதாம்!

இதென்ன பிரமாதம்? 600MP கேமராவிலும் வேலை நடக்கிறதாம்!

ஒப்பீட்டளவில், 200எம்பி கேமரா ஆனது 450எம்பி கேமராவை விட மிகவும் சிறியதாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால்.. அப்போது 600MP கேமரா எப்படி இருக்கும்?

அட ஆமாங்க!

சில ஆண்டுகளுக்கு முன்பு சாம்சங் நிறுவனம் 1/0.57-இன்ச் ஆப்டிகல் சென்சார்-ஐ கொண்ட, 600எம்பி அளவிலான ஹை-ரெசல்யூஷன் கொண்ட சென்சார்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக ஒரு வதந்தி வெளியானது.

தற்போது சாம்சங் நிறுவனத்தின் Hexa²pixel சென்சாரை பார்க்கும் போது அது உண்மையான தகவலாக இருக்குமோ என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் 450எம்பி என்பதே 600MP-யில் "கிட்டத்தட்ட" பாதி அல்லவா?

450எம்பி கேமரா சென்சார்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் அடுத்த சில ஆண்டுகளில் நம் கைகளில் இருக்கலாம் என்றும் நாங்கள் நம்புகிறோம்; பார்க்கலாம்!

Photo Courtesy: Samsung

Best Mobiles in India

English summary
Samsung Already Working on 450MP Hexa²pixel Camera While Others Fighting For First 200MP Camera Phone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X