Home
News

Samsung போன் ஓனர்களுக்கு எச்சரிக்கை.. Settings-ல் உள்ள இந்த Anti-theft அம்சத்தை ON பண்ணுங்க.. இல்லனா?

நாளுக்கு நாள் மொபைல் போன் திருட்டுகள் (Mobile Phone Thefts) அதிகரித்து வருகின்றன, அதை எதிர்த்துப் போராட சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் ஓனர்களுக்கு முக்கிய யோசனை (அல்லது எச்சரிக்கை) ஒன்று கூறியுள்ளது. அது என்ன யோசனை? இது எப்படி வேலை செய்யும்? என்னென்ன சாம்சங் ஸ்மார்ட்போன்களில் இதை செயல்படுத்த முடியும்? இதோ விவரங்கள்:

சாம்சங் நிறுவனம் - அதன் ஒன்யுஐ 7 அப்டேட் (One UI 7 Update) வழியாக, மேம்படுத்தப்பட்ட ஆன்ட்டி-தெஃப்ட் அம்சங்கள் (Updated anti-theft features) மற்றும் புதிய ஆன்ட்டி-ராபரி அம்சங்களை (New anti-robbery features) பெறும் சாதனங்களின் பட்டியலை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது.

Samsung: Settings-ல் உள்ள இந்த Anti-theft அம்சத்தை ON பண்ணுங்க!

நினைவூட்டும் வண்ணம் இந்த அம்சங்கள் ஆரம்பத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Samsung Galaxy S25 Series) மாடல்களில் வெளியிடப்பட்டன. மேலும் கடந்த சில மாதங்களில் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் (Galaxy S24 Series), கேலக்ஸி எஸ்23 சீரீஸ் (Galaxy S23 Series) மற்றும் கேலக்ஸி எஸ்22 சீரீஸ் (Galaxy S22 Series) ஆகிய மாடல்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது

மேலும் இந்த அம்சங்கள் சாம்சங் நிறுவனத்தின் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் ஆன கேலக்ஸி இஸட் போல்ட் 6 (Galaxy Z Fold 6), கேலக்ஸி இஸட் பிளிப் 6 (Galaxy Z Flip 6) கேலக்ஸி இஸட் போல்ட் 5 (Galaxy Z Fold 5), கேலக்ஸி இஸட் பிளிப் 5 (Galaxy Z Flip 5) ஆகிய மாடல்களிலும் சேர்க்கப்பட்டது.

தற்போது இந்த அம்சங்கள் விரைவில் இன்னும் அதிகமான கேலக்ஸி போன்களுக்குக் கிடைக்கும் என்பதை சாம்சங் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அம்சங்கள் கூகுளின் (Google) ஸ்டாண்டர்ட் ஆண்ட்ராய்டு சேஃப்டி ப்ரொடெக்ஷனின் (Standard Android safety protection) கீழ் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த அம்சங்கள் - அக்சஸ் கிரென்ட்டிஷியல்ஸ் (பாஸ்வேர்ட்ஸ்) அல்லது ஆஃப்லைன் செக்யூரிட்டி அம்சங்கள் சமரசம் செய்யப்படும்போது கூடுதல் பாதுகாப்பை வழங்குகின்றன.

ஒன் யுஐ 7 அப்டேட்டில் உள்ள புதிய தெஃப்ட் ப்ரொடெக்ஷன் அம்சங்களில் - தெஃப்ட் டிடெக்ஷன் லாக் (Theft Detection Lock), ஆஃப்லைன் டிவைஸ் லாக் (Offline Device Lock) மற்றும் ரிமோட் லாக் (Remote Lock) ஆகிய அம்சங்கள் உள்ளன.

Samsung: Settings-ல் உள்ள இந்த Anti-theft அம்சத்தை ON பண்ணுங்க!

மேலும், சாம்சங் நிறுவனம் ஐடென்டிட்டி செக் (Identity Check) மற்றும் செக்யூரிட்டி டிலே (Security Delay) போன்ற புதிய ஆன்ட்டி-ராபரி அம்சங்களையும் ஒன்யுஐ 7 அப்டேட்டில் சேர்த்துள்ளது. மேலே உள்ள அம்சங்களை ஆன் செய்ய, தகுதியான கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை கொண்டுள்ள பயனர்கள் செட்டிங்ஸ் (Settings) சென்று தெஃப்ட் ப்ரொடெக்ஷன் டூலை (Theft Protection tool) அணுகலாம்.

இதுவொரு பக்கம் இருக்க ஆண்ட்ராய்டு 16 அப்டேட் (Android 16 Update) ஆனது பாதுகாப்பு மற்றும் தனியுரிமை (Security and Privacy) தொடர்பான விஷயங்களை இன்னும் வலுப்படுத்த உள்ள நிலையில், சாம்சங் நிறுவனம் அதன் ஒன் யுஐ 8 அப்டேட்டில் (One UI 8) சில சொந்த மாற்றங்களை செய்யும் செய்யவுள்ளது. இந்த அப்டேட்டின் புதிய ஏபிகே (APK) வழியாக சாம்சங் நிறுவனம் அலெர்ட் சென்டர் (Alert Center) என்கிற அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது தெரியவந்துள்ளது

ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி (Android Authority) வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கையின்படி, சாம்சங் நிறுவனம் அதன் ஒன் யுஐ 8 அப்டேட் அதன் பாதுகாப்பு அம்சங்களின் பட்டியலில் "அலெர்ட் சென்டர்" என்கிற அம்சத்தை சேர்க்கிறது. இந்த புதிய அம்சம் மிகவும் வலுவான நோட்டிபிகேஷன் சிஸ்டம் (Notification System) ஆக இருக்கும். இது பயனர்களை "எளிதில் ஏமாற்றக்கூடிய" பாதுகாப்பு குறைபாடுகள் (Security flaws) குறித்து எச்சரிக்கும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Alert Galaxy Phone Users to turn on new Anti theft anti robbery features in One UI 7 Settings
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X