Home
News

CES 2024.. AI தொழில்நுட்பத்துடன் அறிமுகமான சாம்சங் சாதனங்கள்.!

உலகம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி வேகமடைந்து வருகிறது, குறிப்பாக வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். அந்த வகையில் சில மாதங்களில் உலகைப் புரட்டிப் போட்டுள்ள ஒரு தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு என்னும் ஏஐ தொழில்நுட்பம் ஆகும்.

பல துறைகளிலும் இந்த AI தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அதை ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல்வேறு சாதனங்களில் புகுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். அதேபோல் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் சாம்சங்கின் டிவைஸ் எக்ஸ்பீரியன்ஸ் (டிஎக்ஸ்) பிரிவின் துணைத் தலைவர், சிஇஓ மற்றும் தலைவரான ஜாங்-ஹீ (ஜேஹெச்) ஹான் Jong-Hee (JH) Han அவர்கள் இந்த ஏஐ தொழில்நுட்பம் குறித்து சில முக்கிய விவரங்களைத் தெரிவித்தார்

CES 2024.. AI தொழில்நுட்பத்துடன் அறிமுகமான சாம்சங் சாதனங்கள்.!

அதாவது மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்த AI இணைக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் எவ்வாறு செயல்படும் என்பதை விவரித்தார் ஜாங்-ஹீ (ஜேஹெச்) ஹான். குறிப்பாக வீடு மற்றும் பணியிடங்களில் புதிய யுஐ தொழில்நுட்பம், நமது வேலையை மிகவும் திறமையாகச் செய்ய உதவும் என்று கூறினார்.

அதேபோல் நீங்கள் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது அழைப்புகளை மொழிபெயர்க்க AI ஐப் பயன்படுத்துகிறது. OneUI இன் இயல்புநிலை டயலர் செயலி மூலம் பயன்படுத்துகிறது. பயனர்கள் அழைப்பில் இருக்கும்போது திரையில் தோன்றும் 'Call Assist' பட்டனை கிளிக் செய்வதன் மூலம் அம்சத்தை இயக்க முடியும். இது போன்று பல ஏ.ஐ தொழில்நுட்பங்களை கேலக்ஸி S24 சீரிஸில் சாம்சங் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

AI-இயக்கப்பட்ட விஷுவல் டிஸ்ப்ளே தயாரிப்புகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் வீட்டிற்கு புதிய அனுபவங்களைக் கொண்டு வருகின்றன. CES செய்தியாளர் சந்திப்பின் போது, சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் அமெரிக்காவின் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் தலைவர் ஜொனாதன் கேப்ரியோ, AI தொழில்நுட்பம் மூலம் விஷுவல் டிஸ்ப்ளே தயாரிப்புகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைத் தெளிவாகக் கூறினார்.

CES 2024.. AI தொழில்நுட்பத்துடன் அறிமுகமான சாம்சங் சாதனங்கள்.!

அதாவது Samsung Neo QLED 8K QN900D சாதனத்தில் பில்ட்-இன் ஏஐ பிராசஸர் எப்படி வேலை செய்கிறது என்று விரிவாகக் கூறினார். இந்த டிவியில் 8 மடங்கு அதிக AI நியூரல் நெட்வொர்க் மற்றும் இரண்டு மடங்கு வேகமான NPU ஆகியவற்றைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் Samsung Neo QLED 8K மாடல் ஆனது 8கே குவாலிட்டி வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த டிவியில் ஏஐ வாய்ஸ் கண்ட்ரோல் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற புதிய ஏஐ தொழில்நுட்பம் ஆனது உங்கள் பொழுதுபோக்கு அனுபவத்தை மேம்படுத்தும். இதுபோன்ற ஏஐ தொழில்நுட்பம் ஸ்மார்ட் டிவிகளில் வருவது மிகப் பெரிய மாற்றத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.

சாம்சங் நிறுவனம் புதிய Premiere 8K ப்ரொஜெக்டரை அறிமுகப்படுத்தியது. இந்த ப்ரொஜெக்டர் 150-இன்ச் ஸ்கிரீன் சைஸ் கொண்டுள்ளது. அதேபோல் உலகின் முதல் வயர்லெஸ் 8K டிரான்ஸ்மிஷனையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ப்ரொஜெக்டர். Premiere 8K மூலம் ஒரு தியேட்டர் அனுபவத்தைப் பெறமுடியும்.

அதேபோல் சாம்சங் நிறுவனம் மியூசிக் ஃபிரேமை அறிமுகப்படுத்தியது. இதை தனி ஸ்பீக்கராக பயன்படுத்தலாம் அல்லது இணக்கமான சாம்சங் டிவிகள் மற்றும் சவுண்ட்பார்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம். மியூசிக் ஃபிரேம் சாம்சங்கின் சொந்த ஃபிரேம் டிவிகளால் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக இந்த ஸ்பீக்கர் தனித்துவமான ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

சிஇஎஸ் 2020-ல் அறிமுகம் செய்யப்பட்ட ரோலிங் ஏஐ ரோபவான Balli-ஐ சாம்சங் நிறுவனம் மேலும் மேம்படுத்தியுள்ளது. அதாவது அனைத்து பணிகளைக் கவனித்துக்கொள்வது அல்லது படங்கள் மற்றும் வீடியோக்களை முன்வைப்பது போன்ற தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை வழங்கும். இதுதவிர AI துணையுடன் மற்ற ஸ்மார்ட் சாதனங்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த Balli-ஐ சாம்சங் உருவாகியுள்ளது. இந்த ரோபோ மூலம் அனைத்து முக்கிய தகவல்களையும் தெரிந்துகொள்ள முடியும்.

CES 2024.. AI தொழில்நுட்பத்துடன் அறிமுகமான சாம்சங் சாதனங்கள்.!

சாம்சங் பெஸ்போக் 4-டோர் ஃப்ளெக்ஸ் குளிர்சாதனப்பெட்டியை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் கூட ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த குளிர்சாதனப்பெட்டி புதிய AI விஷன் இன்சைட்3 அம்சத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது 32-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் சமையல் குறிப்புகளை பரிந்துரைக்கிறது இந்த சாம்சங் பெஸ்போக் 4-டோர் ஃப்ளெக்ஸ் குளிர்சாதனப்பெட்டி.

இதுதவிர சாம்சங் கேலக்ஸி புக் 4, சாம்சங் டிவி, ரோபோ கிளீனர், ஸ்மார்ட்வாட்ச், வாஷிங் மெஷின், ஸ்மார்ட் ரிங், உள்ளிட்ட பல்வேறு சாதனங்களில் இந்த ஏஐ தொழில்நுட்பத்தைச் சேர்த்துள்ளது சாம்சங் நிறுவனம். குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட ஏஐ தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துகிறது சாம்சங் நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung AI for All Vision Unveiled at CES 2024: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X