தீப்பிடித்து உருகிய சாம்சங் கேலக்ஸி எஸ்3 ஸ்மார்ட்போன்!

Posted By: Karthikeyan
தீப்பிடித்து உருகிய சாம்சங் கேலக்ஸி எஸ்3 ஸ்மார்ட்போன்!

மொபைல் சந்தையில் ஆப்பிளுக்கு இணையாக மல்லுக்கட்டி வரும் சாம்சங் கடந்த மாதம் தனது சாம்சங் கேலக்ஸி III என்ற ஸ்மார்ட்போனை களமிறக்கியது. அனைவராலும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் இப்போது நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

தற்போது இந்த கேலக்ஸி போன் வெடித்து சிதறியதாக ஒரு புகார் வந்திருக்கிறது. அயர்லாந்தைச் சேர்ந்த டைலன் கெர்சா என்பவர் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் டேஷ்போர்டில் வைக்கப்பட்டிருந்த அவரது கேலக்ஸி எஸ்3 ஸ்மார்ட்போன் தீடிரென புகை வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அதிலிருந்து தீப்பொறிகளும் நெருப்பும் வந்தன. பயந்து போன அவர் இந்த நிகழ்வை ஒரு சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த போனின் மேல் பகுதி உருகிவிட்டதாக அவர் கொடுத்திருக்கும் படமும் தெரிவிக்கிறது.

இதைக் கேள்விப்பட் சாம்சங் இந்த நிகழ்வுக்கு உடனே பதில் அளித்து இந்த நிகழ்வை உறுதிப்படுத்தியும் இருக்கிறது. மேலும் அதற்கான உரிய நடவடிக்கையும் எடுப்பதாக உறுதியளித்திருக்கிறது.

அதற்கு பதில் அளித்த பலர் சாம்சங் அந்த வாடிக்கையாளருக்கு வேறு ஒரு புதிய கேலக்ஸி போனை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கின்றனர். சாம்சங் அதைச் செய்யுமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot