Samsung Holidays Sale 2024: அடிமட்ட விலைக்கு S23, S24 போன்கள்.. ஸ்மார்ட் வாட்ச், இயர்பட்ஸ் மீதும் டிஸ்கவுண்ட்!
சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் 2024 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் சிறப்பு விற்பனையை (Christmas sale) அறிவித்துள்ளது. இதன்கீழ் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள், சாம்சங் இந்தியா இ-ஸ்டோர் வழியாக மட்டுமே அணுக கிடைக்கும். இன்று, அதாவது டிசம்பர் 20 ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு விற்பனையின் கீழ் என்னென்ன சாம்சங் தயாரிப்புகள் மீது என்னென்ன ஆபர் / டிஸ்கவுண்ட் கிடைக்கும்? இதோ விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 (Samsung Galaxy Z Fold 6) மற்றும் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6 (Galaxy Z Fold 6) மீதான சலுகைகள்: இஸட் ஃபோல்ட் 6 ஆனது 24 மாத கால நோ காஸ்ட் இஎம்ஐ-யின் கீழ், அசல் வெளியீட்டு விலையான ரூ.1,64,999 க்கு பதிலாக ரூ.1,44,999 முதல் வாங்க கிடைக்கிறது.

இதேபோல், சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6 ஆனது வரையறுக்கப்பட்ட கால சலுகையின் கீழ் அசல் வெளியீட்டு விலையான ரூ.1,09,999 க்கு பதிலாக ரூ.89,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீதும் 24 மாத கால நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்ஷன் கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் மீதான சலுகைகள்: சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) ஸ்மார்ட்போன் ஆனது அதன் வெளியீட்டு விலையான ரூ.1,29,999 க்கு பதிலாக.. ரூ.8000 வங்கி கேஷ்பேக், ரூ.12,000 அப்கிரேட் போனஸ் உடன்.. ரூ.1,09,999 க்கு வாங்க கிடைக்கும்.
இதேபோல சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் (Samsung Galaxy S24 Plus) ஸ்மார்ட்போன் ஆனது அதன் வெளியீட்டு விலையான ரூ.99,999 க்கு பதிலாக.. வங்கி சலுகைகள் உட்பட.. ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24) ஸ்மார்ட்போன் ஆனது அதன் வெளியீட்டு விலையான ரூ.74,999 க்கு பதிலாக.. வங்கி சலுகைகள் உட்பட.. ரூ.62,999 க்கு வாங்க கிடைக்கும்.
கடைசியாக சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ (Samsung Galaxy S24 FE ) ஸ்மார்ட்போன் ஆனது அதன் வெளியீட்டு விலையான ரூ.65,999 க்கு பதிலாக.. ரூ.5000 வரையிலான பேங்க் கேஷ்பேக் உடன்.. ரூ.60,999 க்கு வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் மீது 24 மாத கால நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்ஷனும் கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரீஸ் மீதான சலுகைகள்: சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra) ஸ்மார்ட்போன் ஆனது அதன் வெளியீட்டு விலையான ரூ.1,09,999 க்கு பதிலாக ரூ.72,999 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல கேலக்ஸி எஸ்23 (Samsung Galaxy S23) ரூ.64,999 க்கு பதிலாக ரூ.38,999 க்கும் மற்றும் கேலக்ஸி எஸ்23 எப்இ மாடல் ஆனது ரூ.54,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கும் வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி வாட்சுகள் மற்றும் இயர்பட்ஸ் மீதான சலுகைகள்: கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா மீது ரூ.12,000 பேங்க் கேஷ்பேக் அல்லது ரூ.10,000 அப்கிரேட் போனஸ் மற்றும் 24 மாதங்கள் நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்ஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல கேலக்ஸி வாட்ச் 7 மீது ரூ.8,000 பேங்க் கேஷ்பேக் அல்லது ரூ.8,000 அப்கிரேட் போனஸ் மற்றும் 24 மாதங்கள் நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்ஷன் அறிவிக்கப்பட்டுள்ளது
கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ மீது ரூ.5,000 பேங்க் கேஷ்பேக் அல்லது ரூ.5,000 அப்கிரேட் போனஸ் மற்றும் 24 மாதங்கள் நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்ஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி பட்ஸ் 3 மீது ரூ.4,000 பேங்க் கேஷ்பேக் அல்லது ரூ.4,000 அப்கிரேட் போனஸ் மற்றும் 24 மாதங்கள் நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்ஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி பட்ஸ் எப்இ மீது ரூ.4,000 பேங்க் கேஷ்பேக் அல்லது ரூ.4,000 அப்கிரேட் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








