ஒரு போன், ரெண்டு பெயர், ரெண்டு விலை- நமக்கே விபூதி அடிக்க பார்த்த Xiaomi, Poco

|

24 மணி நேரத்திற்குள் இரண்டு பெயர்களில் ஒரே போனை சியோமி அறிமுகப்படுத்தியுள்ளது. சியோமியின் முன்னாள் துணை பிராண்ட் ஆன போக்கோவின் போக்கோ எம்5 ரூ.12,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. மலிவு விலையில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

4ஜி ஆதரவோடு வெளியான போக்கோ எம்5 ஸ்மார்ட்போன், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவுடன் கூடிய 6.58 LCD டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது.

மீடியாடெக் ஹீலியோ G99 சிப்செட் ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இதில் டிரிபிள் ரியர் கேமரா ஆதரவுகள் இருக்கிறது. 50 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

8-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இதில் இருக்கிறது. 5000mAh பேட்டரி ஆதரவுடன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.

அதே அம்சங்களுடன் ரெட்மி 11 பிரைம்

அதே அம்சங்களுடன் ரெட்மி 11 பிரைம்

இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமான 24 மணி நேரத்திற்குள் சியோமியின் பிராண்டான ரெட்மி அதே அம்சங்களுடன் ரெட்மி 11 பிரைம் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

இதன் விலை ரூ.12,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் உள்ள பெயர்கள் அதன் விலை மட்டும் தான்.

இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கு இடையே ரூ.500 மட்டும் வித்தியாசம் இருக்கிறது. வடிவமைப்பு அடிப்படையில் சில வேறுபாடுகள் இருந்தாலும் அம்சங்கள் ஒரே மாதிரியாக இருக்கிறது.

நடந்த விஷயமே வேறு

நடந்த விஷயமே வேறு

Xiaomi ஸ்மார்ட்போன்களின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக Poco ஸ்மார்ட்போன்கள் முன்னதாக வெளியாகி இருக்கிறது. ஆனால் இரண்டு ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டிற்கு இடையே ஒரு இடைவெளி இருக்கும். ஆனால் இங்கு நடந்த விஷயமே வேறு.

மறுபெயரிடப்பட்ட பதிப்பாக வெளியாகும் ஸ்மார்ட்போன்கள்

மறுபெயரிடப்பட்ட பதிப்பாக வெளியாகும் ஸ்மார்ட்போன்கள்

Poco M5, Redmi 11 Prime அறிமுகப்படுத்தப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு Xiaomi Redmi Note 11SE வெளியிடப்பட்டது. இது Redmi 10S இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கிறது.

ஆனால் ரெட்மி 10எஸ் கடந்த டிசம்பர் 2021 இல் வெளியானது. பழைய தயாரிப்பை புதிய பெயருடன் சற்று மேம்படுத்தி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இதுபோன்ற பல நிகழ்வுகள் அரங்கேறி இருக்கிறது. சியோமியின் துணை பிராண்டான போக்கோவின் பல ஸ்மார்ட்போன்கள் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக வெளியாகி இருக்கிறது. ஆனால் இவை அனைத்துக்கும் குறிப்பிட்ட இடைவெளியுடன் வெளியானது.

இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்கள் ஒரே அம்சத்துடன் வெளியீடு

இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்கள் ஒரே அம்சத்துடன் வெளியீடு

இந்த நிலையில் ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்கள் ஒரே அம்சத்துடன் வெளியாகி இருக்கிறது.

24 மணி நேரத்திற்குள் ஒரே தயாரிப்பை இரண்டு முறை வெவ்வேறு பேரில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது பிராண்டின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு முன்னோக்கத்தில் தொய்வு தன்மையை காட்டுகிறது.

சரிவை சந்தித்து வரும் நிறுவனம்

சரிவை சந்தித்து வரும் நிறுவனம்

புதுமையான தயாரிப்புகள் மற்றும் நியாயமான விலையின் மூலம் இந்திய சந்தையில் சியோமி முதலிடத்தில் இருந்தது. ஆனால் சமீப காலமாக நிறுவனம் சரிவை சந்தித்து வருகிறது.

இந்த நேரத்தில் நிறுவனம் இந்த பாதையை பின்பற்றுவது என்பது பல விதமான கேள்விகளை எழுப்புகிறது. இருப்பினும் நிறுவனம் மீண்டும் புத்துணர்ச்சியோடு செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

ரெட்மி 11 பிரைம் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.

மேலும் 1,080x2,400 பிக்சல்ஸ் மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ரெட்மி 11 பிரைம் 4ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்ற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

பின்புறத்தில் 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி போன்.

மீடியொடெக் ஹீலியோ 99 சிப்செட்

மீடியொடெக் ஹீலியோ 99 சிப்செட்

அதேபோல் மீடியொடெக் ஹீலியோ 99 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது ரெட்மி 11 பிரைம் 4ஜி ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Same Specs smartphone has been launched under two names.. Xiaomi and Poco

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X