Home
News

ஸ்மார்ட்போன்களுக்கு வேலை இருக்காது போலயே.. புதிய AI கருவியை உருவாக்கி வரும் Sam Altman.. என்னென்ன சிறப்பு?

இன்றைய காலகட்டத்தில் புதிய புதிய தொழில்நுட்ப சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதுவும் ஒரு சில அதிநவீன சாதனங்கள் மனிதர்கள் செய்ய வேண்டிய வேலையை ஒரு சில நிமிடங்களில் செய்து முடிக்கிறது. எனவே தான் சிறந்த தொழில்நுட்ப கொண்ட சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றாக ஒரு கருவி வரப்போவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது அமெரிக்காவைச் சேர்ந்த சாட் ஜிபிடி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் (Sam Altman) செயற்கை நுண்ணறிவு (AI) திறன் கொண்ட ஒரு புதிய கருவியை உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இவர் உருவாக்கி வரும் கருவி மட்டும் பயன்பாட்டுக்கு வந்தால் தற்போது நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களுக்கு வேலையே இருக்காது என்று கூறப்படுகிறது.

புதிய AI கருவியை உருவாக்கி வரும் Sam Altman.. என்னென்ன சிறப்பு?

சமீபத்தில் ஒரு பிரபலமான இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் தானும் இதற்கு முன்பு ஆப்பிள் நிறுவனத்தில் வடிவமைப்பு தலைவராக செயல்பட்டு வந்த ஜானும் இணைந்து புதிதாக ஒரு கருவியை உருவாக்கி வருவதாக சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார். குறிப்பாக இந்த கருவி மட்டும் பயன்பாட்டுக்கு வந்தால் செல்போன்கள் எப்படி நம்முடைய தகவல் தொடர்பு முறையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்ததோ அதேபோன்று ஒரு பெரிய மாற்றத்தை நாம் காண முடியும். அதேபோல் இந்த கருவி மட்டும் வெளிவந்தால் செல்போன் பயன்பாட்டிற்கே தேவை இருக்காது எனக் கூறியுள்ளார்.

அதேபோல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட கருவியாக அது இருக்கும் என்று சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். இதுதவிர மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த புதிய கருவியில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக தற்போது படித்தவர்கள் மட்டும் இந்த செயற்கை நுண்ணறிவு செயலிகளைப் பயன்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் அப்படி இல்லாமல் அனைத்து தரப்பினரும் எளிமையாகப் பயன்படுத்தக்கூடிய வகையிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட கருவியை உருவாக்கி வருவதாக சாம் ஆல்ட்மேன் கூறினார்.

மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த அதிநவீன கருவியை வடிவமைத்து வருவதாகவும், இதற்கு வேண்டி பல தலைவர்களிடமிருந்து நிதி திருட்டி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல் இந்த புதிய கருவியானது பயனாளர்களின் குரல் கட்டளைக்கு ஏற்ப செயல்படும் என்று கூறப்படுகிறது. எனவே நாம் போன்களை போல டைப் செய்ய வேண்டியதோ அல்லது டச் பேடுகளை பயன்படுத்த தேவை இருக்காது எனவும், முழுமையாக நம்முடைய குரல் கட்டளை மூலமே இதனை இயக்க முடியும் என்று கூறியுள்ளார் சாம் ஆல்ட்மேன்.

புதிய AI கருவியை உருவாக்கி வரும் Sam Altman.. என்னென்ன சிறப்பு?

மேலும் ஆப்பிள் நிறுவனத்தில் ஜான், ஐபோன் மற்றும் பிற அசத்தலான தயாரிப்புகளை வடிவமைத்தவர். எனவே அவருக்கு இதுபோன்ற கருவிகள் வடிவமைப்பில் பெரிய அளவில் அனுபவம் இருக்கிறது என்பதால் இவ்விருவரும் இணைந்து உருவாக்கக் கூடிய இந்த அதிநவீன கருவி மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இன்னும் சில ஆண்டுகளில் இதற்கான ப்ரோட்டோடைப் வெளியிடப்படும் என்று சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார். எனவே வரும் காலங்களில் அதிநவீன ஸ்மார்ட்போன்களை மிஞ்சும் வகையில் ஒரு கருவி வருகிறது என்றால் நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும். அதுவும் படிப்பறிவு திறன்
இல்லாதவர்கள் கூட இந்த சாதனங்களை எளிமையாகப் பயன்படுத்த முடியும் என்பதால் இது மிகப் பெரிய மாற்றத்தைக் கொடுக்கும் என சாம் ஆல்ட்மேன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Sam Altman is developing an AI-powered device to replace smartphones: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X