Home
News

BSNL-க்கு அடிடா சல்யூட்.. மாதம் ரூ.150 கூட இல்ல.. 6 மாதம் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 90 ஜிபி டேட்டா வருது!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தில் மாதத்துக்கு ரூ.150 கூட செலவு வைக்காமல், 6 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுத்து, அதில் அன்லிமிடெட் வாய்ஸ், 90 ஜிபி டேட்டாவை கொடுக்கும்படி ஒரு ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid) கிடைக்கிறது. இந்த திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் விஐ (Vi) நிறுவனங்களால் கொடுக்க முடியாத விலைக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் திட்டங்களை வைத்துள்ளது. இதில் முக்கிய திட்டமாக பிஎஸ்என்எல் ரூ 897 திட்டம் இருக்கிறது. இந்த விலைக்கு 6 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதை ஒரு மாதத்துக்கு கணக்கிட்டு பார்த்தால், ரூ.149 மட்டுமே தேவைப்படுகிறது.

BSNL-க்கு அடிடா சல்யூட்.. மாதம் ரூ.150 கூட இல்ல.. 6 மாதம் வேலிடிட்டி!

ஆகவே, மாதம் ரூ.150 கூட செலவு இல்லாமல், இதை பெற்று கொள்ள முடியும். மற்ற டெலிகாம் நிறுவனங்களை போல்லல்லாமல், இதில் டேட்டா சலுகை கம்மியாக கொடுக்கப்படவில்லை. அதிகமாகவே இருக்கிறது. அதே நேரத்தில் எஸ்எம்எஸ் சலுகைகளையும் கொடுத்து, பிஎஸ்என்எல் கஸ்டமர்களை அறக்க பறக்க ரீசார்ஜ் செய்ய வைத்துள்ளது.

பிஎஸ்என்எல் 6 மாத வேலிடிட்டி திட்டம் (BSNL 6 Months Validity Plan): அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், லம்ப்-சம் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் என்று மூன்று முக்கிய சலுகைகளையும் இது கொடுக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்களாக இருக்கிறது. இந்த நாட்களுக்கு 90 ஜிபி டேட்டா (90GB Data) கொடுக்கப்படும்.

இந்த 90 ஜிபி டேட்டா முடிந்தவுடன் 40 கேபிபிஎஸ் வேகத்துக்கு தொடர்ந்து டேட்டா கொடுக்கப்படும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை இந்த 6 மாத திட்டத்தில் பெற்று கொள்ளலாம். அதேபோல 6 மாதங்கள் முழுவதும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது.

இதைத்தவிர கூடுதல் சலுகைகள் ஏதும் கிடையாது. இதேபோல மற்றொரு ப்ரீபெய்ட் திட்டமும் மலிவான விலைக்கு கிடைக்கிறது. ஆனால், அதில் 20 நாட்கள் குறைவாக வேலிடிட்டி கிடைக்கும். அதே நேரத்தில் லம்ப்-சம் டேட்டாவுக்கு பதிலாக தினசரி டேட்டா கிடைக்கும். அதுவும் அதிகமாக கொடுக்கப்படும். இதையும் தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் 160 நாட்கள் திட்டம் (BSNL 160 Days Plan): இதிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். ஆனால், விலைக்கு ஏற்ப கூடுதலாக கொடுக்கப்படும். அதாவது, இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் விலை ரூ.997ஆக இருக்கிறது. இந்த விலைக்கு ஏற்ப 160 நாட்கள் வேலிடிட்டியை கொடுத்து இருக்கிறது.

முந்தைய 180 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தை போலவே இதிலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படும். ஆனால், டேட்டா சலுகை லம்ப்-சம் முறையில் கிடைக்காது. வழக்கமான முறையில் தினசரிக்கு ஒதுக்கப்படும். ஆகவே, 2ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம்.

இந்த டேட்டா முடிந்தவுடன் 40 கேபிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா குறைக்கப்படும். ஆனால், தொடர்ந்து கிடைக்கும். இந்த ரூ.897 மற்றும் ரூ.997 திட்டங்களில் மட்டுமே 6 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இதற்கு அடுத்து 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் இருக்கிறது. ஆனால், அதன் விலை ரூ.1,499ஆக இருக்கிறது.

முன்னதாக, பிஎஸ்என்எல் நிறுவனம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.1-க்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை களமிறக்கியது. இதுவொரு எப்ஆர்சி (FRC) திட்டமாகும். ஆகவே, புது சிம் கார்டு யூசர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதில் அன்லிமிடெட் வாய்ஸ், 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Salute to BSNL Not Even Rs 150 Per Monthly Cost 6 Months Validity Unlimited Voice 90GB Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X