Home
News

உசுருக்கு சமமானது தான் Salt challenge: டிரெண்டாகும் புதுவகை சேலஞ்ச்!

வாழ்க்கையில் வரும் சேலஞ்ச்களை சமாளிப்பது தான் வீரம், துணிச்சல். ஆனால் அதற்கு பதிலாக வீடியோவிற்காக சேலஞ்ச் செய்வது டிரெண்டாகி வருகிறது. ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச் என்ற மிக சர்ச்சையான சேலஞ்ச்சமீபத்தில் வைரலாகி குறைவதற்குள் தற்போது சால்ட் சேலஞ்ச் பரவத் தொடங்கியுள்ளது.

மோமோ சேலஞ்ச்

மோமோ சேலஞ்ச்

கடந்த சில தினங்களுக்கு முன்பு வாட்ஸஅப்பிற்கு ஏதோ முகம் தெரியாத நபர்கள் புதுப்புது கட்டளையிட்டு மிரட்டியுள்ளனர். அதை ஏற்க வேண்டும் மறுக்கும் விதத்தில் மனிதன்-விலங்கு-ஏலியன் என்ற கலவையில் கொடூரமான உருவம் பல்வேறு விதமான அலறல்களுடன் அச்சுறுத்தும். இறுதியில் உங்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவோம் என்று மிரட்டி தற்கொலை எண்ணத்தைத் தூண்டும். அதுவே மோமோ சேலஞ்ச்.

கிகி சேலஞ்ச்

கிகி சேலஞ்ச்

கிகி சேலஞ்ச் என்ற பெயரில் ஓடும் காரிலிருந்து இறங்கி நடனமாடுவது, பைக்குகளில் சாகசம் செய்வது என விநோதமான செயல்பாடுகளில் ஈடுபட்டனர். இந்த ‘கிகி சேலஞ்ச்' இந்தியாவுக்குள்ளும் ஊடுருவி, இளைஞர்கள், பெண்கள் என சாலையில் இந்த சாகசத்தில் ஈடுபடத் தொடங்கினர். ஒரு சிலரின் இந்தச் செயல்பாடுகள் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக இருந்தது. கிகி சேலஞ்ச் என்ற பெயரில் பொது இடத்தில் சாகசத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பல்வேறு மாநில காவல்துறையினர் எச்சரித்திருந்தனர்.

ஐஸ் பக்கெட் சேலஞ்ச்

ஐஸ் பக்கெட் சேலஞ்ச்

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், தனது தலையில் தானே வாரிக் கொட்டிக் கொள்வது தான் இந்த சேலஞ்ச். இந்த ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்பது புறப்பட்டபடி இருந்த உடையுடன் அப்படியே ஐஸ்கட்டி போட்ட தண்ணீரை வாலியுடன் கொட்டிக் கொள்வது தான் இந்த ஐஸ் பக்கெட் சேலஞ்ச்.

காக்ரோச் சேலஞ்ச்

காக்ரோச் சேலஞ்ச்

'காக்ரோச் சேலஞ்ச்'. முகத்தில் கரப்பான் பூச்சியை ஓடவிட்டு, சில நொடிகள் அப்படியே வைத்திருந்து, அதைப் போட்டோ எடுத்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது. தைரியமானவர்கள் மட்டுமல்ல, கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே பதறியடித்து ஓடும் பயந்தவர்களுமேகூட இந்த 'காக்ரோச் சேலஞ்சை செய்தனர்.

தலைதூக்கிய வித்தியாசமான சேலஞ்ச்

தலைதூக்கிய வித்தியாசமான சேலஞ்ச்

தற்போது வித்தியாசமான சேலஞ்ச் ஒன்று தலை தூக்கி வருகிறது. இந்த சேலஞ்ச் என்பது தன்னை வருத்திக் கொள்வது என்பதை தாண்டி, உடன் இருப்பவர்களை தள்ளிவிடுவது போல் இந்த சேலஞ்ச் அமைந்துள்ளது. தள்ளிவிடுவது என்றால் சாதாரனமாக இல்லை.

ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்

ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்

ஒருவரை நடுவில் நிறுத்தப்பட்டு அவரை குதிக்க வைக்கிறார்கள். அவர் குதிக்கும் நேரத்தில் அதாவது அந்த இரண்டு கால்களும் மேற்பரப்பில் இருக்கும் போது காலை தட்டிவிடுகிறார்கள். அவர் பின் தலை கீழே விழும் வகையில் இந்த சேலஞ்ச் உள்ளது. இதற்கு பேர் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச் அதாவது தமிழில் மண்டை ஓடு உடைக்கும் சேலஞ்ச் என்று அர்த்தம்.

வித்தியாசமான Salt challenge

வித்தியாசமான Salt challenge

தற்போது இதே போன்று Salt Challenge வைரலாக பரவி வருகிறது. இந்த சவாலில் பங்கேற்பவர்கள் ஒரு உப்பு டப்பாவை அப்படியே எடுத்து வாயில் கவிழ்த்து கொள்கின்றனர். டப்பாவில் உள்ள உப்பு முழுவதும் தொண்டைக்குள் செல்கிறது. அதன்பின் உப்பின் கரிப்பு தங்க முடியாமல் வாயில் இருந்த உப்பை துப்புகிறார்கள்.

உப்பு முழுவதையும் விழுங்க வேண்டும்

உப்பு முழுவதையும் விழுங்க வேண்டும்

இந்த சவாலில் வெற்றி பெறுவதற்கு உப்பு முழுவதையும் விழுங்க வேண்டும் என்ற தெரிவிக்கப்பட்டாலும் வெற்றி பெற முழுமையாக என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை. இந்த வீடியோக்கள் தற்போது டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முயற்சி கூட பண்ணாதிங்க

முயற்சி கூட பண்ணாதிங்க

சால்ட் சேலஞ்ச் என்றவுடன் உப்பை வாயில் போட்டுவிடலாம் என்று சர்வ சாதாரணமாக கடந்து விட முடியாது. இந்த உப்பு சவாலானது பயங்கர பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதேபோல் பக்கவாதம் மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கின்றனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Salt challenge: Dangerous challenge trends in social media
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X