Home
News

புத்திய காட்டிய Apple.. iPhone 15 அறிமுகமாகும்.. ஆனா விற்பனைக்கு வராது.. EU எச்சரிக்கை!

ஆப்பிள் (Apple) நிறுவனமானது "தன் தலையில் தானே மண்ணை அள்ளி போடும்" படியாக ஒரு தில்லாலங்கடி வேலையை பார்த்துள்ளது. அதன் விளைவாக ஐபோன் 15 (iPhone 15) சீரீஸின் கீழ் அறிமுகமாகும் எல்லா மாடல்களுமே, விற்பனை செய்யப்பட தடை விதிக்கப்படலாம் என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஒருவழியாக ஆப்பிள், அதன் ஐபோன்களில் யூஎஸ்பி டைப்-சி போர்ட்டை (USB Type-C Port) சேர்க்க போகிறது என்பதையும், வரவிருக்கும் ஐபோன் 15 சீரீஸின் கீழ் உள்ள எல்லா மாடல்களுமே யூஎஸ்பி டைப்-சி போர்ட் உடன் அறிமுகமாகும் என்பதையும், இதற்கெல்லாம் ஐரோப்பிய யூனியனின் புதிய சட்டம் (EU New Rule) தான் காரணம் என்பதையும் உங்களில் சிலர் ஏற்கனவே அறிந்திருக்கலாம்.

iPhone 15 விற்பனைக்கு வராது.. Apple-க்கு EU எச்சரிக்கை!

அறியாதோர்களுக்கு, அனைத்து எலெக்ட்ரானிக் டிவைஸ்களுக்கும் யூஎஸ்பி டைப்-சி தான் புதிய சார்ஜிங் தரநிலையாக (New Charging Standard) இருக்க வேண்டும் என்கிற ஐரோப்பிய யூனியனின் சட்டத்தின் காரணமாக, ஆப்பிள் நிறுவனமானது அதன் லைட்டினிங் கேபிளை (Lightning cable) கைவிட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆப்பிள் நிறுவனம் இந்த புதிய சட்டத்தை ஏற்றுக்கொண்டதால், எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது, இனிவரும் ஐபோன்களில் யூஎஸ்பி டைப்-சி இடம்பெறும் என்று ஐரோப்பிய யூனியன் நினைத்துக்கொண்டிருந்தது. ஆனால் ஆப்பிள் நிறுவனமோ இந்த சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்திக்கொள்ளும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது.

கிடைக்கப்பெற்ற தகவலின்படி ஐபோன் 15 சீரிஸில் டைப்-சி போர்ட் இடம்பெறும் ஆனால் அது லைட்டினிங் கேபிள் அளவிற்கு வேகமானதாக இருக்காது. ஆக ஒருவருக்கு டாப்-அப் ஸ்பீட் (Top-up Speed) மற்றும் ஃபுல் டேட்டா டிரான்ஸ்ஃபர் (Full Data Transfer) வேண்டுமென்றால் அவர் "ஆப்பிளின் சான்றளிக்கப்பட்ட பாகங்களை" (Apple Certified Accessories) வாங்க வேண்டியது இருக்கும்.

அதாவது, ஐரோப்பிய யூனியனின் புதிய சார்ஜிங் ஸ்டாண்டர்ட் சட்டத்தை எப்படி பணமாக மாற்றலாம் என்கிற (Monetization) வழிகளை ஆப்பிள் ஆராய்ந்து வருவது போல் தெரிகிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஐரோப்பிய யூனியன் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக ஒரு கடும் எச்சரிக்கையை (Warning) விடுத்துள்ளது.

"ஐபோன்களில் யூஎஸ்பி டைப்-சி அறிமுகப்படுத்தப்பட்டால், அதில் எந்தவிதமான வரம்புகளோ (Limitations) அல்லது இடையூறுகளோ (Blocks) இருக்கக்கூடாது. இதற்கு இணங்க தவறினால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஆப்பிள் ஐபோன்களை விற்பனை செய்வதற்கான தடை (Sales Ban) விதிக்கப்படும்" என்று ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது.

நினைவூட்டும் வண்ணம், ஆப்பிள் ஆய்வாளர் ஆன மிங்-சி குவோ (Apple analyst Ming-Chi Kuo), ஆப்பிளின் சான்றளிக்கப்பட்ட சார்ஜர்கள் மற்றும் கேபிள்களை ( Apple-certified chargers and cables) பயன்படுத்தாத பயனர்களுக்கு சார்ஜிங் வேகத்தை (Charging Speed) குறைக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறி இருந்தார். தற்போது ஆப்பிளின் நடவடிக்கையானது மிங்-சி குவோவின் கூற்றை உண்மையாக்கி உள்ளது.

ஆப்பிள் மற்றும் ஐரோப்பிய யூனினுக்கு இடையேயான பஞ்சாயத்துகள் ஒருபக்கம் இருக்க ஐபோன் 15 சீரீஸ் தொடர்பாக வெளியாகும் லீக்ஸ் தகவல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. ஐபோன் 15 சீரிஸ் ஆனது வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Sales Will Ban If USB Type C on iPhones Has Any Charging Speed Limitations EU Warning For Apple
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X