இதுக்கு ஒரு முடிவே இல்லையா? வைரலானது சச்சின் டீப் பேக் வீடியோ.. பொங்கி எழுந்த டெண்டுல்கர்..
தற்போது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்ட்டுல்கர் ஆன்லைன் கேமை ஊக்குவிப்பது போன்ற டீப் பேக் வீடியோ (Sachin Tendulkar deepfake video) ஒன்று இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
தற்போது அதிநவீன தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. குறிப்பாக இந்த தொழில்நுட்ப வசதிகள் நமது தினசரி வேலையை எளிமையாக்குகிறது என்றே கூறலாம். ஆனால் இந்த புதிய அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் போது எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

சமீபத்தில் டீப் ஃபேக் வீடியோ என்ற தொழில்நுட்பம் பல பிரபலங்கள் வாழ்க்கையில் பெரிய பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ராஷ்மிகா மந்தனா முதல் தற்போது சச்சின் டெண்ட்டுல்கர் வரை இந்த தொழில்நுட்பம் மூலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதன்படி தற்போது சச்சின் டெண்டுல்கர் ஆன்லைன் கேமை ஊக்குவிப்பது போன்ற டீப் பேக் வீடீயோ இணையதளங்களில் அதிக வைலாகி உள்ளது. அந்த டீப் பேக் வீடியோவில் ஒரு விளையாட்டு செயலி மூலம் சச்சின் டெண்டுல்கரின் மகள் பணம் சம்பாதித்ததாகவும், அந்த செயலியை அனைவரும் பயன்படுத்துமாறு அவர் கூறுவது போன்றும் எடிட் செய்யப்பட்டிருக்கும். இந்த வீடியோ தான் இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளது.
குறிப்பாக சில தீயவர்கள் மூலம் உருவாக்கப்படும் டீப் பேக் வீடியோ ஆனது உண்மையா அல்லது பொய்யா என்பது கூட தெளிவாகத் தெரியாது. அந்த அளவுக்கு இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விஷமிகள் ஏமாற்றுகிறார்கள். இந்நிலையில் இந்த டீப் பேக் வீடியோவை தற்போது பகிர்ந்து இருக்கும் சச்சின் டெண்டுல்கர் கடும் எச்சரிக்கையைக் கொடுத்திருக்கிறார்.
அதாவது இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்த சச்சின் டெண்டுல்கர், இந்த வீடியோக்கள் போலியானவை. தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதைப் பார்க்கும் பொழுது கவலையாக இருக்கிறது என்றார். மேலும் இதுபோன்ற விளம்பரங்களை யாரெனும் பார்த்தால் உடனே ரிப்போட் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக நாம் அனைவரும் சமூக வலைத்தளங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும். தவறான தகவல்கள் மற்றும் டீப் ஃபேக் வீடியோக்களை தடுக்க நாம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் சச்சினின் இந்த வீடியோ ஒரிஜினல் போலவே அவருடைய குரலையும் பயன்படுத்தப்பட்டு எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ராஷ்மிகா மந்தனாவின் ஏஐ டீப் ஃபேக் வீடியோ ஒன்று சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், இதற்குப் பல்வேறு பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, கத்ரினா கைஃப், கஜோல் ஆகிய நடிகைகளில் போலி வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


Click it and Unblock the Notifications








