டிரம்ப் வெற்றிக்கு ரஷ்யா உதவி: சமூகவலைதளங்களில் போலி-முல்லர் அறிக்கை.?
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தை வெளிநாடுகளில் இருந்து இயக்கிய போலி செய்தி பக்கங்களை ரஷ்யாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று பொறுப்பு ஏற்றது. ரஷ்ய அரசுக்காக பதிவேற்றப்பட
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தை வெளிநாடுகளில் இருந்து இயக்கிய போலி செய்தி பக்கங்களை ரஷ்யாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று பொறுப்பு ஏற்றது. ரஷ்ய அரசுக்காக பதிவேற்றப்பட்ட செய்திகளை, 12.6 கோடி அமெரிக்கர்கள் பார்த்திருக்கக்கூடும் என ஏற்கனவே அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

நூற்றுக்கணக்கான ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு பின்னாலிருந்து செயல்பட்ட அந்த இணைய ஆராய்ச்சி நிறுவனம், அதிலிருந்து ஆயிரக்கணக்கான அரசியல் சார்ந்த செய்திகளை வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து புதிய அறிக்கையை முல்லர் என்பவர் தாக்கல் செய்துள்ளார்.

டிரம்ப் வெற்றி:
டொனால்டு டிரம்பின் வெற்றியில் ரஷ்யாவுக்கு உள்ள பங்கு குறித்து அமெரிக்காவில் விசாரிக்கப்பட்டு வருகிறது
ஹார்ட் ஆஃப் டெக்சாஸ், பீயங் பேட்ரியாடிக், மற்றும் செக்யூர்ட் பார்டர்ஸ் போன்ற பேஸ்புக் பக்கங்களை, அமெரிக்கர்கள் தயாரித்தது போன்ற பிம்பத்தில் அவர்கள் வடிவமைத்திருந்தனர்.
சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பி, அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த நினைத்தது அபத்தமான செயல் என்று கடந்த 2006ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் தெரிவித்திருந்தார்.

பேஸ்புக் மீது விமர்சனம்:
அப்போதிருந்து, ரஷ்யாவை சேர்ந்த செயற்பாட்டாளர்களால் பதியப்பட்ட ஆயிரக்கணக்கான பதிவுகள் மற்றும் பணம் கொடுத்து செலுத்தப்பட்ட விளம்பரங்களை அந்நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.
பிரசாரங்கள் மற்றும் போலி செய்திகளை பரப்ப அனுமதியளித்ததாகவும், இது குறித்த பிரச்சனைக்கான தீர்வு காண நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் விமர்சிக்கப்பட்டது.
டொனால்டு டிரம்ப் வெற்றிப் பெற்ற கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கம் ஏற்படுத்தியதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வந்தது.

அதிபர் தேர்தல் பயன்பாடு :
"2016 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னரும், அதன் பின்னரும், பேஸ்புக்கை பயன்படுத்தி வெளிநாட்டவர்கள் நம்மை பிளவுப்படுத்த முயற்சி செய்ததை மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்" என பேஸ்புக் தனது வலைதளப் பதிவில் தெரிவித்திருந்தது.
அதனால்தான், தாங்கள் கண்டுபிடித்த தகவல்களை பொதுமக்களுக்கு பகிரங்கமாக தெரிவிப்பதோடு, விசாரணை அதிகாரிகளுக்கும் அதனை வழங்கியுள்ளதாக அந்நிறுவனம் கூறியிருக்கிறது.

முல்லர் அறிக்கை:
2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என விசாரணை நடத்திய ராபர்ட் முல்லலர் அறிக்கையில், விசாரணைக்கு இடையூறு செய்ய அதிபர் டிரம்ப் பல வழிகளிலும் முயற்சி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

448 பக்கங்கள்:
22 மாதங்கள் விசாரணை நடத்தி தயாரிக்கப்பட்டுள்ள 448 பக்க அறிக்கையில், நீதி நிலைநாட்டப்படுவதற்கு டிரம்ப் இடையூறு செய்தாரா, அதன் மூலம் அவர் சட்டத்தை மீறியுள்ளாரா என்பதை, நாடாளுமன்றத்தின் ஆய்வுக்கு விட்டுவிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் பிரச்சார முகாம்:
ரஷ்ய அரசுக்கும், டிரம்ப் பிரச்சாரத்திற்கும் இடையேயான தொடர்புகளை வெளிப்படுத்தியுள்ள முல்லர் அறிக்கையில், ரஷ்யர்கள் சிலர், ஜனநாயகக் கட்சியினர் தொடர்பான ஆவணங்கள் திருடி வெளியிட்டதன் மூலம் தேர்தலில் ஆதாயம் அடைய முடியும் என டிரம்ப் பிரச்சார முகாம் எதிர்பார்த்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

போதிய ஆதாரம் இல்லை:
இருப்பினும், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பாக டிரம்ப் பிரச்சார முகாம் குற்றச் சதியில் ஈடுபட்டதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என முல்லர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தங்களுக்கு கிடைத்த முழு வெற்றி என அதிபர் டிரம்ப் தரப்பு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications