10,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சஸ மாமூத்தின் எலும்புகள் கண்டுபிடிப்பு! இதில் டிவிஸ்ட்இருக்கு

|

ரஷ்ய விஞ்ஞானிகள் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியைச் சுற்றி வந்த ராட்சஸ மாமூத்தின் எலும்பு படிமங்களை தற்பொழுது கண்டுபிடித்துள்ளனர். இதில் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புகளில் சில மென்மையான திசுக்கள் இன்னும் இணைக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

10,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாமூத்

10,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாமூத்

குறைந்த பட்சம் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் சுற்றித் திரிந்த ராட்சஸ உருவம் கொண்ட கம்பளி மாமூத்தின் நன்கு பதப்படுத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட எலும்புகளை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த அதிர்ச்சியூட்டும் மாமூத் எலும்பு படிமங்களை ஆழமற்ற வடக்கு சைபீரிய ஏரியின் பகுதிகளில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக ஒரே இடத்தில் பல எலும்புகள் கிடைத்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

எலும்புகளில் சில மென்மையான திசுக்கள்

எலும்புகளில் சில மென்மையான திசுக்கள்

மாமூத்தின் மண்டை ஓட்டின் ஒரு பகுதி, பல விலா எலும்புகள் மற்றும் முன்கை எலும்புகள் போன்ற எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புகளில் சில மென்மையான திசுக்கள் இன்னும் இணைக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை 23 அன்று இந்த எலும்புகள் மீட்டெடுக்கப்பட்டது. விஞ்ஞானிகள் இன்னும் மற்ற எலும்புகளுக்கான தடயத்தைத் தேடி வருகின்றனர்.

Xiaomi இன் அடுத்த நம்பமுடியாத ஸ்மார்ட்போன் டிசைன் இதுதான்! இன்பில்ட் இயர்பட்ஸ் உடன் புதிய போன்!Xiaomi இன் அடுத்த நம்பமுடியாத ஸ்மார்ட்போன் டிசைன் இதுதான்! இன்பில்ட் இயர்பட்ஸ் உடன் புதிய போன்!

18,000 ஆண்டுகள் பழமையான நாய்க்குட்டி

18,000 ஆண்டுகள் பழமையான நாய்க்குட்டி

ரஷ்யாவின் பரந்த சைபீரிய பிராந்தியத்தில் இதேபோன்ற கண்டுபிடிப்புகள் அதிகரித்து வருகிறது. ஏனெனில் காலநிலை மாற்றம் ஆர்க்டிக்கை வெப்ப மயமாக்கிப் பல வருடங்களாக உறைந்திருந்த பெர்மபிரோஸ்ட் தரைப்பகுதிகள் வேகமாக உறைந்த நிலையிலிருந்து கரைத்து வருகிறது. கடந்த 2108ம் ஆண்டில், சுமார் 18,000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படும் ஒரு வரலாற்றுக்கு முந்தைய நாய்க்குட்டியின் எலும்பு படிமம் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியில் இது எப்போது உயிர் வாழ்ந்தது?

பூமியில் இது எப்போது உயிர் வாழ்ந்தது?

தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாமூத்தின் எலும்புகள் குறைந்தது 10,000 ஆண்டுகள் பழமையானவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் பூமியில் இது எப்போது உயிர் வாழ்ந்தது அல்லது அது இறந்தபோது எவ்வளவு வயது என்று இன்னும் ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியவில்லை என்று ஆர்க்டிக் ஆய்வுகளுக்கான அறிவியல் மையத்தின் இயக்குனர் டிமிட்ரி ஃப்ரோலோவ் கூறியுள்ளார்.

ஒன்பிளஸ் சீன நிறுவனமா? உண்மையில் ஒன்பிளஸ் எந்த நாட்டை சேர்ந்த பிராண்ட் தெரியுமா?ஒன்பிளஸ் சீன நிறுவனமா? உண்மையில் ஒன்பிளஸ் எந்த நாட்டை சேர்ந்த பிராண்ட் தெரியுமா?

30,000 ஆண்டுகள் பழமையான புதைபடிமங்கள்

இதற்கு முன்பு வரை சுமார் 30,000 ஆண்டுகள் பழமையான பல மகத்தான புதைபடிமங்களை ரஷ்யா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு இனத்தைச் சேர்ந்த பல எலும்புகளைக் கண்டுபிடிப்பதும் அவை எங்கிருந்து வந்தன என்பதை அறிந்து கொள்வதும் வழக்கத்திற்கு மாறானது என்று உள்ளூர் அருங்காட்சியகத்தின் விஞ்ஞானி யெவ்ஜெனியா கோசைனோவா கூறியுள்ளார்.

மாமூத்தின் எலும்பு படிமங்கள்

மாமூத்தின் எலும்பு படிமங்கள்

தற்பொழுது மாமூத்தின் எலும்பு படிமங்கள் கிடைத்துள்ள பகுதியில் நிச்சயமாக இன்னும் பல எலும்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால், மீதமுள்ள பகுதிகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாமூத்தின் பின்னணியில் உள்ள முழுமையான தகவலைச் சேகரிக்க முயன்று வருகிறோம், மென்மையான திசு எஞ்சியிருக்கும் படிமங்களை ஆராய்ச்சி செய்வது என்பது மிகவும் அரிய நிகழ்வு என்றும் கூறியுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Russian Scientists Unearth Bones Of Woolly Mammoth That Roamed Earth 10,000 Years Ago : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X