ரஷ்ய அணு நீர்மூழ்கிகப்பலில் கதிர்வீச்சு கசிவு! கண்டறிந்த நார்வே..!

|

இரஷ்ய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலின் இடிபாடுகளில் சாதாரண அளவை காட்டிலும் கதிர்வீச்சின் அளவு 800,000 மடங்கு அதிகமாக இருப்பதை நார்வே கண்டறிந்துள்ளது.

ரஷ்ய அணு நீர்மூழ்கிகப்பலில் கதிர்வீச்சு கசிவு! கண்டறிந்த நார்வே..!

காம்சோமோலெட் என்ற பெயர் கொண்ட நீர்மூழ்கிகப்பல்,1989 ஆம் ஆண்டில் தீவிபத்து காரணமாக 42மாலுமிகளை பலிவாங்கிய பின்னர் நோர்வே கடலில் மூழ்கியது.காற்றோட்ட குழாயில் இருந்து கதிரியக்க கசிவு ஏற்படுவதை மாதிரிகள் காண்பிக்கும் போதிலும், அதை ஆர்க்டிக் தண்ணீர் விரைவாக நீர்த்துப்போக செய்வதால் "அது ஆபத்தானது இல்லை" என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

சோவியத் யூனியன்

சோவியத் யூனியன்

சோவியத் யூனியன் காலத்து நீர்மூழ்கிகப்பலும் 1,680மீட்டர் (5,512அடி) ஆழத்தில் கடலின் கீழே உள்ளது மற்றும் அப்பகுதியில் சில மீன்கள் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

 இரு அணு ஏவுகணைகளுடன் நீரில் மூழ்கியது

இரு அணு ஏவுகணைகளுடன் நீரில் மூழ்கியது

முதல் முறையாக நோர்வே-ன் தொலைதூரத்திலிருந்து இயக்கப்படும் வாகனம் (ROV) கடந்த ஜூலை 7 ம் தேதி காம்சோமோலெட் நீர்மூழ்கிகப்பலை ஆய்வுசெய்து படம்பிடித்ததுடன், அதன் கடுமையான சேதங்களை வெளிப்படுத்தியது. ரஷ்யாவில் K-278 என்று அறியப்படும் இந்த நீர்மூழ்கிக் கப்பல், ப்ளூட்டோனியம் ஆயுதங்களை கொண்ட இரு அணு ஏவுகணைகளுடன் நீரில் மூழ்கியது.

ஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!ஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விபத்தில் உயிர் பிழைத்தவர்கள்

விபத்தில் உயிர் பிழைத்தவர்கள்

அதன் முன் பகுதியில் ஆறு டார்பெடோ குழாய்கள் உள்ளன. மேலும் இந்த நீர்மூழ்கிகப்பலால் கிரானிட் குரூஸ் ஏவுகணைகளையும் ஏவமுடியும். அணுசக்தி மூலம் இயங்கும் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு பேரென்ட் கடலில் 14 கடற்படை அதிகாரிகள் உயிரிழந்து வெறும் ஒரு வாரமே ஆன நிலையில் இந்த செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிர் பிழைத்தவர்கள், சிறு நீர்மூழ்கிகப்பல் மூலம் மீண்டும் ஆர்க்டிக் தளத்திற்கு திரும்பினர்.

 அணுசக்தி பாதுகாப்பு ஆணையம்

அணுசக்தி பாதுகாப்பு ஆணையம்

நோர்வே கதிரியக்க மற்றும் அணுசக்தி பாதுகாப்பு ஆணையம் (DSA) கூறுகையில், ஏப்ரல் 1989ல் K 278 நீர்மூழ்கிகப்பலின் ஒரு பகுதியில் தீவிபத்து ஏற்பட்ட உடனேயே அழுத்த நீர் உலை விரைவாக மூடப்பட்டது என்கிறது. இருபத்தி ஏழு மாலுமிகள் உயிர் பிழைத்த நிலையில், அவர்கள் இறுதியில் இரண்டு சோவியத் கப்பல்களால் மீட்கப்பட்டனர்.

கதிர்வீச்சின் அளவு

கதிர்வீச்சின் அளவு

தற்போது கண்டறியப்பட்டுள்ள கதிர்வீச்சு கசிவான ரியாக்டர் அருகேயுள்ள குழாயிலிருந்து ஏற்பட்டுள்ளது. லிட்டர் ஒன்றுக்கு 800BQ (Becquerels) என்ற அளவில் கதிர்வீச்சு இருக்கும் நிலையில், நோர்வே கடலில் சாதாரணமாக 0.001BQ என்ற அளவிலேயே இருக்கும்.

எனினும் இடிபாடுகளுக்கு அருகில் இருந்து எடுத்த வேறு தண்ணீர் மாதிரிகளில் கதிர்வீச்சின் அளவு இவ்வளவு அதிகமாக இல்லை.

இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஆராய்ச்சி குழுவின் தலைவர் ஹில்ட் எலிஸ்

"1990 மற்றும் சமீபத்தில் 2007 ஆம் ஆண்டில் ரஷ்யர்கள் இங்கு ஏற்பட்ட கசிவுகளை ஆவணப்படுத்தியதால், நாங்கள் இந்த குறிப்பிட்ட நீர்மூழ்கிகப்பலை சுற்றியுள்ள தண்ணீரின் மாதிரிகளை எடுத்தோம். எனவே இங்கு கதிரிவீச்சின் அளவு அதிகமாக இருப்பது ஆச்சர்யம் ஏற்படுத்தவில்லை" என பிரஸ் வெளியீட்டில் ஆராய்ச்சி குழுவின் தலைவர் ஹில்ட் எலிஸ் ஹெடேல் தெரிவித்துள்ளார்.

கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்

கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்

தற்போதைய கதிர்வீச்சின் அளவு சாதாரண அளவை விட அதிகமாக இருந்தாலும், ஹெடேலின் கூற்றுப் படி, அது நோர்வே-ன் மீன் அல்லது கடல் உணவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த போதுமான இல்லை. எனவே தற்போதைக்கு அக்குழு சேகரிக்கப்பட்ட மாதிரிகளை முழுமையாக ஆய்வு செய்வதுடன், கதிர்வீச்சு அளவு மேசமாவதற்கான அறிகுறிகளை கண்டறிய நீர்மூழ்கிகப்பலின் இடிபாடுகளை தொடர்ந்து கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Russian nuclear submarine Norway finds big radiation leak : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X