500 டன் எடை., வானத்தில் இருந்து விழும்- பிரச்சனை உங்களுக்குதான்: உடனே இதை பண்ணுங்க- எச்சரிக்கை விடுத்த ரஷ்யா!
ரஷ்ய விண்வெளி அமைப்பு தலைவரின் தகவல்படி பொருளாதார தடைகள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வழங்கப்படும் சேவையை பாதிக்கும் என குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் சர்வதேச விண்வெளி நிலையம் செயலிழக்க வழிவகுக்கும் என ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் எச்சரித்துள்ளது. இதுகுறித்த டிமிட்ரி ரோகோசினின் தகவலின்படி, இந்த பொருளாதாரத் தடைகள் காரணத்தால் இந்திய விண்வெளி மையத்துக்கு சேவை செய்யும் ரஷ்ய விண்கலத்தின் செயல்பாடு சீர்குலைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

ரோஸ்கோஸ்மோஸ் தலைவர்
இதுகுறித்து டெலிகிராமில் ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் குறிப்பிடுகையில், 500 டன் எடையுள்ள விண்வெளி ஆய்வு மையம் கடலில் அல்லது நிலத்தில் கீழே விழும் என தெரிவித்துள்ளார். விண்வெளி குப்பைகளை தவிர்ப்பது உள்ளி்டட நிலையத்தின் சுற்றுப்பாதை சரி செய்வதை ரஷ்யா உறுதி செய்கிறது. இது சரியாக ஒரு வருடத்திற்கு 11 முறை செய்யப்படுகிறது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அப்படி கீழே விழும் பட்சத்தில் அது இருக்கக் கூடிய இடங்களின் வரைபடத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த விண்வெளி மையம் ரஷ்யாவில் விழுவதற்கு வாய்ப்பில்லை என சுட்டிக் காட்டினார்.

தீர்வு காண முயற்சிக்கும் நாசா
மறுபுறம் மார்ச் 1 அன்று, ரஷ்யாவின் உதவியின்றி சர்வதேச விண்வெளி மையத்தை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்துவதற்கான ஒரு தீர்வை கண்டுபிடிக்க நாசா முயற்சித்து வருவதாக குறிப்பிட்டார். அதேபோல் எங்கள் நிறுவனங்களுக்கு எதிரான சட்டவிரோதத் தடைகளை நீக்கக் கோரி., நாசா கனேடிய விண்வெளி நிறுவனம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ஆகியவற்றிடம் ரோஸ்கோஸ்மோஸ் முறையிட்டிருக்கிறது. அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒத்துழைக்கும் எஞ்சியுள்ள ஒரு பகுதி விண்வெளி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்)
முன்னதாக சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்) இந்தியா அல்லது சீனா நிலப்பரப்பு மீது விழுந்தால் என்ன செய்வீர்கள் என ரஷ்யா கேள்வி எழுப்பி இருந்தது. கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற பல ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ஐஎஸ்எஸ் திட்டத்தில் ரஷ்யாவும் அமெரிக்காவும் முக்கிய பங்குதாரர்கள் ஆவார்கள்.

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை
இந்த நிலையில் ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக, சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்)-க்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடை நமது ஒத்துழைப்பை அழிக்கக்கூடும் எனவும் இந்தியா மற்றும் சீனாவை அச்சுறுத்த விரும்புகிறீர்களா எனவும் வாஷிங்டன்-க்கு ரஷ்ய விண்வெளி ஆய்வு மைய தலைவர் ரோஸ்கேோஸ்மஸ் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் ரோஸ்கோஸ்மஸ், தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

பொருளாதார தடையால் விண்வெளி ஆய்வு மையத்துக்கு பாதிப்பு
ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் ரோஸ்கோஸ்மஸ் பதிவிட்ட பதிவில், அமெரிக்கா ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்) மீது பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 500 டன் எடையுடன் கட்டமைக்கப்பட்டுள்ள விண்வெளி ஆய்வு மையம் இந்தியா அல்லது சீனா மீது விழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் அவர்களை அச்சுறுத்த விரும்புகிறர்களா? ஐஎஸ்எஸ் ரஷ்யாவுக்கு மேல் பறக்க வில்லை, உங்களுக்கு தான் ரிஸ்க் அதிகம், சந்திக்க தயாரா? என ரஷ்ய விண்வெளி ஆய்வு மைய தலைவர் ரோஸ்கேோஸ்மஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐஎஸ்எஸ் என்றால் என்ன
விண்வெளியில், பூமிக்கு மேலே பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கும் ஒரு ஆய்வு நிலையம் சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station) ஆகும். இதனை நாம் நமது வெறும் கண்ணல்கூட பார்க்கலாம். இந்த நிலையத்தை 1998ஆம் ஆண்டில் விண்வெளியில் கட்டத் தொடங்கினர். தினமும் இந்த நிலையம் பூமியை 15.7 முறை சுற்றி வருகிறது. இந்த நிலையத்தில் தங்கும் விண்வெளி வீரர்கள் தினமும் 16 சூரியன் உதயத்தையும், மறைதலையும் காண்கின்றனர். இந்த நிலையத்தின் நீளம் 239 அடி, அகலம் 356 அடி, உயரம் 66 அடி ஆகும். இது பூமியை நீள் வட்டப்பாதையில் மணிக்குச் சராசரியாக 27600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








