Just In
- 36 min ago
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- 56 min ago
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- 57 min ago
உங்களிடம் Netflix இருக்குதா ஓடியாங்க ஓடியாங்க.. சந்தோஷமான விஷயம்.! மிஸ் பண்ணாதீங்க
- 3 hrs ago
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
Don't Miss
- Movies
சிம்பு பிறந்தநாளில் வெளியான சிறப்பு போஸ்டர்கள்.. குவியும் வாழ்த்துக்கள்!
- News
ஓபிஎஸ்-க்கு கட்சியே இல்லை- ஓபிஎஸ் ஒரு செல்லாக்காசு.. இப்படி பொளந்து கட்டுறாரே பொன்னையன்!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Sports
அதனால் தான் அவர் கிங் கோலி.. என்னுடைய 10 வயது உனக்கு தான்.. சுப்மன் கில்லை உற்சாகப்படுத்திய கோலி
- Lifestyle
தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரஷ்யா- உக்ரைன் போர்: கூகுள் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை.! என்ன தெரியுமா?
உக்ரைன் நாட்டின் மீது கடந்த வியாழக்கிழமை போர் தொடுக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். அதன்படி முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய ரஷ்ய ராணுவம் முழு வீச்சில் தாக்கி வருகிறது. தற்போது இந்தப் போர் முக்கிய நகரங்களை சுற்றியும் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் அருகே ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. அதேபோல் போர்நிறுத்தப்பட வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவை வற்புறுத்தி வருகின்றன. அதேபோல் ரஷ்யாவுக்கு, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட
நாடுகள் பொருளாதர தடை விதித்துள்ளன.

அதேபோல் ரஷ்ய உக்ரைன் போர் நடந்துவரும் நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக பேஸ்புக் செயல்பட்டு வந்தது. குறிப்பாக ரஷ்ய ஊடகத்துறையின் பேஸ்புக் பக்கத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்தது மெட்டா நிறுவனம். அதாவது ரஷ்ய ஊடகத்துரையின் பேஸ்புக் பக்கத்தில் விளம்பரங்கள் செய்யவும் மானிடைஸ் செய்யவும் மெட்டா நிறுவனம் தடை விதித்துள்ளது. குறிப்பாக ரஷ்ய அரசுக்கு சொந்தமான ஊடகங்களை தடை செய்வதாக கடந்த 26-ம் தேதி அறிவித்தது. பேஸ்புக் பகத்தில் இருந்து பணம் பெறவும், விளம்பரம் செய்யவும கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டது. இதை மெட்டா நிறுவனம் வெளிப்படையாகவே அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்டா நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்யாவின் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டாளர்,ரோஸ்கோம்நாட்ஸோர், "ரஷ்ய குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை" மெட்டா குறைக்கிறது என்று குற்றம்சாட்டினார். இதை தொடர்ந்து தற்போது யூ-டியூப் நிறுவனமும் ரஷ்ய அரசு மற்றும் தனியார் ஊடகங்கள் தங்கள் வீடியோக்களில் விளம்பரங்கள் மூலம் பெரும் வருமானத்துக்கு தடை விதித்தது உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது கூகுள் இணையதளங்களிலும் கூகுளுக்கு சொந்தமான செயலிகள் உள்ளிட்டவற்றிலும் ரஷ்ய நாட்டின் அரசு மற்றும் தனியார் ஊடகங்கள் விளம்பரம் மூலம் வரும் வருமானத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கூகுள் நிறுவனத்தின் தலைமை அமைப்பான ஆல்பாபெட்
அறிவித்துள்ளது.

இதுதவிர ரஷ்ய ஊடகங்கள் விளம்பரங்களை வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர் மைக்கேல் அசிமென் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஊடகங்கள் விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் சமூக வலைதளங்களில் லாபம் ஈட்டுகின்றன. இந்த விளம்பரங்கள்வெளியிட தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதால் ரஷ்யாவின் ஊடகங்களுக்கு கண்டிப்பாக நிதி நெருக்கடி ஏற்படும். இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் அமெரிக்கா தொழில்நுட்ப நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ரஷ்யாவுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.குறிப்பாக உக்ரைனுக்கு ஆயுதங்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என ஜெர்மனி நேற்று அறிவித்திருந்தது.

மேலும் போர் தொடங்கிய இரண்டாவது நாளே உக்ரைன் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்தால் மட்டுமே போர் நிறுத்த ஏற்படும் எனரஷ்யா கூறியது. ஆனாலும் உக்ரைன் சரணடைய மறுத்து தொடர்ந்து போரிட்டு வருகிறது. அதேபோல் ரஷ்யாவுக்கு உரிய பதிலடியையும்கொடுத்து வருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470