கிடுக்குப்பிடியில் ரஷ்யா: இது லிஸ்ட்லயே இல்லயே-விற்பனையை நிறுத்திய ஆப்பிள், கூகுள், பேஸ்புக் எடுத்த நடவடிக்கை!

|

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை கண்டித்து ரஷ்யாவில் ஆப்பிள் போன்கள் விற்பனையை தற்காலிமாக நிறுத்துவதாக நிறுவனம் அறிவித்திருக்கிறது. ரஷ்யாவின் ஆன்லைன் ஸ்டோர்களிலும் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரை தொடர்ந்து பல்வேறு பொது நிறுவனங்களும் தங்களது சேவையை நிறுத்தி வருகிறது. மின்னணு பணப்பரிமாற்ற செயலிகளான ஆப்பிள் பே மற்றும் கூகுள் பே நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுவத்துவதாக அறிவித்திருக்கிறது. அதோடு ரஷ்யாவின் நடவடிக்கை மிகவும் கவலை அளிப்பதாகவும், ரஷ்யாவினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு துணை நிற்போம் எனவும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

போருக்கு எதிரான நடவடிக்கை

போருக்கு எதிரான நடவடிக்கை

அதேபோல் ரஷ்ய ஊடகத்துறையின் பேஸ்புக் பக்கத்தில் விளம்பரங்கள் செய்வதற்கும் மானிடைஸ் செய்வதற்கும் மெட்டா தடை விதித்து அறிவித்திருக்கிறது. அதேபோல் பேஸ்புக் பக்கத்தில் இருந்து பணம் பெறுவதற்கும் விளம்பரம் செய்வதற்கும் ஆன கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை மெட்டா வெளிப்படையாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமின்றி ரஷ்ய நாட்டின் அரசு மற்றும் தனியார் ஊடகங்கள் விளம்பரங்களில் வாயிலாக கூகுள் இணையதளங்களிலும், கூகுளுக்கு சொந்தமான செயலிகளின் மூலமாக பெரும் வருமானத்துக்கு தடை விதித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை அமைப்பான ஆல்பாபெட் அறிவித்துள்ளத குறிப்பிடத்தக்கது.

கூகுள் மேப்ஸ் லைவ் டிராஃபிக் டேட்டா

கூகுள் மேப்ஸ் லைவ் டிராஃபிக் டேட்டா

உக்ரைனில் கூகுள் மேப்ஸ் லைவ் டிராஃபிக் டேட்டாவை கூகுள் தற்காலிமாக முடக்கி உள்ளது. நாட்டில் உள்ள உள்ளூர் சமூகங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூகுள் தெரிவித்திருக்கிறது. ஆல்பாபெட் இன்க்-ன் கூகுள் கடந்த ஞாயிற்றுக் கிழமை உக்ரைனில் தற்காலிமாக சில கூகுள் மேப்ஸ் கருவிகளை முடக்கியதாக உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்திய பகுதிகளின் அதிகாரிகள் உடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு கருதி நடவடிக்கை

பாதுகாப்பு கருதி நடவடிக்கை

உக்ரைனில் உள்ள உள்ளூர் சமூகங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உக்ரைனில் கூகுள் மேப்ஸ் டிராஃபிக் லேயரையும், அங்காடிகள் மற்றும் உணவகங்கள் போன்ற நெரிசலான இடங்கள் எப்படி இருக்கின்றன என்பது குறித்து நேரடித் தகவலை உலகளவில் முடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஆல்பாபெட் இன்க்-ன் கூகுள் உக்ரைனுக்கான சில கூகுள் மேப்ஸ் கருவிகளை தற்காலிமாக முடக்கியதை உறுதிப்படுத்தியது.

நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகள்

நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகள்

அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், கனடா உள்ளிட்ட 12 நாடுகள் 1949 உலகப் போருக்கு பின்பு ஒப்பந்தங்கள் அடிப்படையில் உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு தான் நேட்டா. இதன்பின் இதில் கூடுதலாக 30 நாடுகள் இதில் உறுப்பு நாடுகளாக இணைந்தன. மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து பார்க்கையில், நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் மீது பிற நாடுகள் போர் தொடுக்கும் பட்சத்தில் அமைப்பில் பிற நாடுகள் உதவிக்கு வர வேண்டும் என்பதாகும். இந்த நிலையில் ரஷ்யா தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு உக்ரைன், தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய நேட்டோ அமைப்பில் இணைய விரும்பியது.

வலியுறுத்தும் ரஷ்யா

வலியுறுத்தும் ரஷ்யா

இதையடுத்து உக்ரைன் நாட்டை நேட்டோ அமைப்புடன் இணைக்கக் கூடாது என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தியதோடு இதற்கான உறுதிப்பாட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது. இது கைகூடாததை அடுத்து ரஷ்யா நேரடியாக உக்ரைன் மீது போர் தொடக்க தொடங்கியது. தற்போது உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து இருக்கிறது. இந்த நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா கவுன்சில் கொண்டு வரும் தீர்மானத்தில், இந்தியா எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என ரஷ்யா கேட்டுக் கொண்டது.

பாதிப்பில் விண்வெளி ஆய்வு மையம்

பாதிப்பில் விண்வெளி ஆய்வு மையம்

அதேபோல் ரஷ்யா மீது அமெரிக்க விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக, சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்)-க்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடை நமது ஒத்துழைப்பை அழிக்கக்கூடும் எனவும் இந்தியா மற்றும் சீனாவை அச்சுறுத்த விரும்புகிறீர்களா எனவும் வாஷிங்டன்-க்கு ரஷ்ய விண்வெளி ஆய்வு மைய தலைவர் ரோஸ்கேோஸ்மஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் ரோஸ்கோஸ்மஸ், தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
Russia Ukraine War: Apple Stop Selling Products., Google and Facebook Restrict ads limit

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X