சத்தமில்லாமல் ஹைப்பர்சோனிக் சிர்கான் ஏவுகணையை சோதனை செய்த ரஷ்யா.! வெற்றி..!
எந்தவொரு நாட்டின் (அமெரிக்க உட்பட) தாக்குதலையும் சமாளிக்கும் அளவிலான ஆயுத பலம், ஆயுத வளர்ச்சி மற்றும் ஆயுத தயாரிப்புகளை தன்வசம் கொண்டுள்ள ரஷ்யா, அதன் பாதுகாப்பை மென்மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புவது போல் தெரிகிறது.

மற்ற நாடுகளை விட ரஷ்யா அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது, குறிப்பாக ரஷ்யாவின் அனைத்து தயாரிப்புகளுக்கும் மற்ற நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் கப்பலில் இருந்து ஏவப்படும் அதிநவீன ஹைப்பர்சோனிக் சிர்கான் ஏவுகணைய வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது ரஷ்யா.

வெளிவந்த தகவலின்படி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காலை ரஷ்ய ஆர்க்டிக்கில் உள்ள வெள்ளைக் கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அட்மிரல் கோர்ஷ்கோவ் போர் கப்பலில் இருந்து ஏவப்பட்ட சிர்கான் ஏவுகணை வகை, அதன் இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கடலில் ஒரு இலக்கை, ஏவுகணை வெற்றிகரமாக தாக்கியது இதுவே முதல் முறை என்று ரஷ்ய இராணுவ அதிகாரிவலேரி ஜெராசிமோவ் என்பவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஹைப்பர்சோனிக் சிர்கான் ஏவகணை அதன் இல்லை 450கிலோமீட்டர்(280மைல்) தொலைவில் மாக் 8வேகத்தில் துல்லியமாக எட்டியது. குறிப்பாக இது ஒலியின் வேகத்தை விட 8 மடங்கு அதிவேகமானது என்று கூறப்படுகிறது.

பின்பு இதுகுறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறுகையில் சிர்கோனின் சோதனை வெற்றி, எங்கள் ராணுவப்படைகளின் வாழ்க்கையில் மட்டுமல்ல, ரஷ்யா முழுவதிலும் ஒரு மிகப்பெரிய நிகழ்வு என்று கூறியுள்ளார்.

இந்த ஹைப்பர்சோனிக் சிர்கான் ஏவுகணையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பரிசோதித்த போது ஏவுகணை சோதனை தளத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 7பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications