2ம் உலகப்போரில் நாசி படையை நாசமாக்கிய ரஷ்யா: கோலாகல விழா.!

2ம் உலகப் போரின் போது, நாசி படைகளை கொன்று குவித்து வெற்றி கொண்டது ரஷ்யா. இந்த யுத்தகம் நடந்தது 75 ஆண்டுகள் கடந்தாலும், அதை சிறப்பாக கொண்டாடியது ரஷ்யா. இந்நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாப்பட்டது. இதற்கு ரஷ

|

2ம் உலகப் போரின் போது, நாசி படைகளை கொன்று குவித்து வெற்றி கொண்டது ரஷ்யா. இந்த யுத்தகம் நடந்தது 75 ஆண்டுகள் கடந்தாலும், அதை சிறப்பாக கொண்டாடியது ரஷ்யா.

2ம் உலகப்போரில் நாசி படையை நாசமாக்கிய ரஷ்யா: கோலாகல விழா.!

இந்நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாப்பட்டது. இதற்கு ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் தலைமை தாங்கினார். இதையொட்டி செயிண்ட் பீட்டர்ஸ்பார்க் அரண்மனை சதுக்கத்தில் ராணுவ அணிவகுப்பு நடந்தது.

1945ம் ஆண்டு ஜெர்மனியின் நாசிப் படைகளை சோவியத் ரஷ்ய படைகள் தோற்கடித்ததன் நினைவாக ஆண்டு தோறும், மே மாதம் 9ம் தேதி ரஷ்யாவில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

லெனின்கிராட் முற்றுகை:

லெனின்கிராட் முற்றுகை:

லெனின்கிராட் முற்றுகை 1941 செப்டம்பர் 8ம் துவங்கி 1943 ஜனவரி 27ம் தேதி வரை என 872 நாட்கள் நடந்தது. இந்த முற்றுகையின் போது, 1.2 மில்லியன் போராளிகள் கொல்லப்பட்டுள்ளதா கூறப்படுகின்றது.

 27 மில்லியன் மரணம்:

27 மில்லியன் மரணம்:

சோவியத் யூனியன் 2ம் உலகப்போரின் போது 27 மில்லியன் மரணங்களை சந்திதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்துக்கினர்.

அணி வகுப்பு:

அணி வகுப்பு:

2,500க்கும் அதிகமான ராணுவ வீரர்கள், 80 யூனிட் ராணுவ உபகரணங்களுடன் அணி வகுப்பு நடந்தது. இதில் அப்போது, வெற்றி கொண்ட போது, நாசி படைகளின் டி-34 டாங்கி, ஜெர்மின ராக்கெட் அமைப்புகள், காலால் படை போர் தளவாட கருவிகள் உள்ளிட்டவை இடம் பெற்றன.

 புதிய அருங்காட்சியகம்:

புதிய அருங்காட்சியகம்:

ஜெர்மினியை வெற்றி கொண்டதின் நினைவாக புதிய அருங்காட்சியம் அமைக்கப்படுகின்றது. இதற்காக 2.3 டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிட்டலரின் படைகள்:

ஹிட்டலரின் படைகள்:

போரின் போது ஹிட்லர் தலைமையிலான நாஸி படையினர் ரஷ்யாவின் ஸ்டாலின்கிரேடு பகுதி வரை முன்னேறினர். அதன் பின்னர் அவர்களைத் தடுத்த ரஷ்ய ராணுவம் கொடுத்த பதிலடியால் ஜெர்மனிப் படையினர் தோல்வியைத் தழுவினர்.

அஞ்சலி செலுத்தினார்:

அஞ்சலி செலுத்தினார்:

இந்த வெற்றியில் 75வது கொண்டாட்டத்தின் போது ரஷ்ய அதிபர் புதின், உயிரிழந்த வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். இறுதியில் 2ம் உலகப் போர் எப்படி நடந்தது என்பதை அந்தக் காலத்திய ஆயுதங்கள். டேங்குகள் கொண்டு ரஷ்ய ராணுவத்தினர் நடித்துக் காட்டினர்.

கோலாகலமாக கொண்டாடப்பட்டது:

கோலாகலமாக கொண்டாடப்பட்டது:

ராணுவத்தினர் 75ம் ஆண்டு நிகழ்ச்சியை கோலாகலமாக கொண்டாடினர். ஏராளமான ராணுவ வாகனங்களும் அணி வகுத்து வந்து நின்றன.

வெற்றி தினம்:

வெற்றி தினம்:

மே மாதம் 9ம் தேதி ரஷ்யாவில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெற்றி தினத்தின் போது நாட்டின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில், ராணுவ அணிவகுப்பு நடக்கின்றது.

ராணுவ அணிவகுப்பு:

ராணுவ அணிவகுப்பு:

அந்த வகையில் நாளை ரஷ்யாவின் வெற்றி தினம் கொண்டாடப்படுவதையொட்டி, ராணுவ அணிவகுப்புக்கான ஒத்திகை நிக்ழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் பீரங்கிகள், டாங்கிகள், போர் விமானங்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பங்கேற்று ஒத்திகையில் ஈடுபட்டனர்.

Best Mobiles in India

English summary
Russia s Victory Day which won the Nazis in World War II : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X