இந்தியாவிற்கு எஸ்-400 ரக எவுகணைகள் எப்போது கிடைக்கும்? முக்கியத் தகவல்.!
ரஷ்யா தொடர்ந்து அதிநவீன ஆயுந்தங்களை தயார் செய்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் ரஷ்யாவின் எஸ்400 ரக அதிநவீன ஏவுகணை சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் தயார் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 400கி.மீட்டர் அப்பால் உள்ள போர் விமானங்கள், ஏவுகணைகள், மற்றும் ஆளில்லதா குட்டி விமானங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை இந்த எஸ்400 ரக ஏவுகணை.

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் எஸ்-400 ரக ஏவுகணை ஆனது தரையில் இருந்து வானில் பறந்து இலக்கை தாக்கும் (surface-to-air missile) வடிவமைப்பை கொண்டது ஆகும். மேலும் இந்த ஏவுகணைகளை வாங்க ரஷ்யாவிடம் கடந்த 2018-ம் ஆண்டு 5 பில்லியன் டாலர்களுக்கு இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

பின்பு இந்த ஒப்பந்தத்தின்படி கடந்த 2019-ம் ஆண்டு ரஷ்யாவிடம் 800 மல்லியன் டாலர்களை இந்தியா செலுத்தியுள்ளது. ஆனால் ரஷ்யாவிடம் இந்த ஏவுகணைகளை வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடைகள் விதிக்க நேரிடும் என ஏற்கனவே அமெரிக்கா எச்சரித்திருந்தது.

அதாவது ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை ஏற்கனவே வாங்கிய துருக்கி அரசுக்கு, அமெரிக்கா சில பொருளாதார தடைகளை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் ரஷ்ய அரசிடம் வேறு ரகமான ஏவுகணைகளை வாங்குவதற்கு அமெரிக்கா இது போன்றஎச்சரிக்கைகளை விடுக்கவில்லை.

மேலும் இந்திய அரசு ரஷ்யாவிடம் செய்துள்ள ஒப்பந்தத்தின்படி, இந்த ஆண்டின் இறுதியில் எஸ்-400 ரக ஏவுகணைகளை ரஷ்ய அரசு இந்தியாவிற்கு வழங்கும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

முன்பு ரஷ்ய பாதுகாப்பு படைகளுக்கு மட்டுமே கிடைத்த எஸ்-300 இன் மேம்பட்ட பதிப்பான எஸ்-400 ஆனது பல்வேறு ஏவுகணை அச்சுறுத்தல்களை இடைமறிக்கும் வல்லமை கொண்டது மற்றும் பல்வேறு வகையான சூப்பர்சோனிக் மற்றும் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணைகளையும் கொண்டுள்ளது.

சீனா போன்ற பெரிய நாடுகளுடன் போட்டியிட இந்தியாவுக்கு இதுபோன்ற அதிநவீன பாதுகாப்பு தளவாடங்கள் தேவையாக இருக்கின்றது என்றும் இந்தியாவின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே எஸ்-400 ஏவுகணைகள் இந்த ஆண்டு இறுதியில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் வான் எல்லைக்குள் அத்துமீறி வரும் போர் விமானங்கள் மற்றும் டிரோன்களை இந்த ஏவுகணைகள் நுழையாமல் தடுக்கும். அப்படியே நுழைந்தாலும், 380 கிலோ மீட்டருக்கு முன்பே இது எச்சரிக்கை செய்து அத்துமீறி வரும் போர் விமானங்கள் மற்றும் டிரோன்களை தாக்கி அழித்து விடும். எஸ்-300 ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட மாடல்தான் எஸ்-400 ஆகும்.


Click it and Unblock the Notifications