Home
News

ரஷ்யா: ராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை- ஏன் தெரியுமா?

இருந்தபோதிலும் இந்த மசோதா நாடாளுமன்ற மேல்சபையிலும்இ கூட்டமைப்பு கவுன்சிலிலும் நிறைவேற வேண்டும். அதனை தொடர்ந்து அதிபர் புதின் அந்த மசோதாவில் கையெழுத்திட்டு பின்னர் சட்டமாக இயற்றப்பட்டு அமலுக்கு வரும்.

எந்தவொரு நாட்டின் (அமெரிக்க உட்பட) தாக்குதலையும் சமாளிக்கும் அளவிலான ஆயுத பலம், ஆயுத வளர்ச்சி மற்றும் ஆயுத தயாரிப்புகளை தன்வசம் கொண்டுள்ள ரஷ்யா, அதன் பாதுகாப்பை மென்மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புவது போல்
தெரிகிறது.

ரஷ்யா: ராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை- ஏன் தெரியுமா?

அதன்படி ரஷ்யாவில் ராணுவ வீரர்கள் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் ராணுவனம் குறித்த ரகசிய தகவல்கள் பொதுவெளியில் கசிவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த. எனவே ராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டுமென ராணுவ அதிகாரிகள் வலியுறுத்தினர்.

ராணுவ வீரர்கள்

ராணுவ வீரர்கள்

அந்த வகையில் ராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடைவிதிக்கும் மசோதா நாடாளுமன்ற கீழ் சபையில் தாக்கல்
செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த மாசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 450 உறுப்பினர்களில் 400-க்கு மேற்பட்டோர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனவே மசோதா வெற்றிகரமாக
நிறைவேறியது.

மசோதா

மசோதா

இருந்தபோதிலும் இந்த மசோதா நாடாளுமன்ற மேல்சபையிலும், கூட்டமைப்பு கவுன்சிலிலும் நிறைவேற வேண்டும். அதனை தொடர்ந்து
அதிபர் புதின் அந்த மசோதாவில் கையெழுத்திட்டு பின்னர் சட்டமாக இயற்றப்பட்டு அமலுக்கு வரும்.

லேப்டாப், டேப்லெட்

லேப்டாப், டேப்லெட்

குறிப்பாக இந்த சட்டம் அமலுக்கு வந்தால் கேமரா இணையதளம் உள்ளிட்ட வசதிகளை கொண்ட ஸ்மார்ட்போன் மட்டும் இன்றி லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட அனைத்து சாதனங்களையும் பயன்படுத்த ராணுவ வீரர்களுக்கு தடைவிதிக்கப்படும்.மேலும் அவர்கள் ராணுவம் குறித்த பத்திரிகையாளர்களிடம் பேசவும், எழுதவும் தடை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 டபுள்யூ டபுள்யூ டபுள்யூ

டபுள்யூ டபுள்யூ டபுள்யூ

பின்பு ரஷ்யாவின் ஒட்டுமொத்த இணைய சேவையையும் - அதாவது வேர்ல்ட் வைட் வெப் எனப்படும் டபுள்யூ டபுள்யூ
டபுள்யூவை (www) துண்டிக்கப்பட்டு- நிறுத்தப்பட்டு, நாட்டின் சைபர் பாதுகாப்பு சோதனை ஒன்று நிகழ்த்தப்பட உள்ளது.
அது என்னவென்றால் ரஷ்யாவின் இதயம்" என்று அழைக்கப்படும் கிரெம்ளினில் யாரோ ஒருவர் மிகவும் மோசமான ஹேக் வேலையை செய்து விட்டார் அதனால் தான் ரஷ்யா ஒரு முழு நாளுக்கு இணையத்தை துண்டிக்க உள்ளது என்று நினைக்க வேண்டாம். விடயம் அது அல்ல, உண்மையான காரணம் என்னவெனில், ரஷ்யாவின் சைபர் பாதுகாப்பு பயிற்சியின் ஒரு பகுதியாக தான்
இது நிகழ்த்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Russia moves to mask its soldiers' digital trail with smartphone ban: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X