ரஷ்யா : யாரையும் கொல்லும், எதையும் அழிக்கும்..!

|

பனிப்போர் நடைப்பெற்ற காலத்தில் ரஷ்யாவின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது - ரஷ்யாவின் லோ-டெக் (Low-Tech) தான், அதாவது ரஷ்யாவின் குறைந்த அளவிலான தொழில்நுட்பம். ஆனால், நவீன கால ரஷ்யாவின் நிலை முற்றிலும் வேறு பட்டதாகும்.

சமீபத்தில் சிரியா மீது நடத்திய அதிநவீன வான்வெளி தாக்குதலுக்கு பின் ரஷ்யா மீது இருந்த கண்ணோட்டாத்தை பிற உலக நாடுகள் மாற்றிக் கொண்டன என்பதே நிதர்சனம். அமெரிக்கா ஆயுத தொழில்நுட்ப தயாரிப்பாளர்கள் தொடங்கி அமெரிக்க ராணுவ தளபதிகள் வரை ரஷ்யாவின் ஏவுகணை தொழில்நுட்பத்தை வியந்து பாராட்டியதே அதற்கு சாட்சியாகும்..!

சூப்பர் பவர் :

சூப்பர் பவர் :

அப்படியாக, சூப்பர் பவர் நாடான அமெரிக்க உட்பட பிற உலக நாடுகள் வியக்கும், மிரலும், கண்டு அஞ்சும்படியாக ரஷ்யாவிடம் அப்படி என்ன தான் இருக்கிறது என்பதை பற்றிய தொகுப்பு தான் இது.

தயாரிப்பு :

தயாரிப்பு :

குறைந்த எண்ணெய் விலை போன்ற பல பொருளாதார சிக்கல்களை சந்திக்கும் போதிலும் புதிய போர் விமானங்கள், டாங்கிகள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் ஏவுகணைகள் போன்றவைகளை தயாரித்துக் கொண்டே தான் இருக்கிறது ரஷ்யா.

அழிக்கும் சக்தி :

அழிக்கும் சக்தி :

அப்படியாக ரஷ்யாவின் மிகவும் ஆபத்தான அதிநவீன ஆயுதங்கள் பற்றியும், எதையும் தாக்கி அழிக்கும் சக்தி கொண்ட அதன் நவீனத்தன்மைகளையும் அடுத்து வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

சுகோய் ஸ்ட்ரைக் ஃபைட்டர்ஸ் :

சுகோய் ஸ்ட்ரைக் ஃபைட்டர்ஸ் :

சுகோய் ஸ்ட்ரைக் ஃபைட்டர்ஸ் (Sukhoi strike fighters) - இது ரஷ்யாவின் நிகழ்கால அதிநவீன போர் விமானம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பமுடியாத வெற்றி :

நம்பமுடியாத வெற்றி :

ஃப்ளான்கர் (Flanker) வகை போர் விமானமானது 1985-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து நம்பமுடியாத வெற்றிகளை நிரூபித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல வகை :

பல வகை :

ஃப்ளான்கர் வகை போர் விமானங்களானது, சு-30 மல்டீ-ரோல் ஃபைடர், தி சு-34 ஃபைடர்-பாம்‌பர் மற்றும் தி சு-35 இன்டர்செப்டர் என பல வகையான பரிணாமங்களை அடைந்துள்ளது.

ஒப்பீடு :

ஒப்பீடு :

ரஷ்யாவின், ஃப்ளான்கர் வகை போர் விமானங்களானது தற்போதைய தலைமுறை மேற்கத்திய அதிநவீன போர் விமானங்களோடு (Western aircraft) ஒப்பிடப்படுகிறது.

குறையில்லாத வண்ணம் :

குறையில்லாத வண்ணம் :

அப்படியாக சற்றும் குறையில்லாத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது தான் ரஷ்யாவின் சுகோய் ஸ்ட்ரைக் ஃபைட்டர்ஸ் போர் விமானம்.

தலைசுற்ற வைக்கும் :

தலைசுற்ற வைக்கும் :

அது மட்டுமின்றி, சுகோய் ஸ்ட்ரைக் ஃபைட்டர்ஸ் ஒரு நம்பமுடியாத சுறுசுறுப்பான விமானம் ஆகும், இது மேற்கத்திய போர் விமான ஒட்டிகளை தலைசுற்ற வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேம்பட்ட மின்னணு  :

மேம்பட்ட மின்னணு :

அந்த அளவிலான மேம்பட்ட மின்னணு மற்றும் ஆயுதங்கள் (advanced electronics and weaponry) போன்ற அதி நவீனங்களை சுகோய் ஸ்ட்ரைக் ஃபைட்டர்ஸ் உள்ளடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் ஆயுதம் :

ஸ்மார்ட் ஆயுதம் :

மிகவும் புதிய வகை போர் விமானமான சு-34 'ஃபுல்பேக்ஸ்' (Brand-new Su-34 ‘Fullbacks') ஆனது ஒரு வாரமாக சிரியாவை நோட்டமிட்ட ஒரு ஸ்மார்ட் ஆயுத (smart weapons on target) முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

04. சுகோய் டி-50 பாக்-ஃபா ஸ்டெல்த் ஏர் சூப்பிரியாரிட்டி ஃபைட்டர் :

04. சுகோய் டி-50 பாக்-ஃபா ஸ்டெல்த் ஏர் சூப்பிரியாரிட்டி ஃபைட்டர் :

சுகோய் டி-50 பாக்-ஃபா ஸ்டெல்த் ஏர் சூப்பிரியாரிட்டி ஃபைட்டர் (Sukhoi T-50 PAK-FA stealth air superiority fighter) - இது ரஷ்யாவின் வருங்கால அதிநவீன போர் விமானம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது தலைமுறை :

ஐந்தாவது தலைமுறை :

இது ரஷ்ய நிறுவனங்களின் முதல் ஐந்தாவது தலைமுறை விமானம் (first fifth-generation aircraft) ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கற்று போய்விடும் :

வழக்கற்று போய்விடும் :

இது வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்ட பின் ஒட்டுமொத்த அதிநவீன மேற்கத்திய விமானங்களும் வழக்கற்று போய்விடும் என்கிறார்கள் ஆயுத தயாரிப்பு நிபுணர்கள்.

மூழ்கடிக்கும் :

மூழ்கடிக்கும் :

இதன் ஸ்டெல்த் பண்புகள், அபாரமான சென்சார்கள், தாக்க வரும் ஆயுதங்களை மூழ்கடிக்கும் தன்மை ஆகியவைகள் எதிர்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கும் என்கிறார்கள்.

03. ஆக்டிவ் எலெக்ட்ரானீக்கலி ஸ்கேன்டு அரே (ஏஇஎஸ்ஏ) ரேடார் :

03. ஆக்டிவ் எலெக்ட்ரானீக்கலி ஸ்கேன்டு அரே (ஏஇஎஸ்ஏ) ரேடார் :

ஆக்டிவ் எலெக்ட்ரானீக்கலி ஸ்கேன்டு அரே (ஏஇஎஸ்ஏ) ரேடார் (Active Electronically Scanned Array (AESA) Radar) - இதுவும் ரஷ்யாவின் வருங்கால அதிநவீன போர் விமானம் தொழில்நுட்பம் ஆகும்.

ஸ்கேன் :

ஸ்கேன் :

இது பென்சில் போன்ற ஒளிக்கோடு (pencil-like beam) மூலம் வான்வெளியை ஸ்கேன் செய்து தாக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒளிபரப்பு :

ஒளிபரப்பு :

ஏஇஎஸ்ஏ ரேடார்களின் திட நிலை ப்ரோஜக்டர் (solid-state projector) ஆனது ஒவ்வொரு நொடியும் வெவ்வேறு திசைகளில் ஆயிரக்கணக்கான ஒளிபரப்புகளை நிகழ்த்தும்.

உளவு :

உளவு :

அப்படியாக, இதன் அதிநவீன ஏஇஎஸ்ஏ தொழில்நுட்பமானது உளவு விமானங்களை கூட கண்டறியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டி-14 அர்மடா மெயின் பாட்டில் டான்ங்ஸ் :

டி-14 அர்மடா மெயின் பாட்டில் டான்ங்ஸ் :

டி-14 அர்மடா மெயின் பாட்டில் டான்ங்ஸ் (T-14 Armata Main Battle Tanks) - இது ரஷ்யாவின் வருங்கால அதிநவீன டாங்கி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுயவிவரம் :

சுயவிவரம் :

டி-14 வகை மிகவும் எடை குறைவானது மற்றும் குழப்பம் தராத குறைந்த அளவிலான சுயவிவரத்தை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கவசம் :

கவசம் :

தானியங்கி டாங்கியான இது மேம்பட்ட புதிய கவசம் மூலம் பாதுகாக்கப்படுகிறது, உடன் மிகவும் துல்லியமாக தாக்கும் குண்டுகளை தாங்கி செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செயற்கை நுண்ணறிவு :

செயற்கை நுண்ணறிவு :

பாதிக்கு மேல் தானாக இயங்கும் இந்த டி-14 வகை டாங்கியானது, ஆயுத வாகனங்களில் செயற்கை நுண்ணறிவு (semi-autonomous artificial-intelligence) செலுத்தும் புரட்சியின் ஆரம்பம் என்றும் கூறப்படுகிறது.

திட்டம் :

திட்டம் :

சுமார் 2300 டி-14 வகை டாங்கிகளை வாங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாஸேன் அட்டாக் சப்மெரின்ஸ் :

யாஸேன் அட்டாக் சப்மெரின்ஸ் :

யாஸேன் அட்டாக் சப்மெரின்ஸ் (Yassen Attack Submarines) - இதுவும் ரஷ்யாவின் வருங்கால அதிநவீன நீர்மூழ்கி கப்பல் ஆகும்.

மேற்கத்திய கப்பல் படை :

மேற்கத்திய கப்பல் படை :

நீர்மூழ்கிகளுக்கு எதிரான போர் தந்திரங்கள் மற்றும் போர் முறைகள் ஆகியவைகள் வழக்கில் இல்லாத ஒன்றாகவே மேற்கத்திய கப்பல் படை நம்பிக் கொண்டிருந்தது.

உஷார் :

உஷார் :

ஆனால், அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு திரியும் ரஷ்யா மற்றும் சீன நீர்மூழ்கி கப்பல்கள் மேற்கத்திய கப்பல் படையை உஷார் அடைய செய்துள்ளன.

கப்பல் ஏவுகணை :

கப்பல் ஏவுகணை :

யாஸேன் வகை போர் கப்பல்களோ, கப்பல் ஏவுகணைகளை (cruise-missile) தாங்கி செல்லும் படியாக மிகவும் அதிநவீன முறையில் வடிவமைக்கப்படுகிறது.

அச்சுறுத்தும் :

அச்சுறுத்தும் :

இது அறிமுகம் செய்யப்பட்ட பின் அமெரிக்க போர் விமான தாங்கி கப்பல்களை கூட யாஸேனின் அதிநவீனம் அச்சுறுத்தும் என்பது தான் நிதர்சனம்.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Russia most threatening hi tech weapons. Read more this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X