மொத்தம் 18 நாடுகளின் 38 செயற்கைகோள்கள்: விண்ணில் செலுத்தி வீடியோ வெளியிட்ட ரஷ்யா!

|

ஜெர்மனி, கனடா, சவூதி அரேபியா, இத்தாலி, பிரேசில், தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 18 நாடுகளின் செயற்கைகோள்களை ரஷ்யா விண்ணில் செலுத்தியுள்ளது.

ரஷ்யா சோயுஸ் ராக்கெட்

ரஷ்யா சோயுஸ் ராக்கெட்

கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து ரஷ்ய சோயுஸ் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. தொழில்நுட்ப சிக்கல் காரணமாக இந்த ஏவுதல் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. பின் 38 செயற்கைகோள்களை ஏற்றிச் சென்ற சோயுஸ் ராக்கெட் மேகமூட்டமான வானங்களுக்கு நடுவே ஏவப்படும் வீடியோவை ரோஸ்கோஸ்மோஸ் வெளியிட்டுள்ளது.பைக்கோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து 18 நாடுகளை சேர்ந்த 38 ஏவுகணைகள் உடனஅ சோயுஸ் 2.1 ஏ கேரியர் ராக்கெட் புறப்பட்டது என ரோஸ்கோஸ்மோஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

18 நாடுகளை சேர்ந்த 38 செயற்கைகோள்கள்

தென்கொரியா, ஜப்பான், கனடா, சவுதி அரேபியா, ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரேசில் உள்ளிட்ட 18 நாடுகளை சேர்ந்த 38 செயற்கைகோள்கள் இந்த ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோள்களில் துனிசியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு செயற்கைகோளும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்ககது. முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைகோளானது டெல்நெட் தொலைத்தொடர்பு குழு மூலம் உருவாக்கப்பட்டது. சோயுஸ் செயற்கைக்கோள்கள் புவிவட்டப் பாதையில் செலுத்தப்படும் வீடியோவை ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு ஏஜென்சி வெளியிட்டது.

இரண்டுமுறை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஏவப்பட்டது

இரண்டுமுறை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஏவப்பட்டது

சோயுஸ் ராக்கெட் மின்னழுத்த அதிகரிப்பு கண்டறியப்பட்டு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு ரஷ்யா விண்வெளித் துறையில் சர்வதேச போட்டியாளர்களைவிட பின்தங்கி இருந்தது. இதற்கிடையில் 2018 ஆம் ஆண்டில் ரஷ்யா விண்வெளி வீரர் மற்றும் நாசா விண்வெளி வீரரை ஏற்றிச் சென்ற சோயுஸ் ராக்கெட் பறக்கும்போது பாதியில் தோல்வி அடைந்தது. அவசரஅவசரமாக தரையிறக்கப்பட்டது இதில் இரண்டு விண்வெளி வீரர்களும் காயமின்றி உயிர் தப்பினர்.

இந்த நிலையில் 18 நாடுகளின் 38 செயற்கைகோள்களை ரஷ்யா விண்ணில் செலுத்தியுள்ளது. அதேபோல் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான பயணத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. முன்னதாக அமெரிக்கா, ரஷ்யா நாடுகள் நிலவில் மாதிரிகளை கொண்டு வந்தது.

சந்திர ஆராய்ச்சி நிலையம் உருவாக்கும் திட்டம்

சந்திர ஆராய்ச்சி நிலையம் உருவாக்கும் திட்டம்

சந்திர ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கும் திட்டங்களில் சீனாவும் ரஷ்யாவும் ஒத்துழைப்பில் ஈடுபட்டு வருகிறது. சீனா தேசிய விண்வெளி நிர்வாகம் மற்றும் ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டது. சீனாவும் ரஷ்யாவும் தற்போது சந்திரனில் ஒன்றாக ஒரு ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்க அதிகாரப்பூர்வமாக திட்டமிட்டுள்ளது. சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகத்தின் நிர்வாகி ஜாங் கெஜியன் மற்றும் ரஷ்யாவின் மாநில விண்வெளி கார்ப்பரேஷன் ரோஸ்கோஸ்மோஸின் பொது மேலாளர் டிமிட்ரி ரோகோசின் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

நிலவில் ஆய்வு மையம்

நிலவில் ஆய்வு மையம்

சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையம் என்பது நீண்ட கால விஞ்ஞான பரிசோதனை தளமாகும். இதற்கான காலக்கெடு இன்னும் கூறவில்லை. மேலும் 2031 ஆம் ஆண்டுக்குள் சீனா நிலவில் தனது தளத்தை அமைக்க விரும்பவுதாக தகவல்கள் தெரிவிக்கிறது. சந்திர ஆராய்ச்சி நிலையம் திட்டமிடல், வடிவமைப்பு, செயல்பாடு என அனைத்திலும் ரஷ்யா மற்றும் சீனா இணைந்து கூட்டணியுடன் பணியாற்ற திட்டமிட்டு இருக்கிறது. சந்திரனின் மேற்பரப்பில், சுற்றுப்பாதையில் அல்லது இரண்டிலும் விண்வெளி ஆய்வு மையங்களை அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Russia Launches 38 Satellites from 18 Countries with Soyuz Rocket

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X