ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற மாட்டோம்-ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்: திடீரென புதிய முடிவு எடுத்த ரஷ்யா.!
உக்ரைனில் கடந்த மாதம் இறுதியில் துவங்கிய ரஷ்யப் படையினரின் ஆக்கிரமிப்பு போரானது, இதுவரை நிலையான முடிவுகள் ஏதும் எட்டப்படாமல் 4 வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளும் 4 முறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் இருதரப்பிலிருந்து ஆக்கப்பூர்வ முடிவுகள் எடுக்கப்படவில்லை.

குறிப்பாக உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும் என ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்ற உத்தவிட்டிருந்து,ரஷ்யா அதனை கண்டுகொள்ளவில்லை.மேலும் கடந்த வாரம் இறுதியில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புதினுடன் பேச்சுவார்த்தைக்கு நான் தயார் என்று கூறினார். ஆனால் இந்தமுயற்சிகள் தோல்வியுற்றால், அது மூன்றாம் உலகப்போரு வழிவகுக்கும் என்று கூறியிருந்தார்.

அதேபோல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள காரணத்தால் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA-European Space Agency) எக்ஸோ மார்ஸ் திட்டத்தில்(Exo Mars mission) ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் என கடந்த மார்ச் 17-ம் தேதி தெரிவித்தது. இந்நிலையில் ரஷ்யா சொந்தமாக
செவ்வாய் கிரகத்திற்கான பயணத்தை துவங்கும் என்று அறிவித்திருக்கிறது.

அதாவது கடந்த மார்ச் 16 மற்றும் 17-ம் தேதிகளில் பாரிஸில் கூடிய ESA கவுன்சில், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள காரணத்தால் இந்த ஆண்டு ரஷ்யா உடன் சேர்ந்து ஏவப்படவுள்ள எக்ஸோ மார்ஸ் ரோவர் (Exo Mars mission) மிஷனில் ரஷ்யாவின் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது சாத்தியமற்றது எனத் தெரிவித்திருந்தது.

இதை தொடர்ந்து ரஷ்யாவின் விண்வெளி நிறுவனத்தின் (roscosmos) தலைவர் டிமிட்ரி ரோகோசின் மிக விரைவில் செவ்வாய் கிரகத்திற்கானப்பயணத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை தொடங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும் ராக்கெட் ஏவுதளம் மற்றும் தரையிறங்கும் மாதிரி (module) ஆகியவற்றைக் கொண்டிருந்த ரஷ்யா இல்லாமல் ESA என்ன செய்ய முடியும் என்பதில் பெரிய சந்தேகங்கள் உள்ளன, குறிப்பாக ESA-க்கு அதன் சொந்த மாதிரியை (module) உருவாக்க குறைந்தது ஆறு ஆண்டுகள் தேவைப்படும் என்று ரோகோசின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சமீபத்தில் ரஷ்யா உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யாவின் 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றிருக்கின்றனர். விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற 3 ரஷ்ய விண்வெளி வீரர்களையும் ஆய்வு மையத்தில் இருந்த நான்கு அமெரிக்க விண்வெளி வீரர்கள், ஒரு ஜெர்மனிய விண்வெளி வீரர்கள் மற்றும் 2 ரஷ்ய விண்வெளி வீரர்கள் வரவேற்றனர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்வெளி வீரர்கள் மஞ்சள் நிற உடை அணிந்திருந்தனர். விண்வெளி வீரர்கள் அணிந்திருந்த மஞ்சள் நிற உடை உக்ரைன் நாட்டு கொடியை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது. ரஷ்ய விண்வெளி ஏஜென்சியின் தலைவரால் வெளியிடப்பட்ட படங்கள் மூலம் நீல நிற டிரிம்மிங்ஸ் உடன் பிரகாசமான மஞ்சள் நிற உடைகளை விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற வீரர்கள் அணிந்திருக்கின்றனர். மூன்று ரஷ்ய விண்வெளி வீரர்களும் நீலம் மற்றும் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றனர்
என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications